தாசில்தார் உத்தியோகம் என்பது ஒருகாலத்தில் பட்டி தொட்டி பட்டணம் எல்லாம் ரொம்ப மதிப்பாகப் பேசப்பட்டது.இந்தக் காலத்தில் ஐ.டி கம்பெனிகளும் அம்பானிகளும் வந்தபின் பட்டணங்களில் பெரிய அளவில் பேசப்படுவதில்லை என்றாலும் மொ ஃ பசலில் தாசில்தார் உத்தியோகத்தின் மவுசு அவ்வளவாகக் குறையவில்லை . (பல வெரைட்டி யான சர்டிபிகேட்டும் வாரி வழங்கும் சூப்பர் மார்கெட்டு அந்த தாசில்தார் உத்தியோகம் )
ஒரு பழமொழி கூட உண்டு . தான் விதியை தானே நொந்துக்கும்போது "ஆசை இருக்கு தாசில் பண்ண அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க " என்று சொல்வார்கள்.
. இந்த தலைப்பில் ஒரு நாடகம் கூட வந்த ஞாபகம் .
அதே போல் வீட்டில் ஏதாவது வேலை சொல்லி நாம் பிசியால் ( சாக்கு போக்கு சொல்லி )செய்யாமல் இருந்தால் "ஆமா பெரிய தாசில் உத்தியோகம் தட்டுகேட்டு போவுது ,ஒழிசல் பேர்வழி என்று குடைச்சல் குடுப்பார்கள்.
இப்பொழுதெல்லாம் தாசில்தார் உத்தியோகம் பற்றி அவ்வளவாக யாரும் பேசுவதில்லை . ஆனால் நான் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு பழமொழி " தாசில்தாருக்குத்தான் தாசில் வேலை போச்சு சமையல்காரனுக்கு சமையல் வேலை போகலையே !" என்பேன் .
இந்தப் பழமொழி யின் பின்னே ஒரு சுவாரசியமான கதை உண்டு.
ஒரு ஊரில் ஒரு தாசில்தார் இருந்தார் . அவருக்குக் கல்யாணம் ஆகலை .அவர்கிட்டே ஒரு சமையல்காரர் இருந்தார் . தினம் தாசில்தாருக்கு சாம்பார் ,ரசம் ,கூட்டு ,பொரியல்,அப்பளம் வடை இனிப்பு என்று ஒரு ஐட்டத்தில் கூட குறை வைக்காமல் ருசியாக பார்த்து பார்த்து சமையல் செய்து போட்டார்.
ஒரு நாள் தாசில்தார் ரிட்டயர் ஆகிட்டார் .அவருக்கு சம்பளம் குறைந்ததும் ரொம்ப கவலை வந்துவிட்டது.
அதனால் சமையல்காரரிடம் இனிமே நாளைலேருந்து சாம்பார் இல்லாட்டி ரசம் ஏதாச்சும் ஒண்ணு போதும்.அதே மாதிரி கூட்டு பொரியல் ரெண்டும் வேணாம்.ஏதாவது ஒண்ணே போதும்.இனிப்பு வெள்ளிக்கிழமை மட்டும் செஞ்சா போதும். மத்தபடி அப்பளம் ஞாயித்துக்கிழமை மட்டும் போதும்.எல்லாம் விவரமா விளக்கமா சொல்லிட்டார்.
ஒருமாசம் கழித்து கணக்கு பாத்தா சாப்பாட்டு செலவு ஒண்ணும் கணிசமா குறையவில்லை .
தாசில்தார் தலையிலே ஏகப்பட்ட இடியாப்பம் .
குழம்பிட்டார் .
சரி சமையக்காரர் கிட்டே விவாதிக்கலாம் என்று போனால் தாசில்தாருக்கு ஒரே ஷாக் !
சமையக்காரர் தலை வாழை இலையில் சாம்பார் ,ரசம் ,கூட்டு ,பொரியல்,அப்பளம் வடை இனிப்பு என்ற சகல ஐட்டங்களுடன்
குறை ஒன்றும் இல்லை என்று சப்பு கொட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் .
தாசில்தார் சமையக்காரர் கிட்டே
" என்ன சமையல்காரரே , நான் சிக்கனமாக இருக்கனுமின்னு ஐட்டமெல்லாம் குறைச்சுட்டு சாப்பிட்டுகிட்டு இருக்கேன் நீங்க பாட்டுக்கு கல்யாண விருந்து மாதிரி ஜமாய்ச்சுகிட்டு இருக்கீங்க? ."
சமையல்காரர் சம்பிரதாயப்படி சாரி பூரி எல்லாம் சொல்லலை .
கொஞ்சம் கூட அலட்டிக்காம செம கூலாக
"சார் !தாசில்தாருக்குத்தான் தாசில் வேலை போச்சு , சம்பளம் குறைஞ்சு போச்சு அவர் சாப்பாட்டை குறைச்சுகிறது நியாயம் . சமையல்காரருக்கு அவர் வேலையும் சம்பளமும் அப்படியே இருக்கும்போது அவர் ஏன் சாப்பாட்டை குறைச்சுக்கணும்?"
தாசில்தார் வாயே திறக்கலை .
என்னை யாராவது சம்பந்தா சம்பந்தமில்லாமல் என் அடிப்படை சௌகரியத்தை குறைச்சுக்கோ ,என்றால் நான் எப்போதும் தாசில்தாருக்குத்தான் தாசில் வே
லை போச்சு சமையல்காரனுக்கு சமையல் வேலை போகலையே !" என்பேன் .
இதே மாதிரி காரியம் முடிஞ்சதும் என்னை டீலில் விட்டு விட்டு கழண்டுக்கும்
பேர்களையும் பார்த்து என்னை கிணறு இன்ஸுபெக்டு பண்ண போன தாசில்தார் மாதிரி விட்டுட்டீங்களே என்பேன்.
இதற்கும் பின்புலத்தில் ஒரு காமெடி கதை இருக்கு .
ஒரு படு நேர்மையான தாசில்தார். அவர் வேலை பார்த்த ஊரிலெ கிணறு வெட்டிகிட்டு இருந்தாங்களாம் . இவரு அந்த வேலை எப்படி நடக்குதுன்னு பாக்க கிணத்துக்குள்ளே இறங்கி பாத்துக்கிட்டே இருக்கார்.கிணற்றின் மேலே அவரின் கீழ் வேலை பார்ப்பவர்கள் ஒரு கயிறு கொண்டு அவரைப் பிடித்துகொண்டு இருக்கிறார்கள் . வெளியே ஏதோ சத்தம் கேக்குது .தாசில்தாருக்கு என்ன நடக்குதுன்னே புரியலே .
"திடும்"னு பிடிச்சுக்கிட்டிருந்த கயிறை அப்படியே விட்டுட்டு ஓடிட்டாங்க .
கீழே விழுந்த தாசில்தாரை அப்புறமா அந்த பக்கம் வந்த அந்த ஊர் ஆள் ஒருத்தர் காப்பாத்தினாரம் .
"ஏன் கயிறை வுட்டுட்டு ஓடிட்டீங்க" ன்னு அவரின் கீழ் வேலை பார்ப்பவர்களைக் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்.
"புது தாசில்தார் சார்ஜு எடுக்க வந்துட்டார் ன்னு கேள்விப்பட்டோம் .அதான் அவரை வரவேற்க ஓடிட்டோம் ."
தாசில்தார் உத்தியோக நிலைமையை பார்த்தீங்களா ?

சுவாரசியமான... காமெடி... கதைகள் - சிரமம் தான்...!
ReplyDeleteநன்றி
Deleteஅருமையான கதைகள்
ReplyDeleteநன்றி
ReplyDeleteஇரண்டு பழமொழிகளும் கதை விளக்கங்களும் அருமை..தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteநன்றி
Deleteநல்ல காமடி
ReplyDeleteTyped with Panini Keypad
அருமையான கதைகள்....
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தெரிவித்தமைக்கு நன்றி
Deleteபுது தாசில்தார் வந்துவிட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் எழுதியிருப்பது சுவையான விஷயம்.
ReplyDelete