Friday 4 October 2013

தனி ஒரு மனிதனுக்கு மைதா இல்லையேல் ஜகத்தினை ......

மைதா மாவு உபயோகிக்கலாமா கூடாதா  என்ற  சர்ச்சை மிளகாய் மிளகாக  ஹி ஹி அதான் மிகவும் கார சாரமாக விவாதிக்கப் பட்டு வரும் இந்நாளில் நான்  மைதா மாவுக்கு ஆதரவோ எதிர்ப்போ சொல்லப்போவதில்லை .

 (எப்படி சொன்னாலும் இன்னொரு குரூப்பு
நம்மளை அடிக்கும் . ஏன்னா  இப்ப எல்லாம் ஒரு குரூப்பாத் தானே இருக்காங்க வயசான காலத்திலே எதுக்கு வம்பு ?)


மைதா மாவை  அதற்கு  எதிரான   போராட்டங்களுக்கு  செவி சாய்த்து தடை செய்தால் என்ன ஆகும் என்று தான் நான் ஆராய்ச்சி செய்தேன்.
நிறையப்பேர் புரோட்டா  (பரோட்டா) பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்
 .
 மைதாவை  தடை செய்தால் பலியாவது  புரோட்டா  (பரோட்டா) மட்டுமில்லை.

முதல் முதலில் "ஹேப்பி  பர்த்டே "அன்று கேக்கு சாப்பிடமுடியாது.
ரொம்பவும் கிரியேட்டிவாக செய்யும் பல கேக்குகளுக்கு டைனோசருக்கு ஏற்பட்ட தலை விதியே நேரும்.

 அதை தயார் செய்யும் பல தொழிற்சாலைகளும் மூடும் அபாயம் உள்ளது.பலர்  வேலை இழக்க நேரிடும் .பிறகு திருட்டுத்தனமாக வெளிநாட்டிலிருந்து கேக்குகளை கடத்திக்கொண்டு  கொண்டுவருவார்கள்.
ஏர்போர்ட்டில் கேக்கு கடத்திக்கொண்டு வரும் மக்கள் பிடிபடுவார்கள். (தங்கம் கடத்திக்கொண்டு வந்து பிடிபடுவது போலே )
கேக்குகள் மறைமுகமாக விற்பனை ஆகும் .

இதே போல்  பிரெட்  சான்ட்விச் பிஸ்கெட்டு சமோசா ,பஃப் ,போளி. குலொப்ஜாமூன் ,சூரியகலா ,சந்திரகலா போன்ற மைதாவை மூலப் பொருளாக வைத்து தயார் செய்யும் பல இனிப்பு வகையறாக்களுக்கும் தடா வந்துவிடும்.
அது சம்பந்தமான பல ஓட்டல்களும் நசியும்.அவற்றில் ஈடுபட்டுள்ள  தொழிலாளர்களும் வேலை இழக்க வேண்டிவரும்.


இவற்றுக்கெல்லாம் வயது வித்தியாசமின்றி  பழகிவிட்ட நமது நாக்குகள் இதை வரவேற்குமா?(பிளாஸ்டிக்  பைகளுக்கு  அடிமையாகிவிட்ட  மாதிரி )

யாராவது இதற்கென்று  தனி ஒரு மனிதனுக்கு மைதா இல்லையேல் ஜகத்தினை .அழித்திடுவோம் .....என்று ஒரு பொதுநல வழக்கு ஒன்று போடுவார்கள்.
பஸ் ஸ்டாண்டுகளிலும்  ,ரயில்வே ஸ்டேஷனிலும்  ,வெட்டியாக டைம் பாஸ் செய்ய நேரம் கிடைக்கும்போது இந்த மேட்டர்   நன்றாக அடித்து துவைத்து அலசப்படும்.
பல டி.வி சேனல்களுக்கு சூப்பர் மேட்டர்    கிடைத்தது  .சமுகத்தின் பல தரப்பினரும் இந்த விவாதத்தில் பங்கேற்பார்கள்.

  மூளை உள்ளவர்கள் , மற்றும் பிழைக்கத்  தெரிந்தவர்கள் கருமமே கண்ணாக சர்க்கரைக்கு மாற்று ஒன்று கண்டுபிடித்த மாதிரி மைதாவுக்கும் ஒரு மாற்று மைதா கண்டிபிடிப்பார்கள் .

பிறகு கடைசியில் சிகரெட்டு மாதிரி பொடியான எழுத்துக்களில் "மைதா உடல் நலத்திற்கு கேடு "  என்று " சுபம்  " போடப்பட்டுவிடும்.

 

20 comments:

 1. நடந்தாலும் நடக்கும் போல...!

  ReplyDelete
 2. வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. என்ன இந்த மைதாவுக்கு வந்த சோதனை...

  ReplyDelete
 4. நல்ல காமெண்ட் .நன்றி.

  ReplyDelete
 5. மைதாவினால் இத்தனை வில்லங்கமா?

  ReplyDelete
 6. ஒரு பொருள் குறித்த நேர்கோட்டுச் சிந்தனையும்
  நகைச்சுவை மிளிர சுவாரஸ்யமாய் சொல்லிச் சென்றவிதமும்
  மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. //பிறகு கடைசியில் சிகரெட்டு மாதிரி பொடியான எழுத்துக்களில் "மைதா உடல் நலத்திற்கு கேடு " என்று " சுபம் " போடப்பட்டுவிடும்.//

  அப்படி செய்தாலும் நம் மக்கள் வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள்... மிக வித்தியாசமான பதிவு....

  ReplyDelete
 8. இனிய காலை வணக்கம்.
  தங்களுடைய தளத்தை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.

  ReplyDelete
 9. http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_11.html

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி.

   Delete
 10. தலைப்பு நன்றாக இருக்கிறது!
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 11. வணக்கம்!
  இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டேன்.

  மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

  இங்கும் நல்லதொரு அசத்தல் பதிவு! சிந்திக்கவைக்கின்றீர்கள். அருமை!

  வாழ்த்துக்கள்! தொடருகிறேன்.....

  ReplyDelete
 12. மைதாவுக்கு வந்த நிலையை நினைத்தால் கவலைக்கிடமாகத் தான் இருக்கிறது....

  ReplyDelete
 13. வலைச்சர அறிமுகம்தான் என்னை இங்கு கொண்டு வந்தது. ந்ல்ல சுவையான பதிவு. மைதா மாவு ஆபத்து என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.. ஆனால் அதில்தான் எத்தனை, எத்தனை தின்பண்டங்கள்! எல்லாவற்றையும் எப்படி ஒதுக்குவது? நாற்பது வயது வரை கல்லை தின்றாலும் ஒன்றும் ஆகாது என்கிறார்களே? அதற்கு மேலுள்ளவர்களுக்குத்தான் இந்த பதிவு என நினைக்கிறேன். சரிதானே?

  ReplyDelete
 14. இது என் தனிப்பட்ட அனுபவம் .
  எப்பொழுது வெளியில் போனாலும் (30)பல வருடங்களாக கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட் வைத்துக்க் கொள்வேன் . கிட்டத்தட்ட எல்லா நாளுமே வயிறில் ஒரு வித வலி இருந்து வந்தது .எல்லாமே நார்மலாக இருந்தது .இந்த வருடம் மே மாதத்தில் உடல் நிலை வெகு மோசமாகி எதுவுமே சாப்பிட முடியாத நிலை .திரவ உணவு மட்டுமே சாப்பிட்டேன் .எந்த வலியும் இல்லை. இப்பொழுது நார்மல் உணவு உண்டாலும் பிஸ்கெட்டை சாப்பிடுவதில்லை . வலியும் வருவதில்லை.

  ReplyDelete
 15. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete