Friday, 11 October 2013

வேலை செய்ய ஆரம்பித்த ஆட்டோ மீட்டர் வாழ்க !

ஆட்டோ  மீட்டர் என்ற ஒரு சாதனம் ஆட்டோ வில் இது வரை பொருத்தப்பட்டு இருந்தாலும் அது இது வரை ஆட்டோவின் ஒரு அலங்காரப் பொருளாகவே இருந்தது.
ஆட்டோ வின் உள்ளே ஒரு காலை வைத்தாலே 30 ரூபாய் என்று தான் கேட்பார்கள். ரெண்டு காலையும் வைத்தால் நமது சொத்தையே விற்றால்தான் ஆட்டோ சவாரி செய்யமுடியும் என்பது போல ஒரு ரேட்டு சொல்வார்கள் .

ஒரு முறை நான் ஆட்டோகாரரிடம்   அசோக் பில்லரிலிருந்து சென்ட்ரல் போக எவ்வளவு என்று கேட்டேன்
ரூபாய் 300/- என்றார் .
 என்னப்பா கடைசியில் பாங்கு  லோன் போட்டாத்தான் ஆட்டோவில்  ஏறமுடியும் போல  ரேட்டு சொல்றியே என்றேன்.
ஆட்டோக்காரரே  சிரித்துவிட்டார் .
இல்லம்மா , திரும்பி வரும்போது காலியாத்தானே வரணும் என்பார்கள் .

அது ஏன் அவர்கள் நாம் ஏறும்  அதே இடத்துக்கு திரும்ப வரணும்  என்ற லாஜிக் எனக்கு புரிவதே இல்லை .
இதே போல பஸ்,ரயில் ,விமானம் இவற்றில் இவர்கள் பயணம் செய்யும்போது டபிள் சார்ஜு வாங்கினால் ஒத்துக்கொள்வார்களா ?
வெட்டி விவாதங்களால் நாலு காசு நமக்குப் பிரயோசனம் இல்லை என்ற தெளிவு எனக்கு   உண்டு .
 அதனால்  ஆட்டோவில் ஏற ரொம்பவே யோசித்துதான் ஏறுவேன் .
தவிர்க்க முடியாத காரணம் இருந்தாலொழிய ஆட்டோவை  தவிர்ப்பேன் .

ஏனென்றால்  உதாரணமாக   2004ம் வருடத்தில் கும்பகோணத்திலிருந்து
 சென்னை வர ரூபாய் 90 லிருந்து 140 ரூபாய்  பஸ்ஸை பொறுத்து மாறும் .ஆனால் கிண்டி கத்திபாரவிலிருந்து கே.கே,நகர் வர ரூபாய் 100 ஆகும்.
ரொம்ப வேடிக்கை யாக இருக்கும். (வேதனை? )

இப்பொழுது அங்கங்கே
"உங்கள்  வழிப் பயணச்  செலவு
எங்கள் வாழ்க்கைச் செலவு "
என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அதையே நாம் பயணிகள்  சொல்வது மாதிரி  திருப்பிப் போட்டுப் படித்துப் பாருங்கள் .

"உங்கள் வாழ்க்கைச் செலவு
எங்கள் பயணச் செலவு "

இதுதான் உண்மை  நிலையாக இருந்தது.

 ஆனால் இப்போது நிலைமை பரவாயில்லை .
அண்ணா பல்கலைக்கழகம்  (கிண்டி) யிலிருந்து அசோக் பில்லர் வர 150/- ரூபாய் கொடுத்து வந்த நான் இப்போது ரூபாய் 75லிருந்து ரூபாய் 85 வரை  கொடுத்து வருகிறேன் . எந்த அளவுக்கு மக்கள் நஷ்டம் அடைந்து  இருக்கிறார்கள்  பாருங்கள் .
மீட்டர் போட்டால்   மட்டுமே ஆட்டோவில் ஏறுகிறேன்.
இதே நிலை தொடர்ந்தால் மக்களும் பயனடைவார்கள் .ஆட்டோ ஓட்டுனர்களும்  பயனடைவார்கள் .

17 comments:

  1. அனைத்து ஊர்களிலும் வர வேண்டும்...

    ReplyDelete
  2. என்னதான் இருந்தாலும் சென்னை ஆட்டோ கட்டணத்தை நெடுந்தூர பேருந்து கட்டணங்களுடன் ஒப்பிட முடியாது. நகரத்தில்தான் எத்தனை வாகன நெரிசல், குண்டும் குழியான பாதைகள் நெடுந்தூர பயணத்தில் இது இல்லையே? மேலும் அது அரசு பேருந்து. இது ஒரு தனிநபரின் வாகனம். ஆனால் அதற்காக பகல் கொள்ளை அடிப்பதை ஏற்கவே முடியாதுதான். சென்னையில் மட்டுமே இருந்த இந்த பகல் கொள்ளை இப்போது சிறிது சிறிதாக கேரளத்திலும் கர்நாடகாவிலும் கூட பரவுகிறதாம். புதிய கட்டணம் எத்தனை காலம் இருக்கும் என்று சொல்ல முடியாது. இருக்கும் வரை அனுபவித்துக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி! எல்லா நகரங்களுலும் வர வேண்டும். ப்கிர்வுக்கு நன்றீங்க.

    ReplyDelete
  4. பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கு எங்களுக்கு (இருவரும் சீனியர்ஸ்) மொத்தமே 300/- தான் ரயிலில். ஆனால் ஆட்டோகாரர் கூசாமல் இதற்கு மேல் கேட்பார். இப்போதெல்லாம் பேருந்துதான். கொஞ்சம் காத்திருந்தாலும், கொஞ்ச தூரம் நடக்க வேண்டுமென்றாலும் ஆட்டோகாரரிடம் சண்டை போடுவதைவிட பரவாயில்லை என்று பேருந்தில் போய்விடுகிறோம்.
    இங்கும் இப்போதெல்லாம் அதிகம் கேட்கிறார்கள். ஆனால் ஒன்று: இங்கு மினிமம் 20/- தான். ஒரு கி.மீ. க்கு 12/- சென்னையை ஒப்பிடும்போது இது குறைவு தான். பேருந்துக் கட்டணங்களும் இங்கு அதிகம் தான்.

    ReplyDelete
  5. அனைத்து ஊர்களிலும் வர வேண்டும்...

    ReplyDelete
  6. எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே...

    ReplyDelete
  7. ஆனால் ஒருசில நேரங்களில் பெரிய ஓட்டல்கள்(கொஞ்சம்) செல்லும்போது ஒரு கரண்டி மாவை தோசை ஊற்றிக் கொடுத்துவிட்டு ஒரு தோசை 70 ரூபாய் என்று கூறும்போது நாம் வாயை மூடிக்கொண்டு பில்லைக் கொடுத்துவிட்டுத்தானே வருகிறோம்..அங்கே யாரும் பேரம் பேசுவதில்லையே..அதையும் தட்டிக்கேட்கும் காலம் வரவேண்டும்..அரசாங்கம் அதையும் கேட்கவேண்டும்...

    ReplyDelete
  8. மீட்டர் போட்டால் மட்டுமே ஆட்டோவில் ஏறுகிறேன்.// உண்மைதான் எல்லோரும் இப்படியே தீர்மானித்தால் நல்லது

    ReplyDelete
  9. இங்கே மதுரையிலும் ஆட்டோ கட்டணம் கொள்ளைதான் ...கால் டாக்ஸி எவ்வளவோ பரவாயில்லை !
    இங்கேயும் மீட்டர் பொருத்தினால் நல்லது ,அரசுதான் முடிவு செய்யணும் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் .நானும் மதுரையில் சில நாட்களே பணிபுரிந்தபோது பார்த்தேன்.

      Delete
  10. நானும் உங்களைப் போலத்தான் மேடம், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே ஆட்டோ, மற்ற நேரங்களில் இருக்கவே இருக்கிறது இரு சக்கர வாகனம்.... வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் டூ வீலர் . நான்" டூ லெக்கர் "ல் போய்விடுவேன். தமிழ்நாட்டு ஜனத்தொகையை குறைக்கும் எண்ணம் இல்லையாதலால் டூ வீலர் ஓட்டக் கற்றுக்கொள்ளவில்லை . (ஓட்ட வரவில்லை என்பது ரகசியம்)

      Delete
  11. தில்லியில் ஆட்டோ மீட்டரில் தான்..... மினிமம் 20 தான்.... ஆனால் நாம் கூப்பிடும் இடத்திற்கு அவ்வளவு லேசில் ஆட்டோ கிடைக்காது. அவர்கள் போகும் வழியில் அந்த இடம் இருந்தால் தான் ஏற்றிக் கொள்வார்கள்.

    இங்கு திருச்சியில் அநியாயம். மினிமம் 40... நம் சொத்தையே எழுதி தான் வைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நானும் திருச்சியில் வசித்திருந்திருக்கிறேன். நீங்கள் சொல்வது சரியே

      Delete
  12. The supreme court has given the order,it is only up to the citizens now to demand for the implementation!heard that from this week,it is compulsory,else the auto will b seized!!!!!!amma idhilum manadu vaikka veendum!

    ReplyDelete