Tuesday, 17 May 2016

கியோமசாவின் அதிர்ஷ்டக் கிணறு

திரு சுப்புத் தாத்தா அவர்கள் ஜப்பானிய நாட்டின் சமயம் பற்றி எழுதுமாறு கேட்டதின் படி இதை எழு துகிறேன்.

அதற்கு முன் சமயம் ஆன்மிகம் இவற்றுடன் எனது ஈடுபாடு பற்றி சொல்லிவிடுகிறேன்

 சிறு வயதிலிருந்து இவைதான் கடவுள்கள் என்று எனக்குக் காண்பிக்கப் பட்ட தெய்வங்களை மட்டுமே நான் கும்பிட்டு வந்தேன் .

இங்கிருந்து வடக்கே போன பின் பளிங்குக் கற்களில் பள பள என இருந்த கடவுள்களைப் பார்த்தபின் அவைகளைக் கடவுளாக நினைக்க ,பக்தி வரக் கொஞ்சம் நாள் பிடித்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை 


 . தெற்கே வந்தபின் அதே மாதிரித்தான்.

 ஆபீசில் கூட வேலை பார்த்த மற்றவர்களால் சீக்கிய மதம் புத்த மதம் ஜைன மதம் போன்ற இவைகளிலும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.

 பிறகு மற்ற ஆசிய மொழியில் ஈடு பாடுவந்தபின் குவான் இன் தெய்வம் பற்றிக் கேள்விப் பட்டேன். ரெய்கி கொஞ்சம் படித்தேன்.


 ஆனால் தியானம் இன்னும் கை கூடவில்லை . (தியானத்தில் பிரஷர் குக்கர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது .


 எனவே யோகாவும் .... ம்ம் ... அதே தான். ) ;

 நடைப் பயிற்சி மட்டுமே 80% சக்சஸ் .

 குவான் இன் தேவியின் படத்தைக் காப்பி செய்து சிலருக்குக் கொடுத்தேன் அவர்கள் தனக்கு நல்ல விஷயங்கள் பல நடந்ததாகச் சொன்னார்கள் .

இப்பொழுதும் ஃ பேஸ் புக்கில் நிச்சிரென் புத்த மதம் என்கிற குழுமத்தில் உள்ளேன் "நம் ம்யொஹொரெங்கே கியோ " என்கிற மந்திரத்தை தனக்காக வேண்டி பிரார்த்திப்பவர்களுக்கு நானும் எழு தி ஒரு பத்து தடவை சொல்லுவேன்

. நிறையப் பேர் பிரார்த்தனைக்கு நன்றி என்று கூறுவார்கள் . எங்கோ முகம் தெரியாத ஒருவருக்குக் கஷ்டத்திற்கு நம்மால் முடிந்தது என்று செய்கிறேன்


.மற்ற படி தீவிர பக்தி என்றால் இல்லை .
 நான் வாக் போகும் போதேபிரார்த்தனையை முடித்துவிடுவேன்

சரி விஷயத்துக்கு வருவோம் .

 ஷிண்டோ ( ஜப்பானில் ஒரு மதம் ) மதத்தில் கியோ மசா கிணறு ஒன்று உள்ளது .அந்தக் கிணறு   தோக்கியோவில் மெய்ஜி ஜிங்கு என்ற இடத்தில் உள்ள கோயிலில் உள்ளது .

இது மிகவும் சக்தி வாய்ந்த கிணறாகக்  கருதப் படுகிறது. நிறைய நேர் மறை சக்தியினைத் தன் உள்ளே கொண்டுள்ள iஇடமாகக் கருதப் படுகிறது  (power spot  having abundant positive energy )


இந்தக் கிணற்றின் உள்ளே இருந்து வருடம் முழுக்க சுத்த மான நீர் கொப்புளித்து வருகிறது.இந்த நீரின் வெப்ப நிலையானது கிட்டத்தட்ட 15 டிகிரி ( கொஞ்சம் முன்னே பின்னே போகும் )அளவில் உள்ளது .ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் அளவு கொப்புளித்து வருவதாகக் கூறுகிறார்கள் .


 இந்தக் கிணற்றின் ஃ போட்டோவை எடுத்து நமது செல் ஃ போனில் ஸ்கிரீனில் வைத்துக் கொண்டால்அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம் .சொல்கிறார்கள் .
 இது பற்றி என்னுடன் பணி புரிந்த ஜப்பானிய நாட்டுத் தோழி அறிமுகம் செய்து வைத்தாள்.


கோயிலுக்கு வருபவர்கள் இந்தக் கிணற்றின் முன் நின்று ஃ போட்டோ எடுக்கக் க்யூவில் நிற்கிறார்கள் ஆனால் நான் இன்னும் வைத்துக் கொள்ளவில்லை . காரணம் நான் டௌன் லோடு செய்து அதை மெயின் ஸ்கிரீனில் வைத்துக் கொள்ளும் நகாசு வேலை செய்ய வராது என்று நினைப் பதினால் தான்

. தவிர மற்ற எல்லா தெய்வங்களின் படம் ஸ்லோகம் இவற்றை விட நான் இந்த க்யோமசா  கிணற்றின்  ஃ போட்டோ பற்றி எழுதக் காரணம் ஒன்று மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்தால் சந்தோஷம் ,

தவிர இதை செல் ஃ போனில் மேல் ஸ்கிரீனில் வைத்துக் கொள்வது செயற்கு எளிதென்பதால். 

Sunday, 1 May 2016

தமிழ் எழுத்துக்களில் நியுமராலஜி இல்லையா ? பொதுவாக டி .வி  பார்ப்பதில் அவ்வளவு இஷ்டம் இருப்பதில்லை .

  காமெடி சானல்கள்  மட்டுமே  பார்ப்பேன்

சில சமயம் தெலுகு இந்தி இவற்றில் உள்ள ஜோசியம்
எண் கணிதம், பரிகாரம்   
போன்றவற்றையும் பார்ப்பேன் .

  என்னதான் சொல்லுகிறார்கள்  என்று பார்ப்பதற்காக .
அதில் நம்பிக்கை இல்லை .

நியுமராலஜி என்பது எனக்குத் தெரிந்த  வரை எல்லா மாநிலங்களிலும் 

ஒருவரின் பெயரை இங்கிலீஷில் எழுதி அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு

  ஒரு மதிப்பு  கொடுக்கிறார்கள்  .

பின் அவற்றின் கூட்டுத் தொகையைக் குறித்துக் கொள்கிறார்கள்.

. பிறகு அவரின் பிறந்த தேதி மாதம் வருடம் 

இவைகளைக் கூட்டி  வரும்  எண்ணும் பேரின் எண்ணும் 

ஒத்துப் போகிறதா என்று பார்க்கிறார்கள்.

 ஜப்பானியர்களும் தங்களது பிறந்த தேதியை  

( ஜப்பானியர்களின் வருடங்கள் அந்த அரசர் அரியணை ஏறும் நாளிலிருந்து கணக்கிடப் படும் . அவர்  இறக்கும் வரை அந்த அரசர் பெயரின் காலமாகக் கருதப்பட்டு 1,2 என்று கணக்கிடப் படும்

ஆங்கில வருடத்திற்கு மாற்றுகிறார்கள் .

 அதன் பிறகு அப்படியே கூட்டப் பட்டு  

அதைப் பத்துக்குள்  நம்மளை மாதிரி சுருக்கி 

அதுக்கு அவர்கள் பலன் சொல்கிறார்கள்

(நீ இப்படித்தான் யார் பேச்சும் கேக்க மாட்டே , அதாகப் பட்டது சுய சிந்தனையில் தான் எதையும் செய்வாய் என்பதன் பொருள் .... )

  கிட்டத்தட்ட நம்ம ஊர் நுயுமராலஜிஸ்ட்கள்  சொல்ற

அதே வார்த்தைகள் !

அதே தொனி!

 ஆனா அவங்க அதோட நிறுத்திக் கிட்டாங்க.
 பேர் பக்கம் போய்  வெளாட்டு வெச்சுக்கல .

 சீனர்கள் லோ  ஷு கிரிட்( lo  shu  grid )என்ற சார்ட் உபயோகிக்கிறார்கள் .
இங்கேயும் பேர் மாத்தற  விவகாரம் கிடையாது .

  1 லிருந்து 9 வரை உள்ள எண்களை நிலம் நீர் உலோகம் மரம் நெருப்பு என்ற ஐந்து விஷயங்களுக்குள்  ( 5 elements ) அடக்கி விடுகிறார்கள்.
(0வுக்கு மதிப்பு கிடையாது போல ). 
உதாரணமாக ;எண்கள் 2&5  நிலம்
7&6 உலோகம்
இது மாதிரி
இந்த ஐந்தும் ஒரு மனிதனின் பிறந்த எண்ணில் கிட்டத்தட்ட 
சமமாக ( balanced )இருந்தால் நல்லதாம்

சிலருக்கு நிலம் aspect  பலமாக இருந்தால் என்ன பலன் ,
நீர் aspect பலமாக இருந்தால் என்ன பலன்  
என்றெல்லாம் சொல்கிறார்கள் .

தவிரவும் வழக்கமான 1 முதல் 9 வரையிலான எண்களுக்குரிய  பலன்களும் உண்டு .

 நாம தான் நம்ம பேரை  இங்கிலீஷில் கன்வெர்ட் பண்ணி  ......... அப்புறம் மாச்சிங்    பேர் மாத்தற  விவகாரமெல்லாம் 


என்னோட சந்தேகமெல்லாம் ஏன் பேரை எல்லாரும் இந்தியாவில் 
இங்கிலீஷில் கன்வெர்ட் பண்ணி அதுக்கு வேல்யு  பார்க்கிறார்கள்  என்பதுதான்.

 தமிழ் இந்தி தெலுங்கு போன்ற மொழியில் உள்ள எழுத்துக்களுக்கு வேல்யு   கிடையாதா ?
இல்ல தமிழ் தெலுங்கு இந்தி யில்  யாருமே பேர் எழுத மாட்டாங்களா ?
 அல்லது 247 எழுத்துக் களுக்கும் மதிப்பு எண் கொடுப்பது சிரமமா?

 புரியவில்லை .

யாராவது ஹிந்தி பெங்காலி போன்ற இந்திய மொழி எழுத்துக்களுக்கு எண் 

மதிப்பு( Numerical value ) கொடுத்து நியூமராலஜி சொல்கிறார்களா ?

தெரிந்தால் சொல்லவும் .

இல்லாவிட்டால் இந்தியாவிலேயே முதன் முறையாக
 தமிழ் நியுமரலாஜி என்று ஆரம்பித்து patent வாங்கி விடலாமே !