Saturday, 5 October 2013

ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை

நாம் சிரித்தால் தீபாவளி .


தெள்ளு தமிழ் பேசும் தமிழகத்தில் 
தீமையை அழிக்க திக்கெட்டும் தீப 
ஒளி ஏற்றும் நாள் தீபாவளி .

கவினுறு காவுடை காஷ்மீரத்தில் 
காவலையும் கட்டுக்களையும் மீறி குண்டு
வைத்து கண்ட மேனிக்கு தீபாவளி .

பல நாடுகளில் பன் முறையும் பாவம் 
பார்க்காது பகைமையாலும்   பதிலடியாலும்   
பரிதவிப்போருக்கு  பன்னாட்கள்  தீபாவளி .

 மக்களை மகிழ்விக்க மருந்துகள் பல
 கொண்டு உருவாக்கும் தொழிலாளிக்கு
கை தவறினால் மரணத் தீபாவளி .
உலகில் 
பகைமை மறைந்து அமைதி நிலவி 
வறுமை ஒழிந்து வளமை பெருகி 
 சிரிக்கும் நாளே  நல்ல தீபாவளி 

 My blog is abayaaruna.blogspot ,com
 Name UmaMaheswari

17 comments:

  1. அருமை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    உங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஆழமான
    பரந்து விரிந்த சிந்தனையுடன் கூடிய கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...வெற்றி பெற வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  5. அருமையான கவிதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்களது உலகளாவிய சிந்தனை ரசிக்க வைத்தது.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்று!வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  8. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நல்ல சிந்தனை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ''..பகைமை மறைந்து அமைதி நிலவி

    வறுமை ஒழிந்து வளமை பெருகி

    சிரிக்கும் நாளே நல்ல தீபாவளி ..''
    Eniya vaalththu
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  11. நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

    ReplyDelete