Saturday 4 January 2014

உணர்தற்கு அரியன்ஆன்மிகம்
 பதிவு என்று எழுத வந்த பின் நாம வெரைட்டி ஆனா மேட்டர்களில்  எழுதணும் .
அதே சமயம் மத்தவங்க  அணுகுமுறையிலிருந்து வேறு பட்டு இருக்கிறது முக்கியம் அப்படின்னு நினைக்கிறேன்.

ஆன்மிகம் பத்தி பத்திரிகைகளில் எழுதியுள்ளேன் .
ஆனால் பதிவில்  இது வரை எழுதியதில்லை .

நமது வாழ்க்கையில்  ஆன்மிகம் கடவுள்  மற்றும்  இவற்றின்  தொடர்பு  என்ன என்பது   பற்றிய ஒரு தெளிவு எனக்கு இன்னும் இல்லை ..

மன முதிர்ச்சி இல்லையா என்றும் புரியவில்லை

 நான்   சாமி   கும்பிடும் டைப்பு என்றாலும் ஆபிஸ்  வேலை  வீட்டு  வேலை என்பவற்றை  ஓரம் கட்டிவிட்டு  சாமி கும்பிடும்  டைப்பு இல்லை .

அந்த  வேலை செய்யும் போதே சாமி பாடல்களை சொல்லிவிட்டு சாமியிடம்  நான் கும்பிட்டு விட்டதாக  டிக்  அடிக்கச் சொல்லிவிடுவேன் .
சாமி  ஒழுங்காக டிக் அடிக்கிறாரா  தெரியவில்லை .

 தூரத்தில்  உள்ள  கோயில்களுக்குப்   போகும்   வழக்கம் கிடையாது.
ஏனெனில்  எனக்கு  ரோடு கிராஸ்  பண்ணுவது  விளக்கெண்ணை  சாப்பிடுவது மாதிரி .
சென்ற ஞாயிறு அன்று  என் மாணவி  ஒருவருடன்  கு றுங்காலீஸ்வரர்  கோயில் ( கோயம்பேடு) சென்றிருந்தேன்.
புரிந்த உண்மை இதுதான் .
என்னதான்  ஆதித்யா  சானல்  சிரிப்பொலி   சானல் போன்றவைகள் இருந்தாலும் மக்களால் மகிழ்ச்சி யோடு இருக்க முடியவில்லை.

அவ்வளவு பிரச்னைகள்  என்பதை அங்கு வந்த  மக்கள் கூட்டம்   சொல்லாமல் சொல்லியது.
கொஞ்சம்   முன்னாடியே  சென்றுவிட்டோம் .

நாலரை மணி   ஆகவில்லை   யாதலால் (அங்கு நாலரை முதல் மணி வரை விசேஷம் ) பக்கத்தில்  உள்ள  சிவன்  கோயிலுக்குப் போனோம் .

அங்கு மக்கள்நமசிவாய”  என்ற மந்திரத்தை 108 முறை எழுதும் பேப்பரை வாங்கி   ஏதோ  போட்டிக்கு எழுதுவது போலே எழுதிக் கொண்டிருந்தனர்.
 கு றுங்காலீஸ்வரர்    கோயிலில்  திரு விளக்கு பூஜை போல !
.நிறையப் பெண்கள்  வாழை இல்லை மீது குத்து விளக்கு வைத்து பூஜை செய்து கொண்டிருந்தனர்.
நாங்கள் சாமி கும்பிட்டு விட்டு வந்த பின் ,
ஒரு  இடத்தில் அவர்களே   நமது  வேண்டுதல் என்னவோ அதை ஒரு   சீட்டில் எழுதித்  தருமாறு சொல்கிறார்கள் .

 நான்  எழுதலாமா  வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே
நான் வெட்டியாக இருக்கேன் என்று நினைத்தாரோ   என்னவோ தெரியவில்லை  ஒரு பெண்மணி என்னருகே  வந்து,ஒரு சீட்டை என்னிடம் கொடுத்து கொஞ்சம் எழுதித் தருகிறீர்களா என்றார்.

அவர் சொன்னதை எழுதித் தந்தேன் .

பிறகு நானும் என் வேண்டுதலை எழுதிக் கொடுத்தேன் .

மற்றவர்கள்  என்ன எழுதுகிறார்கள் என்று  ஒரு ரவுண்டு போய்ப் பார்த்தேன்.

 பரீட்சையில் காப்பி அடித்துப்   பழகியதில்லை என்றாலும் வெகு சீக்கிரம் மேட்டர் என்னவாக   இருக்கு என்று   ஒரு லுக்கில்  புரிந்துகொண்டேன்.

குறைந்தது 30%  பெண்கள் தன் கணவன் திருந்தவேண்டும்  கணவனுக்கு நல்ல புத்தி வர வேண்டும் போன்ற பல  சாலன்ஜிங்  சவால்களை சரபேச்வரருக்கு வேலை யாகக் கொடுத்தனர்.
  பத்திரிகை  ஜோக்குகளிலும்  பதிவுலகத்திலும்  மட்டுமே  மனைவிகள் கணவர்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற ஒரு  இமேஜு  உலாத்திக் கொண்டிருக்கிறது.

நிஜவுலகத்தில்  அப்படியே உல்டா !

டி.வி  யில் சில சானல்களில் தினமும்  நிலம் வாங்குங்க என்று  கூவிக் கூவி அழைக்கிறார்கள் .
அந்த    அழைப்பினால் கவரப்பட்டு (.ஏமாந்து...?)  நிலம் வாங்கியவர்களில் ஒரு பகுதியினராவது
கடைசியாக சரபேச்வரரிடம் வந்து சரணடைந்து  பேப்பரில் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள் .

இதை நான் என் மாணவியினிடம்  சொன்னேன் .

அவரோ  மேடம் நீங்க   இன்னொன்னு  கவனிச்சீங்களா ?
   இவங்க கொடுத்த சீட்டு  பின் பக்கம்   சாமி படிக்காம வுட்ருவாரோன்னு  நெனச்சிகிட்டு   ஜாக்கிரதையா பக்க முடிவில் வலது  சைடில்
சில பேர்  P.T.O   ல்லாம் போட்டு எழுதறாங்க என்றார் !

முதலில் சிரிப்பு வந்தாலும் 
அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு  என்கிற உண்மையை ஒத்துக்கொண்டே ஆகணும்.

இதே போல திருச்சி அருள்மிகு  வெக்காளி அம்மன் கோயிலுக்குப் போன போது
ஒரு  மனிதர்  பாவம் தன்  கஷ்டங்களை  எல்லாம்  நாலஞ்சு  பக்கத்துக்கு  எழுதி ஸ்டேப்ளர்  பின்  போட்டு  அதைக் கலெக்ஷன்  பண்ணுகிறவரிடம்   கொடுத்தாராம் .

மற்ற யாராவது நம்மை  சாமிக்கு லெட்டர் எழுதித் தரச்சொல்லி சொல்லும் போது   காமெடி  மேட்டர் ரொம்பவே இருக்கும்.

சில பேருக்கு நாம் வேண்டுதல் விண்ணப்பம் எழுதித் தரும்போது மனுஷங்களுக்கு லெட்டர் எழுதும்போது   எழுதற மாதிரி  அன்புள்ள ..........  கடவுளுக்கு என்றெல்லாம் எழுதச் சொல்வாங்க !

 இன்னும்  சில பேர் பாயிண்ட் பாயிண்ட்டா  நம்பரெல்லாம் போட்டு எழுதச் சொல்வாங்க!

ஒரு சிலர் அடிக்கோடு (underline ) போடுமாறு கூட சொல்வார்கள்.

 எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்குமாறு கடவுளுக்கு  ஒரு  ரிக்வெஸ்ட் கொடுப்பார்கள் .

ஏதோ எழுதினேன் என்றில்லாமல் ..............  கூட இதில் அடக்கம்

 அடுத்தவர்களுக்கு என்னும் போது காமெடியாத்தான் இருக்கு!

தலை வலியும் காச்சலும் தனக்கு வரும்போதுதான் ..........வேற விதமா இருக்கு .

ம்ஹூம் ....  கடவுளின் ரோல்  அவ்வளவா புரியல!                  

சொல்லப் போனால் கடவுள் என்பவரை  நாம் எல்லோருமே நாம் கேட்டதைக் கொடுப்பவர் ,
இன்னும் சரியாகச் சொன்னால் நமது ஆசைகளை நிறைவேற்றும் கடமை அவருக்கு உண்டு .என்றே நினைக்கிறோம்.

அதைச் சரியாகவும் சீக்கிரமும் செய்யும் பட்சத்தில்  இன்சென்டிவ் போனஸ்  போன்றவை அவருக்கு proportionate to performance   ஆகவும்  நாம்  எதிர்  மொய் எழுதும் பாணியில் செய்கிறோம் என்பதுதான் எனக்குப் புரிகிறது.
performance  சரியில்லாதபோது கார்பொரட்  பாணியில் சொல்வதானால் 
Pinkசீட் கொடுக்கிறோம். 

இப்படித்தான்  ஓர் நாள்   என் மாணவி  ஒருவரிடம் 
என் உடல்நிலை செய்துகொண்ட ஆப்பரேஷன்கள்  பற்றி பேசும்போது நான்  கடந்து  வந்த  பாதை என்பது  ராஜ வீதியாக இல்லாமல்  கற்களும்  முட்களும் நிறைந்த பாதையாக இருந்தது,
கடவுள் ரொம்பவே கஷ்டங்களை எல்லாம் கொடுத்தார் என்றேல்லாம்  
விலா வாரியாக நெஞ்சில் உணர்ச்சி பொங்க  கேட்பவர் மனம் உருக பழைய  அழுகாச்சி  சினிமா  மாதிரி சொல்லிக்கிட்டு இருந்தப்போ
அவர் ரஜனிகாந்த் ஸ்டைலில்
"மேடம் கவலைப்படாதீங்க .
கடவுள்  நல்லவங்களுக்கு   மட்டும்தான்   பரீக்ஷை  வைப்பார் 
பிறகு எல்லாம் நல்ல படியாக முடித்து வைப்பார் .
இதை எல்லாம் நீங்க ஒரு டெஸ்ட் மாதிரின்னு நெனச்சுக் கோங்க "என்றார்  ..

இது என்ன கடவுள் எனக்கு நல்ல ஒரு ஹை போஸ்ட் குடுக்க   என்ட்ரன்ஸ்  எக்சாமா  வைக்கிறார்  .என்றேன் 
கடவுளின் பக்திப் பாடல்களை நான் உச்சரிக்கிறேன் .
ஆனாலும்

என்னால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதுதான் உணர்தற்கு  அரியன் என்பதோ ?22 comments:

 1. ம்ஹூம் .... கடவுளின் ரோல் அவ்வளவா புரியல! //உங்களைப் போல பலர் தவிக்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மையைச் சொன்னால் கடவுளைப் புரிந்து கொண்டவர்கள் ரொம்பக் கம்மி.

   Delete
 2. ///ஆன்மிகம் பத்தி பத்திரிகைகளில் எழுதியுள்ளேன் .
  ஆனால் பதிவில் இது வரை எழுதியதில்லை .///

  அம்மா தாயே அந்த தவறை இங்கு செய்து வீடாதீர்கள் வேண்டுமானால் இன்னொரு வலைத்தளம் ஆரம்பித்து அங்கே எழுதிக் கொள்ளுங்கள். இப்படி நான் சொன்னபடி செய்தால் உங்களுக்கே நான் கோயில் கட்டி கும்பிடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஹை! தமிழ் நாட்டில் குஷ்புவிற்கு அப்புறம்
   எனக்கு ஒரு கோயிலா ?
   பெரிய உண்டியலுக்கு ஆர்டர் பண்ணிவிட்டேன்.

   Delete
  2. அதற்கு டூப்ளிகேட் கீ நான் ரெடிபண்ணிட்டேன்

   Delete
 3. புரிந்து கொள்வது சிரமம்... ஆனால் உணரலாம்...!

  ReplyDelete

 4. ///பிறகு நானும் என் வேண்டுதலை எழுதிக் கொடுத்தேன் .//
  என்ன வலைதளத்தில் எழுதி புகழ் பெற்று அதன் பின் தமிழக முதல்வராக வேண்டுமென்றா எழுதி போட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹி....ஹி
   அப்படி முதலமைச்சர் பதவி கிடைத்தால் 2013ல் 365 நாட்களில் 317 பதிவு போட்ட உங்களுக்கே கொடுத்துவிடுவேன்.
   அப்புறம் வடிவேலு மாதிரி யாராவது 300 பதிவு போட்டா
   நீங்கல்லாம் முதலமைச்சரான்னு கேட்டா நீங்க சமாளிச்சுக்கோங்க!

   Delete
 5. ///குறைந்தது 30% பெண்கள் தன் கணவன் திருந்தவேண்டும் கணவனுக்கு நல்ல புத்தி வர வேண்டும்//

  அப்ப 70% ஆண்கள் "என்னை போல நல்ல அப்பாவி" ஆண்களாக இருப்பார்கள் போலிருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. அம்மோவ் , கணக்கு நீங்க ரொம்ப வீக்கா?
   நான் சர்வே பண்ணியது உலக ஜனத்தொகையில் 0.00000000000000000000000000000001% கூட கிடையாது.

   அதை வச்சு நீங்க உலக அளவில் 70% அப்பாவின்னு சொல்றதே தப்பு .
   அந்த தப்பு 70%ல் நீங்களும் ஒருத்தர்ன்னு அதுவும் நீங்களே சொல்றது ரொம்பவே தப்பு.
   அப்பாவி என்கிற சர்டிபிகேட் வீட்டிலே இருக்கிறவங்க தரணும்.
   நீங்க சர்வே பர்சென்டேஜ் புரிஞ்சுகிட்டது எனக்கு ஒரு சுவாரசியமான பதிவுக்கு ஐடியா குடுத்திச்சு.

   Delete
  2. வீட்டுல இருக்கிறவங்க கிட்ட அப்பாவி என்கிற சர்டிபிகேட்கேட்டேன் அவங்காளும் என் அப்பாவிதனத்தை புரின்சுகிட்டுதந்தாங்க ஆனா அதில் ஒரு சின்ன பிழை அவங்களுக்கு தமிழ் அவ்வளவாக வராததால் "அடப்பாவி: என்று தப்பாக அடிச்சு கொடுத்தீட்டாங்க... நீங்க சரி செய்துவிட்டு படிக்கவும்

   Delete
 6. ///பத்திரிகை ஜோக்குகளிலும் பதிவுலகத்திலும் மட்டுமே மனைவிகள் கணவர்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற ஒரு இமேஜு உலாத்திக் கொண்டிருக்கிறது.///

  என்ன சொல்லவரீங்க அப்ப பூரிக்கட்டையால் அடிப்பதெல்லாம் கொடுமையில் சேராதா என்ன?


  சரி உங்க சொல்படி கணவர்கள்தான் மனைவியை கொடுமைப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம் சரிதானே ஆனா எல்லா அம்மாகளும் தன் மருமகள்தான் தன் பிள்ளையை கொடுமைப்படுத்துவதாக சொல்லுகிறார்கள் கண்ணிர் வடிக்கிறார்களே அதெல்லாம் அப்ப பொய்யா

  ReplyDelete
 7. ///நான் கடந்து வந்த பாதை என்பது ராஜ வீதியாக இல்லாமல் கற்களும் முட்களும் நிறைந்த பாதையாக இருந்தது,கடவுள் ரொம்பவே கஷ்டங்களை எல்லாம் கொடுத்தார்///

  தப்பு உங்க மேலேதான் அவர் அண்ணா நகர் போன்ற இடங்களில் அழகான ரோடு போட்டு தந்திருக்கிறார் அங்கே எல்லாம் போகாம ஏதோ கிராமத்து பக்கம் கற்களும் முட்களும் நிறைந்த பாதைக்கு சென்று அவரை குறை சொல்லுரீங்க அது நியாமா? அவரும் கிராமத்துல நல்ல ரோடு போடணும் என்றுதான் நினைக்கிறார். ஆனால் அதற்கான பட்ஜெட்க்கு இன்னும் அப்புருவல் கிடைக்காமல் தினமும் அரசியல் தலைவர்களின் வீட்டுக்கு முன்னால் அவரும் தவம்தான் இருக்கிறார்

  ReplyDelete
 8. ///கடவுள் நல்லவங்களுக்கு மட்டும்தான் பரீக்ஷை வைப்பார் ///

  ஆனால் கெட்டவங்க கடவுளுக்கே பரிட்சை வைப்பார்களே அதை உங்களுக்கு அந்த மாணவி சொல்லலையா என்ன

  ReplyDelete
 9. /என்னால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.//

  அட இது சூச்சுபீ மேட்டருங்க நான் கடவுளை மிக நன்றாகவே புரிஞ்சு வைச்சுருக்கேன். அவர் என்னைப் போல நல்லவரை போட்டு பாப்பார். ஆனா கெட்டவங்களுக்கு என்ன வேண்டுமானல் செய்து தருவார்

  ReplyDelete
 10. இதுபோல பல ஆன்மிக பதிவுகளை எழுதி வாருங்கள். படிக்க சிரிக்க பதிவு மிக உதவியது நன்றீங்க.
  உங்க பதிவு படித்த பின் என் மனதில் ஒரு புதிய பதிவிற்கான ஐடியா உதித்துள்ளது அதைபற்றி பதிவு மிக விரைவில்

  ReplyDelete
 11. படித்து பாருங்கள் கடவுளுடன் விளையாடி ஜெயிக்க முடியுமா? http://avargal-unmaigal.blogspot.com/2013/05/blog-post_29.html

  ReplyDelete
 12. கடவுளுக்கு மாற்று (ஒரு புதிய கடவுள் அறிமுகம்) http://avargal-unmaigal.blogspot.com/2012/04/blog-post_26.html

  ReplyDelete
 13. இது, இது, இதுக்குத்தான் நிறைய பேர் சாமி கும்பிடறேன்னுட் கோவிலுக்கு போறாங்க. அதாவது இன்னும் தாங்க, இன்னும் தாங்கன்னு கேக்கறதுக்கு. இதுவரைக்கும் தந்ததுக்கு நன்றின்னு யாராச்சும் எழுதியிருந்தாங்களா? ஒருத்தர் கூட இருக்க மாட்டாங்களே.

  ReplyDelete
 14. அழகான ஒரு பதிவு! அதுவும் நகைச்சுவையுடன்! இங்கு மக்கள் எழுதிக் கொடுப்பது என்பது ஒரு Psychological relief அதாவது நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை! அந்த நம்பிக்கை பலரை சந்தோஷமாக்குகிறது என்றால் அதுவும் நல்லதுதானே!! தொடர்கிறோம் உங்கள் வலைபூவை!

  ReplyDelete