Saturday, 4 January 2014

சர்வேக்களும் படிப்பும்.


 நான் கல்லூரி யில் படிக்கும் நாட்களில் என் ஞாபக சக்தியில் என் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை உண்டு.
 நான் நிறைய டேட்டா எல்லாம் குடுத்து எழுதுவேன்.

எனக்கு  ஏனென்று  தெரியவில்லை பொதுவாக எண்களின் மீது ஒரு இனம் புரியாத காதல் .

 வேலையை விட்ட பின்னும் சில இன்டரஸ்டிங் சர்வேக்களை நினைவில் இருத்திக் கொள்வேன்.
அதை பேசும்போது கற்பிக்கும்   போது சரியான இடங்களில் மேற்கோள் காண்பிப்பேன்.
 ஜப்பானிய மொழி கற்பிக்கும் போது பார் ஆப்பிள்  , ஒரோண் ஒண்ணு மாதிரியெல்லாம் சொல்லிக்கொடுத்தா  கட்டிய பணம் போனாலும் பரவாயில்லேன்னு ஜகா வாங்கிடுவாங்க!

நல்லா  சொல்லிக்குடுத்தாலும்   ஒரு மாதத்தில்   50%  ஏதொ காரணம் சொல்லிட்டு வரவே மாட்டங்க !
பொதுவாக வகுப்புகள் ஞாயிறு அல்லது வார நாட்கள் என்றால்  மாலை 5 மணிக்குத்தான் இருக்கும் .

எனவே சுவாரசியமாக்க நான் பல விதமான ஐடியா செய்வேன்.
ஜப்பானிய மொழி ஒன்றும்  கஷ்டமே இல்லை யாக்கும் 
.
நாம் உபயோகிக்கும்  மற்றும் தெரிந்த சொற்களோடு தொடர்பு கொண்டால்  செம ஈசி .
உதாரணமாக நமீதா என்றால்  இனிமேல் நீங்க அழணும்  என்பேன்.
(நமீதா   மேடம் ! சீரியஸாக  எடுத்துக்கொள்ள வேண்டாம் )
ஐயய்யோ முடியாது என்பார்கள்.
ஜப்பானிய மொழியில் நமீதா என்றால் அழுகை , கண்ணீர்.
நாம எது செய்யிரோமோ அதுவா மாறணும்.இல்லையா?
என்பேன்.

அது போல தமனா  (தமன்னா அல்ல) என்றால்  முட்டைக்கோஸ் .
 பசங்கள் நிஜமாகவே நோட்ஸ் எல்லாம் எடுத்துப்பாங்க.

சில மாணவர்கள் அப்ப  திரிஷான்னக்க என்னா  ஜோதிகான்னாக்க   என்னா  அப்படியெல்லாம் கேப்பாங்க.

முழுக்க முழுக்க நடிகை பேரை வச்சே ஒரு மொழியை கத்துக்க முடியாதுன்னு திட்ட வட்டமா சொல்லிடுவேன்.

ஒரு இரண்டு வருடம் கழித்து எங்காவது பார்த்தால்  
படித்தது   ஞாபகம்  இருக்கான்னாக்க  நமிதாவும் தமனா வும் மட்டுமே ஞாபகம் இருக்கு என்பார்கள். அது தனிக் கதை.

 சரி.இப்ப சர்வேக்கு வருவோம்.
ஜப்பானிய மொழியில்   Pictorial characters  களை நினைவில் கொள்ள சில கதைகள் சொல்வேன். ஆண்  என்பதற்கான கேரக்டர்
இப்படி இருக்கும்.
இது 1.      2. என்ற இரண்டு கேரக்டர்கள்  அடங்கியது.
.1 என்பது வயலையும், 2 என்பது  பவர் என்பதையும் குறிக்கும்.
 இதை ஞாபகம் வைத்துக்கொள்ள  ஒரு சர்வே பற்றி சொல்வேன்.

 (முதலிலேயே ஆண்கள் கோபம் கொள்ளவேண்டாம் என்று முன் ஜாக்கிரதையாக சொல்லிவிடுவேன்.
கடைசியில் இந்த சர்வேயை ஆண்களும்   like  போடுவார்கள்.. ஜாலி கதையில்  கற்றது மறப்பதில்லை யாதலால் )


20  வருடம் முன்பு .நா  நடத்திய சர்வே படி உலகில் உள்ள 
வேலைகளில்  ( அதாவது வீட்டு வேலை வெளி வேலை   எல்லாம் உள்ளடக்கியது . ) 90% வேலைகளைச் செய்வது பெண்களே ! 10 %   வேலை மட்டுமே ஆண்கள் .செய்கிறார்களாம் 

ஆனால் உலகில் உள்ள சொத்துக்களில் ( அசையும்  மற்றும் அசையா )90% ஆண்கள் பெயரில் தான் உள்ளது..
புரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால்    ஆண் என்றால் அவர்களுக்கு 
வயல்   (1  ) & மற்றும் அதிகாரம் (2 )உள்ளது    என்று ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்அவ்வளவே!
(இதற்கு  என்ன அத்தாட்ச்சி   என்கிற கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது.. மேட்டர்  ஞாபகம் வெச்சுக்கணும்  அதான் முக்கியம் )
 (அது சரியா தப்பா நியாயமா  என்கிற  விவாதம் வேண்டாம்).


 வகுப்புகள்  . சுவாரசியமாகப் போகும்..ஐந்து மணிக்குக் களைப்புடன் வந்த மாணவர்கள் கல கல என சிரித்துக் கொண்டே  வீட்டுக்குச்  செல்வார்கள்.

4 comments:

  1. இந்த மேட்டர் எல்லாம் உங்களின் பதிவின் மூலம் தான் தெரியும்... நன்றி...

    ReplyDelete
  2. // உலகில் உள்ள சொத்துக்களில் ( அசையும் மற்றும் அசையா )90% ஆண்கள் பெயரில் தான் உள்ளது..//
    இந்த சர்வே உண்மைதானுங்க... காரணம் ஒவ்வொரு ஆணுக்கும் தன் மனைவி குழந்தைகள் அம்மாக்கள் அனைவரும் சொத்துக்கள்தான் குழந்தைகள் அம்மா அசையும் சொத்து மனைவி அசையா சொத்துங்க இருந்த இடத்தில் இருந்து ஆர்டர் போடுவதால் )

    ReplyDelete
  3. ///20 வருடம் முன்பு ஐ .நா நடத்திய சர்வே படி உலகில் உள்ள
    வேலைகளில் ( அதாவது வீட்டு வேலை வெளி வேலை எல்லாம் உள்ளடக்கியது . ) 90% வேலைகளைச் செய்வது பெண்களே !///

    ஐநா சர்வே தவறு என்று பின்னால் வெளிவந்ததை நீங்கள் மறந்து வீட்டீர்கள் போல இருக்கிறது,,, உங்களுக்கும் வயசு ஆச்சுல மறதி வருவது சகஜம்தான்.


    ஐநா சர்வே தவறு என்று ஒத்துக் கொண்டதற்கு வீட்டில் பெண்கள் மேக்கப் போட்டு சேலை கட்டிக் கொள்வதையும் வீட்டிற்கு வெளியே துணிகடைக்கு நகைகடைக்கு சென்று வாங்குவதையும் வேலை என்ற கணக்கில் எடுத்து கொண்டததுதான் காரணமாம்

    ReplyDelete
  4. வணக்கம் சகோ..
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete