Thursday 24 October 2013

நெட் பாஸ்டிங் .

ஒரு துக்க நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றதால் பதிவுகள் ஏதும் எழுத முடியவில்லை .
மிக மிக வருத்தம் தரக்கூடிய துக்க நிகழ்வு . ஒரு சாலை விபத்தில் ஒரு உறவினர்  இறந்துவிட்டார்.பாசமிக்க  பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கொண்ட குடும்பம் .மனதை மிகவும் உலுக்கிய சம்பவம் .

சுமார் 4 வருடங்கள் கழித்து நான் அங்கு செல்வதாலும்  மற்றும் சில  உறவினர்கள்  இல்லங்களுக்கும் சென்றதாலும்  ஐந்து நாட்களுக்கு நெட் பாஸ்டிங் .ஏனென்றால் நான் தங்கிய உறவினர் இல்லத்தில் இன்டர் நெட் வசதி கிடையாது.மேலும் எனக்கும் நெட் செண்டர் சென்று பார்க்கவும் இஷ்டமில்லை .

அதனால்தான்  யாருடைய பதிவிற்கும்  பின்னுட்டங்கள் இடவில்லை.

எனது வழக்கமான வேலைகளிலிருந்து ஒரு மாற்றம் .
கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உறவினர் வீட்டுக் குழந்தைகள் பள்ளி செல்ல படுத்தும் பாட்டைப் பார்த்ததும் என் குழந்தைகள் எல் கே ஜி யூ  கே ஜி செல்லும் போது செய்த  குறும்புகள்
நினைவுக்கு வந்தது.
இவற்றை எல்லாம் பற்றி விரிவான பதிவுகள்  விரைவில்.

12 comments:

  1. மிகவும் வருத்தமடைகிறேன்... உறவினர் குடும்ப நிலை விரைவில் அமைதி நிலவட்டும்...

    ReplyDelete
  2. விபத்தில் இறந்த உறவினரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

    பதிவு எழுதுவதும் பின்னூட்டங்களும் மீண்டும் தொடரட்டும்... நன்றி..

    ReplyDelete
  3. வருத்தப்படுகிறேன்.

    ReplyDelete
  4. ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  6. எதிர்பாரா விபத்தில் அகால மரணம் அடைந்த உங்கள் உறவினர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  7. உங்கள் உறவினரின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர் அந்த பிரிவுத் துயரத்திலிருந்து மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete