Monday 9 September 2013

பதிவர் சந்திப்பு 2013

பதிவர் சந்திப்பு 2013 பற்றி எல்லோரும் எழுதி ஓய்ந்த பின் இவ்வளவு சுறுசுறுப்பாக ஏன்  எழுதுகிறேன் என்று பலரும் நினைக்கலாம் .நான் எழுதும் பதிவுகள் யாராலும் படிக்கப்படுகிறதா என்றே  தெரியாத நிலையில்  ( என் பதிவிற்கு பின்னூட்டங்கள்  எதுவுமே  இல்லாமல் இருந்தது )எனக்கு ஒரு மெயில் .ஸ்கூல் பையன் அவர்களின் பின்னூட்டம் .
ஸ்கூல் பையன் அவர்களுக்கு  என் நன்றி.
நான் கேட்காமலே எனக்கு எப்படி செய்வது  என்பதை விளக்கினார் .
பிறகுதான் என் பதிவிற்கும் பின்னூட்டங்கள் இருந்தததைப் பார்த்தேன்
ஆஹா நாம் எழுதுவதை படிக்கவும் தமிழ் கூறும்  நல்லுலகில் நாலு பேர் இருக்கிறார்கள் என்றதும்  நடிகை ரேகா  ஒரு இந்திப் படத்தில் என் கால் தரையிலேயே இல்லை  என்று பாடுவதுபோல் ஒரு டான்சு  ஆடிவிட்டுத்தான் இந்த பதிவை எழுதுகிறேன் .
 எனது உடல் நிலை 3 மாதங்களாக  சரியில்லாத காரணத்திலால் என்னால் வேலைக்குப் போகவில்லை .மன அழுத்ததிலிருந்து விடுபட ஏதாவது செய்ய நினைத்த போது ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா என நினைத்தேன் .அதில் தமிழ்வாசி பிரகாஷின் பிளாக் உதவியாக இருந்தது .திண்டுக்கக் தனபாலன் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார் .அந்த சமயம் தான் பதிவர் திருவிழா நிகழ்ச்சி பற்றி பார்த்தேன் , திருமதி சசிகலா அவர்களை தொடர்பு கொண்டு  பதிவர் திருவிழா வந்தேன்.
புது மனிதர்களாக இருந்ததால் நான்தான்  நிறைய பேரிடம் பேசவில்லை .

ஆனால் நிகழ்ச்சி என்னைப்பொருத்த வரை திருப்தியாக இருந்தது .
நிறைய புது மனிதர்களை சந்தித்தேன்.
நிறைய புது விஷயங்களை கற்றுக்கொண்டேன் .
இதுவரை பார்க்காத ஒரு புது உலகத்தில் நுழைந்த ஒரு உணர்வு..
உணவு ரொம்பவே சூப்பர்,
ஒவ்வொருவருக்குள்ளும்  இருந்த தனித்  திறமைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தது,
மிக மிக   நாகரிகமான முறையில் நடந்தது.
விசில் சத்தம் இல்லை என்றால் கலகலப்பு இருந்திருக்காது .
மதியம் வெக்கை அதிகமானதாலும்  தூக்கம் வந்துவிட்டதாலும் மூன்று  மணிக்கு கிளம்பிவிட்டேன் .
மிக மிக திருப்திகரமான ஒரு நிகழ்ச்சி .

13 comments:

 1. என் பெயரைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி... மேலும் தங்களது தளத்தை வடிவமைக்க www.bloggernanban.com என்ற தளத்தில் சென்று பார்க்கவும். நன்றி.

  ReplyDelete
 2. பதிவர் சந்திப்பு பற்றிய உங்கள் பகிர்வு அருமை...


  உங்கள் வலையை வடிவமைக்க தாங்கள் இன்னும் மெயில் அனுப்பவில்லையே.... thaiprakash1@gmail.com

  ReplyDelete
 3. மேடையில் அறிமுகப்படுத்திக் கொண்டீர்களா?

  ReplyDelete
 4. மேடையிலும் அரறிமுகப்படுத்திக் கொண்டடேன்.
  திரு. மயிலன் கூட தாங்கள் பேசிக்கொண்டிருந்த போது நான் தங்களை சந்தித்தேன்
  ஐஸ்கிரீம் சாப்பிடவில்லையா என்று கூட கேட்டேன்

  ReplyDelete
 5. இதை படிக்கும்போது நான் ஒரு வருடத்திற்கு முன்பு இப்படிதான் ஆரம்பித்தேன் என்று நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்...... அடுத்தவர் படிக்கவில்லை என்று வருத்தம் வேண்டாம் !

  ReplyDelete
  Replies
  1. ஊக்குவித்ததற்கு நன்றி.

   Delete
 6. மிக்க மகிழ்ச்சி.... தொடர்ந்து எழுதுங்கள்...

  Blog - ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்க : dindiguldhanabalan@yahoo.com

  ReplyDelete
  Replies
  1. ஊக்குவித்ததற்கு நன்றி.

   Delete
 7. Followers gadget சேர்த்துக் கொள்ளவும்..

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுதுதான் அரிச்சுவடி ஆரம்பித்திருக்கிறேன். Followers gadget ஐ எப்படி செய்வது என்று தெரியவில்லை.

   Delete
 8. அபயாஅருணா said...
  // நானும் கூட பதிவர் திருவிழா பற்றி எழுதியுள்ளேன் .
  ஆயினும் நீங்கள் compille செய்துள்ளது நன்றாகவே உள்ளது. //

  சகோதரிக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட பதிவினை இணைத்து விட்டேன்.
  09.09.2013 / பதிவர் சந்திப்பு 2013
  http://abayaaruna.blogspot.in/2013/09/2013.html

  ReplyDelete
 9. உங்களைப்போல நானும் புதிய பதிவர்தான்..தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 10. வா்த்துக்கள்தொடர்ந்து எழுதுங்க

  ReplyDelete