Wednesday, 11 September 2013

தன்னம்பிக்கை என்றால் இதுவல்லவோ தன்னம்பிக்கை !



  நான் ஒரு கம்பெனிக்கு மொழிபெயர்ப்பாளராக போன வருடம் சென்றிருந்தேன் . அந்த  கம்பெனியில் இருந்த ஒரு சிறிய புல்லின் புகைப்படம் இது.
PA250101.JPG  மிகச்சிறிய  புல் அது. . அதன் மீது யாரோ ஒரு ஸ்பாஞ்சை தூக்கிப் போட்டுவிட்டார்கள் ..அந்த புல்லை விட நிச்சயம் 100 மடங்கு க்கு மேலே எடை கொண்ட ஸ்பான்ஜ் அது. ஆனாலும் கொஞ்சம் கூட அசராமல்  அந்த புல் அந்த ஸ்பான்ஜ் உள்ளே புகுந்து எப்படியோ மேலே வளர்ந்து விட்டது..அந்த புல்லின் உயரம் 15
 செ .மீ க்கும் குறைவு என்பதாலும் எனக்கும் போட்டோ திறமைகள் பத்தாது என்பதாலும் என்னால் முடிந்தவரை எடுத்த போட்டோ !
 தன் மீது  அவ்வளவு  பெரிய பாரத்தைப் போட்டவுடன் அந்த புல்
 எந்த வாஸ்து  நிபுணரிடம் போகமுடியும் ?
எந்த ஜோசியக்காரரிடம்  போகமுடியும் ?
எந்த மதக்கடவுளை எப்படித் தேடிப் போகமுடியும் ?
அதற்கு யார் ஊக்கம் கொடுத்தார்கள்?
எந்த அரசு இலவசமோ ,நிதி உதவியோ  (subsidy கொடுத்தது?
கூட அதற்கு பார்ட்னர் யாரும் உண்டோ ?
யாரிடம் போய் தன்  கவலையை சொல்லமுடியும்?
யோசித்துப்பாருங்கள்

ஒரு அறிவுள்ள ஒரு புல் தன்னை ஆம்  தன்னை மட்டுமே நம்பியது.
ஸ்பான்ஞ்சின் அடிவாரத்திலிருந்து ஒரு புல்லால்  உள்ளே புகுந்து வளருவது என்பது ரொம்பவே கஷ்டம்..
எப்பொழுதெல்லாம்  மனச்சோர்வு அடைகிறேனோ அப்பொழுதெல்லாம் இந்த போட்டோவைக் கண் முன்னே நிறுத்தி என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன் .


4 comments:

  1. நல்ல அனுபவம்... போட்டோ தெரியவில்லையே.... தொடர்ந்து எழுதுங்கள்....

    ReplyDelete
  2. ஒரு சிறிய விஷயம், ஆனால் எடுத்துக்கொண்ட விதம் அருமை ! பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  3. ஊக்குவித்ததற்கு நன்றி

    ReplyDelete