Friday, 18 October 2013

அம்மாவின் நினைவு தினம்

இன்று அம்மாவின்  நினைவு தினம் .
எல்லோருக்கும் அவங்க அவங்க அம்மா ஸ்பெஷல்தான் .
ஆனால் நான் எங்க அம்மாவைப்பத்தி ஒரு ஸ்பெஷல்+(பிளஸ் )ஆக நினைப்பது உண்டு.
பல காரணங்கள் இருந்தாலும் என் அம்மா வின் மரணம் சம்பந்தப்பட்ட ஒரு சிலநிகழ்வுகளை  நான் ஒரு Coincident ஆ  அல்லது Pre determinedஆ
  என்ற கோணங்களில் ஆராய்ந்து பார்ப்பதும் உண்டு.
என் முதல் மகனின்  டெலிவரிக்கு என்று எனக்கு ஒத்தாசைக்கு வந்த இடத்தில்  (வட இந்தியாவில் )திடீரென்று மாரடைப்பு வந்து சரியாகி பின் ஒரு நாலு நாள் நன்றாக இருந்து   பின் கடைசியாக ஆசுபத்திரிக்கு கூட்டிக்கொண்டு போகும் வழியிலேயே  எட்டு மாத கர்ப்பிணியான என் நெஞ்சில் சாய்ந்தபடியே    இறந்தார்கள் .
என் நெஞ்சில் அம்மா  சாய்ந்த அந்த உணர்வை  பல வருடம் ஆகியும் ஏதோ நேற்றுதான் நடந்த மாதிரி  என்னால் உடல் உணர்வாலும் மனதாலும்  இன்றும் உணரமுடிகிறது .
கூட இருந்தது நானும் என் கணவரும் மட்டுமே .
என் அப்பா மற்றும் சகோதர பந்தங்கள்  அடுத்த நாள்தான்  சென்னையிலிருந்து  வரமுடிந்தது.

 என் வாழ்க்கையிலேயே முதல் முதலில் ஒரு  இறந்தவர் உடன் அருகில் இருந்து
 ( அதற்கு முன் நான் இறந்த நிகழ்வுகளுக்கு
 போனதே இல்லை )எல்லாவற்றையும் நானே கவனித்தது என்றால் என் அம்மாவின் மரணம்தான்.
மேலும் என் அம்மா தன் அண்ணன் ஒருவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள் . அவர்  அம்மா இறப்பதற்கு ஒரு 12 வருடம்  முன்பே இறந்து விட்டார் .இங்கு சென்னையில் அவருக்கு திவசம் குடுக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும் போது இந்த சேதி போனதும் அப்படியே நிறுத்திவிட்டார்கள் .
அதே நாளில்  (திதியில் ) என் அம்மா வின் அப்பாவின் (தாத்தா  )  இறந்த நாளும் .
அது போல என் அம்மா இறந்த நாள்  ஆங்கில தேதிப்படி என் பிறந்த நாளும் என் கல்யாண நாளும் ஆகும்.( அந்த வருடம் )..
எனக்குள்  நானே  பல முறை கேட்டுக்கொள்ளும் கேள்வி
 இது  Coincident ஆ  அல்லது Pre determinedஆ?

எனக்கு என்று மூளையுடன் ஏதாவது இன்றெல்லாம் நான் செய்துகொண்டு இருக்கிறேன் என்றால் அதற்கு என் பெற்றோர்கள் ,அதிலும் என் அம்மா என்னை ஸ்கூலுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே நிறைய  சொல்லிக்கொடுத்தார்கள்.தமிழ் புலவர்  படிப்பு படித்தவர்கள்.
ஹைஸ்கூல் வரை படித்தவர்கள் என்பதால் ஆங்கில மொழியும் நன்கு தெரியும் .
ஆந்திராவில் தன் அண்ணன்  குடும்பத்துடன்  (அந்தக்காலத்தில் ஆந்திரா தமிழ் நாடு எல்லாம் ஒன்றாக இருந்தது.) இருந்ததால் தெலுங்கு
 மொழியும் தெரியும்.
எம்பிராய்டரி ,குரோஷா  போன்ற வேலைகள் நன்கு பண்ணுவார்கள்
நான் வெளிமாநிலங்களில்  வங்கி  வேலைக்கு     போவதற்கு  மற்றவர்கள்  மறைமுக எதிர்ப்பு செய்தபோதும் தைரியமாக அத்தனை எதிர்ப்புகளையும் தூக்கி வீசி எறிந்து , என்னுடன் கூட தங்க வீடு வாடகைக்கு எடுத்து
 என் அப்பாவையும்    நாங்கள்  வீடு பார்த்து செட்டில் ஆன பின் எங்க  கூட வந்து தங்கவைத்து  என் லட்சியத்தை அடைய உதவிய தெய்வம் .


எப்பவுமே எங்க அம்மா  அடிக்கடி  தன்  கடைசிக் காலத்தில் என்னுடன்தான்  இருக்காபோவதாக எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள் . அதனால்தான் Pre determined டோ  என்றேன்
.அதுபோலவே  கடைசி தருணங்கள் மட்டுமின்றி
 இறந்தபின் அம்மா   அந்த ஸ்தூல சரீரமாக மட்டுமே
இருந்தபோதும் நான்தான் நிறைய நேரம்  அம்மா கூட   இருந்தேன்.      

அம்மா நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஆன்மா அமைதியுற
 பிரார்த்திக்கிறோம்  .



.

11 comments:

  1. அவர் இன்றும் என்றும் உங்கள் மனதில் வாழ்கிறார்...

    ReplyDelete
  2. அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான் ....உங்களின் உணர்வுகளின் உள்ளே உறங்கிய வண்ணம் எப்போதும்.....

    ReplyDelete
  3. உருக்கமான நிகழ்வு.

    ReplyDelete
  4. கமென்ட் மாடரேஷன் இருந்தால் அப்போதாவது கமென்ட்டைப் படிக்க வாய்ப்பு இருக்கும். இல்லாவிடில் கமென்ட்டை படிக்காமலே விட்டு விடும் வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
  5. அம்மாவின் நினைவுகளை மிகவும் உருக்குமாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  6. உங்கள் அம்மாவைப்போல இருக்கும் யாரோ ஒரு தாய்க்கு உதவி செய்யுங்கள்..அதுதான் நீங்கள் அவருக்கு செய்யும் உதவி...

    ReplyDelete
  7. நன்றி,முப்பது பேர் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு மதிய உணவோ அல்லது காலை உணவோ என் தாயாரின் நினைவு தினத்திற்கும் தந்தையாரின்
    நினைவு தினத்திற்கும் அளித்துவருகிறேன்.

    ReplyDelete