நான் என் பணி நிமித்தமாக
டெல்லி சென்றபோது என்னை அழைத்துச் சென்று
வழிகாட்ட மற்றும் வீடு பிடிக்க
என பல விதத்திலும் எனக்கு
உதவியது எங்களது
குடும்ப நண்பரின் மகன் . கூட அவரின்
நண்பன் ஒரு தமிழ் பேசும்
இளைஞன் வந்திருந்தான்.
இருவரும் ஏதோ டிஃ
பென்சு அலுவலகத்தில் வேலை
செய்துகொண்டிருந்தார்கள்
.
அவர்கள் இருவரும் ஒரு தென்னிந்திய
மாமி ஒருவரின் வீட்டில் பேயிங் கெஸ்டு போல
தங்கி இருந்தார்கள்.
அந்த மாமி எங்களை அவசியம்
தன் வீட்டிற்குக் கூட்டி
வருமாறும் தான் எல்லா உதவியும்
செய்வதாகவும் சொன்னதால் என்னையும்
என் அம்மாவையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்கள்
.
எங்க அம்மாவுக்கு என்னைப் பத்தி நல்லாவே
தெரியுமாதலால் முன் கூட்டியே என்னிடம் நமக்கு காரியம் ஆகணும் எனவே காமெடி எதுவும் பண்ணாதே
என்று எச்சரித்து இருந்தார்கள்
அந்த மாமி மிகவும் நல்ல
மாதிரி ,
பிறருக்கு உதவும் பரோபகார எண்ணம்
ரொம்பவே உண்டு .
ஆனால் என்ன தில்லியே தன் கையில்தான் என்பது
போல பேசினார்கள்.
அப்போது
பிரதம மந்திரியாக இருந்த திருமதி இந்திரா
காந்திக்கு கூட தான் தான்
நல்ல நாள் பார்த்து வேறு ஒருவர் மூலம்
சொன்னேன் என்று எல்லாம் சொன்னார்கள்
டெல்லியின்
சரித்திர ,பூகோள ,அரசியல் ,உணவு
,பால் கோதுமை
மற்றும் உடை .இவற்றைப்
பற்றியெல்லாம் ஒரு மணி
நேரம் விலாவாரியாக எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்துக்கொண்டு அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள் .
மாமி அப்பப்போ நடுவிலே வரும் டி
.வி. விளம்பரம் மாதிரி
புரியுதா புரியலேன்னாக்க தாராளமா
கேள்வி கேளுங்க என்று எங்களை
உசுப்பி விட்டுக்கொண்டிருந்தார்கள்
என்னடா
இது மாமியே பேசிக்கொண்டிருக்கிறார்களே
நாமும்
ஏதாவது
பேசுவோம் இல்லாங்காட்டி மாமி பேச்சு டீச்சர்
கிளாஸ் எடுக்கிற மாதிரி இருக்குதே என்று
ஏதாவது கேள்வி கேட்க சான்ஸ்
வராதான்னு காத்திருந்தேன்.
என் அம்மாவோ அல்லது அந்த
பையன்களோ கேள்வி எந்த நிலையிலும்
கேட்கத் தயாரில்லை என்று தீர்மானித்த முக
பாவனையுடன் இருந்தனர்.
அந்த சமயம் பாத்து மாமியும்
நாங்களெல்லாம்
மெட்ராசை விட்டு தள்ளி இருந்தாலும்
எது செய்யறதா இருந்தாலும் நல்ல நாள் முகூர்த்த
நாள் பாத்து தான் செய்வோம்
.
உதாரணத்துக்கு இப்போ பாருங்க ,கோடைக் காலத்திலே நாங்க எல்லாரும்
மொட்டை மாடியிலே போய்த்தான் படுப்போம்.
அது கூட "சும்மா ஏதோ ஒரு
நாள்" ன்னு இல்லாம அஷ்டமி நவமி
,பரணி கார்த்திகை எல்லாம் பாத்துதான் போவோம் “ன்னாக்க
பாத்துக்குங்களேன் .என்றார்.
அவரின்
கெட்ட காலமோ அல்லது என்
நுனிப்புல் ஞானமோ என் நாக்கில்
சனி பூந்து சமயம்
பாத்து சூப்பர் ஸ்பீடில் போய்க்
கொண்டிருந்த மாமியின் பேச்சில் ஒரு ஸ்பீடு
பிரேக்கர் மாதிரி என்னை
ஒரு இடக்கு மடக்கான கேள்விகேட்க
வைத்தது .
" அதுமாதிரி கோடை முடிந்து மறுபடியும்
வீட்டுக்குள்ளே வந்து படுக்கவும் நல்ல
நாள் பாப்பிங்களா?" என்று அப்பாவித்தனமாக கேட்க
மாமியால் என் போட்டுத்தாக்கு டைப்
கேள்வியை எதிர் கொள்ளமுடியாமல் ஒரு
நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டார்கள் .
எங்க அம்மா தேவை இல்லாத
வெட்டிக்கேள்வி ஏன் என்று கண்ணால்
என்னை ஒரு முறை முறைத்தார்கள்
.
அந்த மாமி சொன்ன
பதில் என்ன தெரியுமோ?
அதுக்கு நாளெல்லாம் பாக்க முடியாது .
மழை வந்தால் பாயைச் சுருட்டிக்கொண்டு உள்ளே வந்துடணும்.
என் குடும்ப நண்பரின் மகனும்
அவன் நண்பனும் சிரிப்பை அடக்கமுயன்று விட்டதைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்
.
search
யோகம்!
TwitterFacebookGoogle PlusLinkedInRSS FeedEmail
HOME
PRIVACY POLICY
GUEST POST
HOME
சித்தர் பாடல்கள் »
யோகம்
யோகாசனம்
தியானம்
மந்திரங்கள் »
கீதை »
நண்பர்களின் பகிர்வுகள் »
ஸ்ரீ கணேசபுஜங்கம்
7:37 PM பி
போட்டீங்களே ஒரு போடு!
ReplyDeleteபிரமாதம். அந்த மாமியின் பதில் அதைவிட பிரமாதம்.
ReplyDeleteஆகா
ReplyDeleteசாதாரன விஷயத்தையும் நல்ல காமடியா சொல்றீங்க! வாழ்த்துக்கள்.
ReplyDeleteநெறையா பார்ட் இருக்கோ..ஓகே ஓகே சொல்லிட்டே இருங்க சிரிச்சிட்டே இருக்கோம்.
ReplyDeleteஹஹா...
ReplyDelete