ஒரு கம்பெனி வேலை விஷயமாக இரண்டு நாட்கள் பணி செய்தபோது மதிய உணவு இரண்டு நாளுமே ஆடம்பரமான ஹோட்டலில்தான் .
அதாவது விலை அதிகமாக உள்ள ஹோட்டலில்.
பொதுவாக வீட்டில் நான் மிகவும் குறைவாகவே சாப்பிடும் ரகம் .
உடம்பு குண்டாகிவிட்டால் எனது அத்தனை உடைகளையும் சைஸு பெரிதாக்க வேண்டும் (இது செய்ய என் உடம்பு வளையாது )
அல்லது புது உடை வாங்கணும் . ( இது செய்ய பணம் அதிகம் செலவாகும் . கட்டுப்படியாகாது).
எனவே என் சொந்த செலவில் சூன்யம் ( ஹோட்டல்களில் சாப்பிடுவது ) வைத்துக் கொள்வது கிடையாது.
ஆனால் இது மாதிரி ஓசியில் உணவு என்றால் கொஞ்சம் நன்றாகவே எண்ணை பதார்த்தங்களை தவிர மற்றவற்றை ஒரு கை பார்ப்பேன் .
சென்ற இரண்டு நாட்களும் அது மாதிரித்தான் .
இரவு உணவை அறவே உண்ணவில்லை .
மேட்டர் அது இல்லை .
எத்தனை பேரு பாவம் சொந்த காசு போட்டு சாப்பாடு சாப்பிட்டு போட்டோ எல்லாம் புடிச்சு என்ன அம்சமா பதிவு போடறாங்க ,ஐயய்யோ நம்ம ஒரு அருமையான சான்சை கையை வுட்டு நழுவ விட்டுட்டோமே அப்படின்னு தான் ஃ பீலிங்கு வுட்டுக்கிட்டு இருக்கேன் .
இத்தனைக்கும் கையிலே காமிரா போன் இருந்துச்சு .
என்னவோ வேலை நெனப்புலே (உண்மையை சொல்லன்னும்னாக்க சாப்பாட்டு நெனப்புலே ) நாமளும் ஒரு பதிவர் ஆயிட்டோம் என்கிற விஷயமே மறந்து போய்விட்டது .
காலை எழுந்தவுடன் பதிவு என்பதுபோல் தினம் பதிவு போடும் நெடு நாள் பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
நான் எப்போதுமே செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் (?......?) ரகம் என்பதால்தான் இப்படி ஆச்சு என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன் .
ஆனால் ஓன்று மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன் .
இனி எங்கு போனாலும் காமெராவில் படம் எடுத்துவிடுவது என்று .
சரி சாப்பாட்டு விஷயத்துக்கு வருவோம் .
முதல் நாள் சியோல் ரெஸ்டாரன்ட் போனோம் .அங்கு முள்ளங்கி கிம்ச்சியும்
வெஜிடபிள் பிரைடு ரைசும் வேறே ஏதோ வெஜிடபிள் சமாச்சாரங்கள் சாப்பிட்டேன் . கோவைக்காய் மாதிரி ஒரு காய் பச்சையாக ( வேகவைக்காத மாதிரி டைப்பு உப்பா புளிப்பா இருந்திச்சு .அப்புறம் டம்பிளிங் மாதிரி ஒரு ஐட்டம் .அது அவ்வளவு நல்ல இல்லே .ஐஸ்கிரீம் சூப்பராக இருந்தது.
அடுத்த நாள் சிறுசேரி அருகே உள்ள ஏஷியானா ஹோட்டலில். மதிய உணவு.
ப ஃ பே உணவு .
முதலில் மஷ்ரூம் சூப்பு .
பிறகு குட்டி உளுந்து போண்டா , புதினா சட்னி
கீரை ( ரொம்பவே சூப்பர் )
தால்.,பனீர் ஃ பிரை.கத்திரிக்கா சாம்ரோட்,பொட்டடோ ஃ பிரை (சுமார்தான்)கிட்டத்தட்ட ஒரு பதினைந்து விதமான காய்கறிகள் .எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்டு (டேஸ்டு ?)
பண்ணினேன் .
அப்புறம் ஒரு குட்டி கேக் சைசில் ஒரு பன் வெண்ணையுடன் .
பச்சை காய்கறிகளில் சாம்பிளுக்கு என்ன இருந்ததோ அதில் எல்லாம் ஒரு ஒரு துண்டு.
வெஜிடபிள் பிரைடு ரைசு ஒரு கரண்டி மட்டுமே சாப்பிட முடிந்தது.
ரோட்டி ,நாண் சாப்பிடவில்லை .
நாக்கு சாப்பிடு என்று சொன்னாலும் வயிறு " stomach ஃ புல் " போர்டு மாட்டிருச்சு .
இனிப்பு வகையறாவில் இதுவரை சாப்பிடாத ஐட்டம் ரெண்டு மட்டும் .
பேர் மறந்துவிட்டது
(பேர் எல்லாம் எழுதியிருந்தார்கள் , எனக்குதான் வேலை பற்றிய கடமை ........ ஒகே ஓகே புரிந்தால் சரி)
கிரிணிப்பழம்.,பைனாப்பிள் ,தர்பூஸ் எல்லாவற்றிலும் தலா மூன்று துண்டுகள் .
ஜூஸ் ஒரு கிளாசு .
ஐஸ் கிரீம் வேணுமான்னு கேட்டார்கள் .
டீ., காஃ பி வேணுமான்னு கேட்டார்கள் .
வருத்தத்தில் மனசு நொர்....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் . ( நொறுங்கும் சத்தம் ) .
உலகத்திலே என்னென்னவோ கண்டு பிடிக்கிறார்கள் .
(தேவைப்பட்ட போது )அதாவது இது மாதிரி நல்ல உணவு கிடைக்கும்போது
வயிறு சைஸு ஜாஸ்தி பண்ணிக்கிற மாதிரியும் ,சாப்பாட்டுக்கு வசதி இல்லாதபோது வயிறு சைஸு டொய்ங் ன்னு உள்ளே அமுங்கிறமாதிரியும் ஒரு வழி கண்டுபுடித்தால் மனித குலமே வாழ்த்துமே !

அடடா...! என்னவொரு சிரமம்...! ஹா... ஹா...
ReplyDeleteஹா ஹா ஹா.. சூப்பர்... அடுத்தமுறை எந்த ஹோட்டலுக்குப் போனாலும் படம் எடுக்கவும்... சுமாராக வந்தாலும் பரவாயில்லை.... ரசிக்க வைத்த பதிவு....
ReplyDeleteஅருமை.தங்களின் கவலை நியாயமானது
ReplyDeleteசொந்த செலவில் சூன்யம் ( ஹோட்டல்களில் சாப்பிடுவது ) வைத்துக் கொள்வது கிடையாது.//உண்மைதான் ஓட்டல் சாப்பாடு அப்படித்தான் உள்ளது
ReplyDelete//வயிறு சைஸு ஜாஸ்தி பண்ணிக்கிற மாதிரியும் ,சாப்பாட்டுக்கு வசதி இல்லாதபோது வயிறு சைஸு டொய்ங் ன்னு உள்ளே அமுங்கிறமாதிரியும் ஒரு வழி கண்டுபுடித்தால் மனித குலமே வாழ்த்துமே !// ரசித்த வரிகள்!
ReplyDeleteஆமாங்க. அவ்வையார் பாட்டு ஞாபகம் வருதுங்க.
ReplyDeleteபஃபே சாப்பாடுன்னாலே நாக்கில் ஜலம் வருவது இயற்கைதான்... தினம் வெறும் சோறு, குழம்பு, ஒரு கூட்டு என்று வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஒரே நேரத்தில் ஒன்பது வகை உணவு என்றால் கேட்க வேண்டுமா? சாப்பாட்டுக்கு கடைசியில புட்டிங், ஐஸ் க்ரீம் வேற.... சர்வீஸ்ல இருந்தப்போ அனுபவிச்சது..... இப்ப நினைச்சிப் பாக்கத்தான் முடியும்.... சான்ஸ் கிடைக்கறப்பவே அனுபவிச்சிருங்க.... அம்பது வயசாச்சின்னா முடியாது :)
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .
Deleteநான் பிரைவேட்டாக பார்க்கும் வேலை இது.
மேலும் நானும் ஐம்பது + தான் .
கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் சாப்பிடுவது வழக்கம்.
படுத்துக்கொண்டால் நமக்குத்தான் சிரமம் ,
மற்றவர்கள் ஜாலியாக மாட்ச்சோ மானாடு மயிலாடவோ அல்லது வெங்காயம் போட்ட சீரியலிலோ முழுகி முத்தெடுத்துக் கொண்டிருப்பார்கள் .
ஓசி சாப்பாடு கிடைத்ததை வேடிக்கையாக பகிர்ந்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
வணக்கம்!...
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில்
உங்கள் அறிமுகமும்... வாழ்த்துக்கள்!
நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteகடைசியில் சொல்லியுள்ள விஷயம் நியாயமானது....
ReplyDeleteஅடுத்த முறை புகைப்படத்துடன் பகிருங்கள்.