Saturday 4 January 2014

புத்தாண்டு புலர்ந்தது



 எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

எல்லா நாளும் கன்னா பின்னா என்று மூணு மணி மூணரை மணிக்கெல்லாம் முழிப்பு வரும்
.முதல் தேதி அன்று ஐந்தரை மணிக்குத்தான் முழிப்பு வந்தது.
பக்கத்திலே இருக்கற
அசோக் நகர் ஆஞ்சநேயரைப் போய் பார்த்து ஹாப்பி நியூ இயர் ,ஹாப்பி பர்த்டே சொல்லனும்ன்னு முதல் நாளே திட்டம் போட்டேன் .

வேலை எல்லாம் முடிச்சு எட்டு மணிக்குக் கிளம்பலாமான்னு நெனச்சா க்யூ ரெண்டு தெரு தாண்டி நிக்குது.

எங்க வீட்டையும் தாண்டி க்யூ நிக்குது.

போக சோம்பேறித்தனமாக இருந்தது .

பிறகு எதோ பட்டி மன்றம்  பார்த்து ,வந்த மெயிலைப் படிக்க  ,நான்  சிலருக்கு மெயில் அனுப்ப , போனில் பேச என மணி அப்படி இப்படி சாயந்திரம் அஞ்சு மணி ஆச்சு.

கூட்டம் குறையவே இல்லே

அந்த ஆஞ்சநேயர் பெரிய உயரமான விக்ரஹம்.
எனவே  வெளியிலே நின்னே அவரை தரிசனம் பண்ணிவிட்டு  ( அதுக்கும் ஏகக் கூட்டம் )ஒரு வாக் போய்விட்டு வந்தேன்.

ஆஞ்சநேயரை வணங்க வந்தவர்கள் நிச்சயம் ஒரு இரண்டு லட்சத்தையும் தாண்டி இருக்கும் என நினைக்கிறேன்.

2001 வாக்குகளில் நான் பொதுவாக காலையில்இதே  ஆஞ்சநேயரை என்னால் முடிந்தவரை சுற்றிவிட்டு  (108 என்ற எண்ணிக்கை இல்லாமல் ) செய்த சுற்றுக்கேற்ற   Blessings கொடுக்குமாறு சொல்லிருந்த காலமும் உண்டு.

இப்போது  சனிக்கிழமை மட்டுமல்லாது எல்லா நாட்களுமே கூட்டம் இருக்கிறது.
எனவே பாதி நாட்கள் கோயில் உள்ளே செல்லாது வெளியிலிருந்தேதான்   தரிசனம்.
 ஆஞ்சநேயர் அனைவருக்கும்   ஆசி வழங்குவாராக!

5 comments:

  1. எங்களுக்கான பிரார்த்தனைக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. நன்றி சகோதரி...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete