Sunday 8 September 2013

பூனையின் மண்ணாசை

 மனிதன் மட்டுமே மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கொண்டவன் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று  என்  எண்ணத்தையே புரட்டி போட்டுவிட்டது.பூனைக்கும் கூட நம்மளை மாதிரியே சொல்லப்போனால்  நம்மளை விடக்கூட அதிகமான மண்ணாசை இருக்கு.
எங்க வீடு ஒரு அபார்ட்மெண்ட் . எங்க வீட்டுக்குப்பின்னால் ஒரு நடிகை குடியிருக்கிறார் .  அவர்தான்  பூனை வளர்க்கிறார். ஆனாலும்  அந்த  பூனை முக்கால் வாசி நேரம் எங்க  அபார்ட்மெண்ட்டில்தான்   வாடகை இன்றி  குடியிருப்பு..
நடிகையின்   பூனை என்பதாலோ என்னவோ  அபார்ட்மெண்ட் வேலையாட்கள் முதல் கீழே சூப்பர் மார்கெட்டில் உள்ளவர்கள் வரை எல்லோருக்கும் செல்லம்.
ஆனால் எனக்கும் அதற்கும் ஏழாம் பொருத்தம் ..சும்மா போய்க்கொண்டு இருக்கும் என்னை பார்த்து சிநேக பாவமாக 'மியாவ்" சொல்வதில்லை.
 நானும் கொஞ்சம் கடிசாகத்தன்  பார்ப்பேன்.
  தொடர்ந்து ஒரு பத்து  நாட்களாக எங்க வீட்டு பால்கனியில்  உள்ள"  ஸ்லாப் " பில் வந்து குடிபுகுந்து  ராத்திரி பகல் என்று பார்க்காமல்  ஒரே காட்டுக்கத்தல் .
தூககம் வேறு கெட்டுப்போனது.
 விரட்டினாலும் போவதில்லை .ஒரு நாள் அது எங்கேயோ போயிருந்த போது 
 காலியாக இருந்த இடத்தில் வேறு சில சாமானை வைத்துவிட்டேன்..
கொஞ்ச நாழி கழித்து திரும்பி  வந்த பூனை  என்னமோ  அதும் பேர்ல பட்டா போட்ட  இடத்தை  நான் ஆக்கிரமிப்பு செய்து விட்ட மாதிரி என்னை வாழ் நாளிலேயே யாரும் முறைக்காத ஒரு முறைப்பு  லுக் !பூனை பாஷையிலேயே ஒரு அரை மணி சாவகாசம்  என்ன என்னவோ திட்டியது. பத்தாதற்கு என் மகன்  வேறு  பூனை மொழியில் டிகிரி வாங்கிக்கிழித்த மாதிரி  உன்னைக் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி  திட்டுது  என்று பூனையின் மியாவுக்கு  கோனார் நோட்ஸ் போட்டான் ,
அதற்கு பிறகு  இன்னமும் எங்கள் இருவருக்கும்  இடையே  கார்கில் பார்டரில் உள்ள நிலையே தொடருகிறது.

4 comments:

  1. பூனை அவ்வப்போது தன் இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். சும்மா ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் தான்... அனுமதித்துவிடுங்கள்... அதுவே போய்விடும்... எனக்கும் இந்த அனுபவம் உண்டு....

    ReplyDelete
  2. முக்கியமான வேண்டுகோள்;

    In settings -> Post comments -> Show word verification -> No

    என்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை

    ReplyDelete
  3. மாற்றியமைக்கு நன்றி...

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது போலெல்லாம் இல்லை.
    தலை திபாவளிக்கு வந்த மாப்பிள்ளைக்கு எப்படி போகவே மனசு இருக்காதோ அது மாதிரித்தான் இந்த பூனைக்கும்..
    அபார்ட்மெண்டில் தான் உள்ளது வீட்டுக்கு வரவிடாமல் தடுத்துவிட்டேன்.
    எனவே கீழே நடந்து போகும்போது என்னைப்பார்த்து வில்லன் லுக் தான்

    ReplyDelete