Saturday, 19 March 2016

காரியத்தில் கவனம் வைக்கும் மதுரை மக்கள்சென்ற வாரம் மதுரைக்குப் போயிருந்தேன் . அங்கங்கே "தமிழ் நாடு முழுவதும் வால் போஸ்டர் ஓட்ட அணுகவும் "என்று கீழே செல் போன் நம்பர் கொடுத்திருந்தார்கள் .
 இங்கே பிளாக்கிலும் வாட்ஸப்பிலும் மற்ற சமுக வலை தளங்களிலும்  நாலு காசுக்குப் பிரயோசனமில்லாமல் வால் போஸ்டர்களைப் பற்றி கிண்டல் அடித்துக் கொண்டிருக்கும் போது மதுரை மனிதர்கள் அதைத் தனது வருமானத்துக்கான வழியாக யோசிக்கும் அறிவை எண்ணி வியந்தேன் .
 மதுரைமக்கள்...... ம்ஹும் ...சான்சே இல்லை .காரியத்தில் கவனமான பேர்வழிகள்தான்.

Wednesday, 9 March 2016

மகளிர் தின சிறப்பு பதிவர்அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை காரணமாக பிளாக் பக்கம்வரவோ அல்லது மற்றவர்களின் பிளாக்கைப் படித்துவிட்டு காமெண்ட்போடவோ நேரம் இல்லை .மேலும் நெட்டில் உட்கார்ந்தால் மற்றவேலைகள் கெடுவதால் நெட் பக்கம் வருவதைத் தவிர்த்து வந்தேன் .
 இன்று மகளிர் தினம் .
மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

மகளிர் தினமான இன்று நான் வேலை பார்க்கும் இடத்துக்கும் மிகஅருகாமையில் வசிக்கும் ஒரு பெண் பதிவர் பற்றி எழுதுவது மிகவும்பொருத்தமாக இருக்கும் என்பதால் இன்று அவர் பற்றிய பதிவு.

நிறையப் பேருக்கு மிகவும் பரிச்சயமானவர்.அவருடன் நான் போனில் தான்இதுவரை பேசியுள்ளேன் . நேரில் பார்த்தது கிடையாது.

 போனிலேயே அவரின் பேச்சில் ஒரு தன்னம்பிக்கை இழையோடும் .
குழப்பமற்ற தெளிவான சிந்தனையால் மட்டுவே வரக்கூடிய லாஜிக்கான பேச்சு.. டீச்சர் வேலைக்குச் சென்றிருந்தால் இந்நேரம் "நல்லாசிரியர் விருது "வாங்கி இருப்பார். நஷ்டம் அந்த விருதுக்குத்தான்.

பல தடவை நிறைய நேரம் பேசியிருக்கிறேன் .இருவரும் சந்திக்கஎண்ணியும் இருவருமே அவரவர் வேலையில் பிசியாக இருந்ததால்சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஒரு வழியாக வியாழக் கிழமை என்று நினைக்கிறேன் .சந்தித்தோம்..
குரலில் தெரிந்த கம்பீரத்தால் அவரை ஒரு ஐந்தரை அடி உயரமான வாட்டசாட்டமான கிட்டத்தட்ட கிரண்  பேடி  மாதிரியான ஒரு மனுஷி போல ஒருஉருவம் தான் என் மனதில் அவரைப் பற்றி வரைந்து வைத்திருந்தேன்.

என் வேலை பகுதி நேர வேலை என்பதால் 12.30 அளவில் முடிந்துவிடும்.அன்று மாலை காலேஜு வேலை இல்லை என்பதால் அவர்கள் வீட்டுக்குவருவதாக முதல் நாளே பிளான் போட்டுவிட்டோம் .என்னை என்அலுவலகத்திலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாகக் கூறியிருந்தார். .நான் தலைக்கு மெஹந்தி போடுவதால் என்அடையாளத்தை அவரிடம் கூற அவர் மஞ்சள் நிற லெக்கிங்க்சுபோட்டுவருவதாகவும் தனது வண்டி நம்பரையும் சொல்லிவைத்திருந்தார்.

 நான் போன் பண்ணியதும் சொன்னபடியே வந்தார் . எனக்கு அவரைப்பார்த்ததும் ஒரே ஷாக் .
 திருக்குறள் போல இருந்தார் . நான் நினைத்துக் கொண்டிருந்தஉயரத்திற்கும் ஓர் ஒன்றரை அடியாவது குறைந்த உயரம்.நிஜமாகவேஅவர் திருக்குறள் தான் . ரெண்டே வரியில் நிறைய பொருள் பொதிந்தகுறள் போல அந்த ஒரு ஐந்தடி உயர உருவத்தில் ஒரு செல் நரம்புஇரத்தக்குழாய் விடாமல் தன்னம்பிக்கை .ஐந்தடி உயரத்தில் 500 கிலோதன்னம்பிக்கை .


 நிஜமாகவே ஒரு இனிமையான மனுஷி.

நம்பவில்லை என்றால் அவரின் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தால் தெரியும் .
கிட்டத்தட்ட 15 வருடங்களாக சர்க்கரை வியாதி இருக்கிறதாம்.

கவாஸ்கர் சுரீந்தர் அமர்நாத் இவர்களெல்லாம் முதல் டெஸ்ட்மேச்சிலேயே சதம் அடித்தார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . 
ஆனால் இவர் முதல் டெஸ்டிலே 400 ஆம் .
ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் கிரிக்கெட்டில் இவர் சர்க்கரை அளவில் .

 அவர்தான் நமது பெருமைக்குரிய பதிவர் கீதா.
அவரையே மகளிர் தின சிறப்பு பதிவர் ஆகத் தேர்வு செய்துள்ளேன்,
அவர் நீடுழி  வாழ வாழ்த்துகிறேன்.

Tuesday, 8 March 2016

மகளிர் தின சிறப்பு பதிவர்அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை காரணமாக பிளாக் பக்கம் வரவோ அல்லது மற்றவர்களின் பிளாக்கைப் படித்துவிட்டு காமெண்ட் போடவோ நேரம் இல்லை .மேலும் நெட்டில் உட்கார்ந்தால் மற்ற வேலைகள் கெடுவதால் நெட் பக்கம் வருவதைத் தவிர்த்து வந்தேன் .
 இன்று மகளிர் தினம் .
மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

மகளிர் தினமான இன்று நான் வேலை பார்க்கும் இடத்துக்கும் மிக அருகாமையில் வசிக்கும் ஒரு பெண் பதிவர் பற்றி எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இன்று அவர் பற்றிய பதிவு.

நிறையப் பேருக்கு மிகவும் பரிச்சயமானவர்.அவருடன் நான் போனில் தான் இதுவரை பேசியுள்ளேன் . நேரில் பார்த்தது கிடையாது.

 போனிலேயே அவரின் பேச்சில் ஒரு தன்னம்பிக்கை இழையோடும் .
குழப்பமற்ற தெளிவான சிந்தனையால் மட்டுவே வரக்கூடிய லாஜிக்கான பேச்சு.. டீச்சர் வேலைக்குச் சென்றிருந்தால் இந்நேரம் "நல்லாசிரியர் விருது "வாங்கி இருப்பார். நஷ்டம் அந்த விருதுக்குத்தான்.

பல தடவை நிறைய நேரம் பேசியிருக்கிறேன் .இருவரும் சந்திக்க எண்ணியும் இருவருமே அவரவர் வேலையில் பிசியாக இருந்ததால் சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஒரு வழியாக வியாழக் கிழமை என்று நினைக்கிறேன் .சந்தித்தோம்..
குரலில் தெரிந்த கம்பீரத்தால் அவரை ஒரு ஐந்தரை அடி உயரமான வாட்ட சாட்டமான கிட்டத்தட்ட கிரண்  பேடி  மாதிரியான ஒரு மனுஷி போல ஒரு உருவம் தான் என் மனதில் அவரைப் பற்றி வரைந்து வைத்திருந்தேன்.

என் வேலை பகுதி நேர வேலை என்பதால் 12.30 அளவில் முடிந்துவிடும் .அன்று மாலை காலேஜு வேலை இல்லை என்பதால் அவர்கள் வீட்டுக்கு வருவதாக முதல் நாளே பிளான் போட்டுவிட்டோம் .என்னை என் அலுவலகத்திலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். .நான் தலைக்கு மெஹந்தி போடுவதால் என் அடையாளத்தை அவரிடம் கூற அவர் மஞ்சள் நிற லெக்கிங்க்சுபோட்டு வருவதாகவும் தனது வண்டி நம்பரையும் சொல்லிவைத்திருந்தார்.

 நான் போன் பண்ணியதும் சொன்னபடியே வந்தார் . எனக்கு அவரைப் பார்த்ததும் ஒரே ஷாக் .
 திருக்குறள் போல இருந்தார் . நான் நினைத்துக் கொண்டிருந்த உயரத்திற்கும் ஓர் ஒன்றரை அடியாவது குறைந்த உயரம்.நிஜமாகவே அவர் திருக்குறள் தான் . ரெண்டே வரியில் நிறைய பொருள் பொதிந்த குறள் போல அந்த ஒரு ஐந்தடி உயர உருவத்தில் ஒரு செல் நரம்பு இரத்தக்குழாய் விடாமல் தன்னம்பிக்கை .ஐந்தடி உயரத்தில் 500 கிலோ தன்னம்பிக்கை .


 நிஜமாகவே ஒரு இனிமையான மனுஷி.

நம்பவில்லை என்றால் அவரின் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தால்  தெரியும் .
கிட்டத்தட்ட 15 வருடங்களாக சர்க்கரை வியாதி இருக்கிறதாம்.

கவாஸ்கர் சுரீந்தர் அமர்நாத் இவர்களெல்லாம் முதல் டெஸ்ட் மேச்சிலேயே சதம் அடித்தார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்
ஆனால் இவர் முதல் டெஸ்டிலே 400 ஆம் .
ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் கிரிக்கெட்டில் இவர் சர்க்கரை அளவில் .

 அவர்தான் நமது பெருமைக்குரிய பதிவர் கீதா.
அவரையே மகளிர் தின சிறப்பு பதிவர் ஆகத் தேர்வு செய்துள்ளேன்,
அவர் நீடுழி  வாழ வாழ்த்துகிறேன்.