Monday, 13 January 2014

நானும் போனேன் புத்தகக் கண்காட்சி



சனிக்கிழமை அன்று நான்  சுமார் 3 மணி அளவில் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன்.

 போன வருஷத்தை விடவும் நிறைய புக் ஸ்டால்கள் இருந்தன.

நடந்து நடந்து காலெல்லாம் ஒரே வலி.
கிட்டத்தட்ட ஒரு மூணு மணி நேரம் இருந்தேன்.

 உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்க அங்கங்கே சேர் இருந்திருந்தால் நல்ல இருந்திருக்கும்.

 இல்லாட்டி என்ன நமக்கா வழி தெரியாது?

எங்கே காலியான சேர் இருக்கோ அங்கே அப்பப்போ உட்காந்து ரெஸ்ட் எடுத்துகிட்டேன்.

அக்யு  பங்க்சர் புத்தகம் ஒண்ணும் , ரியோ ஒகாவா வின் புத்தகங்கள் மூணும்  மற்ற சில குட்டி புத்தகங்கள் வாங்கினேன்.எல்லாம் சேர்ந்து ரூபாய் 890/- ஆச்சு.


தேசிக விநாயகம் பிள்ளையின் மருமக்கள்  மக்கள் வழி மான்மியம்  வாங்கலாமா என்று நினைத்தேன்.

பிறகு வாங்கலை .

  பதிவர்களில் திருமதி அகிலா அவர்களைப்
 பார்க்கலாம் என நினைத்து அவர்களுக்குப் போன் பண்ணினேன் .
ஆனால் போனை எடுக்கவில்லை   . வேறு  வேலையில் பிசியாக இருந்தார்களா என்ன தெரியவில்லை.

 மும்பையில் என்னுடன் வங்கியில் வேலை பார்த்த  தமிழ் நாட்டிலிருந்து சென்ற ஒரு நண்பரைப் பார்த்தேன்.

 அவர் தனது மகனுடன் வந்திருந்தார்.

சில பல பழைய விஷயங்களைப் பற்றியும் ,பழைய   colleague கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்
இதில் கடைகளைக் கலந்து கட்டி வைத்திருப்பதை விட   பரீட்சை சம்பந்தமான  எஸ். சந்த்  கடைகள் , குழந்தைகள் சம்பந்தமான புத்தகங்கள்  கடைகள் ஆன்மிகம் சம்பந்தமான கடைகள் என்று பிரித்து வைத்திருந்தால்
குழந்தைகள் புத்தகம் வாங்க குழந்தைகள் கடை என்று குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அலையவேண்டாமே!

குழந்தைகளை காணாமால் போக விட வேண்டாமே!

நான் இருந்த சமயம் அப்பா அம்மா வைத் தவறவிட்ட   இரண்டு குழந்தைகள் பற்றிய அறிவிப்பு வந்தது.
ஒரு குழந்தை மைக்கில் அழுது அம்மா அம்மா என்றது பாவமாக இருந்தது.

அது போல வயசானவர்களுக்கென உள்ள ஆன்மிகம் ,சமயம் சம்பந்தப் பட்ட கடைகளையும் தனியே ஒரு வரிசையில் வைத்திருந்திருக்கலாம்.ஒரு பாட்டி பாவம் கிரி டிரேடர்ஸ் எங்கே என்று அலைந்துகொண்டிருந்தது.அப்புறம்  என்கொயரியில் கேட்டு சொன்னேன்.

1979 ம் வருடத்திலிருந்தே புத்தகக் கண்காட்சி போய்க்கொண்டு இருக்கிறேன்.(வடக்கே இருந்த  வருடங்களைத் தவிர்த்து)

வடக்கே  வேறு  ஊர்களில் இப்படிப்பட்ட  பெரிய அளவிலான  கண்காட்சியை நான் பார்த்ததில்லை

அந்த விஷயத்தில் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி  சூப்பர்.





12 comments:

  1. சனிக்கிழமை மதியம் மூன்றரை மணி முதல் இரவு எட்டு மணி வரை புத்தகக் கண்காட்சியில் தான் இருந்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. திரு ஆரூர் முனா அவர்கள் பதிவில் நீங்கள் வந்ததைப் பார்த்தேன்
      திரு செல்லப்பா அவர்களும் வந்தததாகப் படித்தேன்.
      ஆனால் எந்தப் பதிவரையும் பார்க்கவில்லை .

      Delete
  2. புத்தக விமர்சன பகிர்வு எப்போது...?

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள் .போன வருஷம் வாங்கின புத்தகமே எங்கேன்னு தெரியலை தேடணும்.
      நீங்க கேட்டுட்டீங்க !
      எதையாவது படிச்சு எழுதிடணும்.

      Delete
  3. //அது போல வயசானவர்களுக்கென உள்ள ஆன்மிகம் ,சமயம் சம்பந்தப் பட்ட கடைகளையும் தனியே ஒரு வரிசையில் வைத்திருந்திருக்கலாம்.//

    அட நீங்க இன்னும் பழைய ஆளா இருக்கீங்க வயசானவர்கள் யாருங்க இப்ப எல்லாம் ஆன்மிக புக் வாங்குறாங்க ... உங்க பேச்சை கேட்டா புத்தக பதிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டு போக வேண்டியதுதான்..

    பதிப்பாளர்கள் வியாபார நுணுக்கம் தெரிந்தவர்கள் அதனால்தான் அவர்கள் புத்தகங்களை மிக்ஸ் பண்ணி விக்கிறாங்க. மோசமான புக்கை வாங்க நினைக்கும் வயதானவர்கள் அதன் அருகில் இருக்கும் ஆன்மிக புக்கை எடுப்பதோடு அதன் அருகில் இருக்கும் அடல்ட் புக்கை எடுத்து அதன் அடியில் வைத்து கொள்வார்கள். இதனால் பதிப்பகத்தாருக்கு 2 புக் விற்பனை ஏற்படுகிறது

    ReplyDelete
  4. வயசானவங்க சைக்காலஜி வயசான உங்களுக்குத தானே நல்லாப் புரியும்
    என்னை மாதிரி
    சின்ன வயசுக்காரங்களுக்கு எல்லாம் எப்படிப் புரியும்?

    ReplyDelete
  5. நானும் செல்லாப்பாவுடன் வந்திருந்தேன் அங்கு மின்னல் வரிகள் பாலகணேஷ் ,மெட்ராஸ் பவன் சிவகுமார்,ஸ்கூல் பையன் சரவணன்,கோவை ஆவி,செலவின்,இன்னும் புதுமாப்பிள்ளை பிரபாகரன் .,அரசன், போன்ற வலையுலக நண்பர்களையும் பார்த்தேனே?

    ReplyDelete
  6. இனிய பொங்கல்நாள் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பொங்கல் வாழ்த்துக்கள் .அதுதான் எப்படி என்று புரியவில்லை.
    யாரையுமே பார்க்கவில்லை ..
    எல்லாருமே புத்தகம் தெரிந்தெடுப்பதில் முழு கவனத்தையும் செலுத்தியதால் கவனிக்கவில்லை என்று தான் கொள்ளவேண்டும்.

    திருமதி அகிலா அவர்கள் வரவில்லையாம்.

    ReplyDelete
  8. pongal valthukal.nan nalai pokinren

    ReplyDelete
  9. ரெஸ்ட் எடுக்க அங்கே சேர் இருந்தாலும் அது புல்லா தான் இருக்கும் பரவாயில்லையா :-)

    ஏற்கனவே சனிகிழமை அன்று நான் சென்று வந்திருந்தாலும், இன்னும் ஒருமுறை சென்று வந்துவிட்டு பதிவு எழுத வேண்டும்..

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பழைய புத்தகங்களையும் படிச்சிட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு?

    ReplyDelete