Saturday 19 October 2013

ஊரோடு ஒத்து வாழ்

நான் ஹைதராபாத்தில்  என் மகன் ஒரு நாலு மாதக் குழந்தையாக  இருந்தபோது அவனை  பக்கத்தில் இருந்த ஒரு மார்வாடிக்
 கடைக்குக் கூட்டிப் போவது வழக்கம்.
அது முழுக்க முழுக்க தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த பகுதி .
ஹிந்தி அவ்வளவாக யாரும் பேசுவதில்லை .
எனக்கும் தெலுங்கு பேச வராத காலம் அது.
அந்த மார்வாடிக் கடைக்காரருக்கும் தெலுங்கு பேச வராது.
எனவே நாங்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டிருப்பது அவருக்கும்  ,அவர் மனைவிக்கும் ஏன் எனக்குமே மன நிறைவைத் தந்தது.

என் மகனும் வெளியே கூட்டிச்சென்றால் அழ மாட்டான் .என்பதால் அடிக்கடி அந்தக் கடைக்குப் போய் பேசிக்கொண்டிருப்பேன்.

 வழக்கமாக மார்வாடிகள் வைத்திருக்கும் சாமி படங்கள் இல்லாமல் அவரின் கடையில் திருப்பதி வெங்கடாசலபதி   பத்மாவதி தாயாருடன் உள்ள படங்களும்,  மற்றும் அந்த மெயின்  படத்தைச் சுற்றி ஆந்திரர்கள் வழிபடும் சாமி படங்களும் சொல்லப்போனால் ஒரு   தனி தெலுங்கானா  ரேஞ்சுக்கான ஆந்திரா கடை மாதிரியே இருக்கும் .
நன்கு பழக ஆரம்பித்ததும் அவர்களிடம் நான்
 " நீங்களோ வட இந்தியர்கள் ,அது எப்படி  உங்கள் கடையில்  தென்னிந்தியர்கள் வழக்கமாக  வணங்கும் மாதிரியான
கடவுளர்  படங்கள் உள்ளனவே "
 என்று கேட்டேன்
இதே நாமாக இருந்தால்
" வடக்கும் தெற்கும் பெருமை , வேற்றுமை காண்பது மடமை "
என்றோ
அல்லது
"வட இந்தியாவும் தென் இந்தியாவும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயிலே மண்ணு " என்பது போன்ற சினிமாத்தனமான ,மொக்கை பதிலை சொல்லிவிட்டு   என்னவோ பெரிய பார் புகழும் பஞ்ச் டயலாக் அடித்த இமோஷனில்
" டப டப டப் டப் "  கைதட்டலுக்கு
வடைக்கு ஆசைப் பட்ட நரி கணக்கா காத்திருப்போம் .
ஆனால் அவர் சொன்ன பதில் என்ன தெரியுமோ?
சூப்பரோ சூப்பர்  பிராக்டிகலான  நெத்தியடி
பதில்.
"இந்த ஊர் கடையிலே இந்த ஊர் சாமிய வச்சதானே காசு கொடுக்கும்.
எங்க ஊர்  சாமியே வெச்சா இந்தூர் சாமி கோச்சுகிட்டு
காசு குடுக்கலேன்னாக்க.........?ஏதாச்சும் ஆச்சுன்னக்க எங்கூர் சாமியா அவ்வளவு தூரத்திலிருந்து ஒடியாரும் ஒதவிக்கு?


பொங்கி வந்த "குபுக்"கை கஷ்டப்பட்டுத்தான்  144 போட்டேன்

பச்சப் புள்ளதனமாவும் ,சாமிக்கே  பூகோள எல்லை வகுத்து பார்டர் போட்ட பதிலாக மேலோட்டமாகத் தெரிந்தாலும் ஒரு உண்மை மட்டும் தெரிந்தது. அதுதான் எந்த ஊரில் உள்ளோமோ அந்த ஊரின் பழக்க வழக்கப் படி நடப்பது.
அதனால்தான் மார்வாடிகளால் பிழைக்கமுடிகிறது.


 அதாவது    ஊரொடு ஒத்து வாழ் பாலிசி 

 இதை  நாமும்  மனப்பாடப் பகுதியாக சிறு வயதில் படித்தோம் .
சரியாக ஒப்புவிக்கவில்லையானால்
 நீயெல்லாம் "பன்னி மேய்க்கத்தான் லாயக்கு "
என்று பெற்றோர்கள் அவர்கள் மனப்பாடப்பகுதியை    குழந்தைகளிடம்
ஒப்புவிபதுதான் பொதுவான நடைமுறை வழக்கம்.
அதை குழந்தை சரியாக எழுதி பாஸ் மார்க் வாங்கிவிட்டால் நாம் சந்தோஷம் அடைந்துவிடுவோமே  தவிர அதை ஒழுங்காக நடைமுறைப் படுத்துவது பற்றி கவலைப்படுவதில்லை . அதன் விளைவு தான் நாம்
பின்னடைந்திருப்பதன்  காரணம் என் நான் நினைக்கிறேன் .

15 comments:

  1. மதிப்பெண்கள் மட்டும் கண்ணில் தெரிவதால் வரும் பிரச்சனை...!

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள்

      Delete
  2. நிர்வாணபுரியில் கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன். இதை அந்த மார்வாரி அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கார்.

    ReplyDelete
  3. இது அவர்களின் அனுபவப் பூர்வ அறிவு

    ReplyDelete
  4. அதாவது ஊரொடு ஒத்து வாழ் பாலிசி //


    கரெக்டான பாலிசி... ஒரு ஊரோட ஒன்றிப்போறதுக்கு அந்த ஊரோட மொழிய தெரிஞ்சிருக்கணும்.... அது முடியலன்னா குறைஞ்ச பட்சம் நாடு முழுசும் பேசற ஹிந்தி தெரிஞ்சிக்கணும்.... ஆனா நம்ம ஆளுங்கக் கிட்ட அதச் சொன்னா அடிக்க வருவாங்களே?

    ReplyDelete
    Replies
    1. இன்றைய நிலைமை இந்தி மட்டுமில்லை , வயிற்றுப் பசிக்கும் அறிவுப்பசிக்கும் வேற்று நாட்டு மொழி ஏதாவது ஒன்று தெரிந்து வைத்து இருப்பதும் நன்றே!

      Delete
  5. இந்தியை ஒட்டுமொத்தமா எதிர்கறவங்க ஆங்கிலத்துக்கு மட்டும் அமோக ஆதரவு கொடுக்கறாங்க.அதான் ஏன்னு புரியல.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலத்திற்கான எதிர்ப்பை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் .
      காரணம் பெரிய மொழிக் கொள்கை என்றெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம் .
      சில நாட்டினருக்கு ஆங்கிலம் தெரியாததால்தான் ஹி...ஹி .... நான் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறேன் .

      Delete
  6. மார்வாடிகள் எப்போதுமே புத்திசாலிகள்தான். அவர்களுக்கு பணம்தான் கடவுளே!

    ReplyDelete
    Replies
    1. பிழைக்கத் தெரிந்தவர்கள் .

      Delete
  7. ஹா ஹா ஹா மிக நல்ல பதில் தான்

    ReplyDelete
  8. என்ன ஒரு புத்திசாலித்தனம். சாமிக்கும் எல்லையைப் பிரிச்சுட்டாங்களே! நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி.

    ReplyDelete