Sunday, 15 September 2013

வாஸ்து மளிகை

வாஸ்து  என்ற ஒன்று மனிதர்களை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது  என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை .
என் நோக்கமும் அதுவல்ல .
சரி வாஸ்து பார்ப்பது சரியா தப்பா என்று ஆராய்வதா வாக்குவாதமா  என்று கேட்டால் அது வும்  இல்லை . அது முழுக்க முழுக்க நீயா நானா கோபிநாத்தின்   ஏரியா  . நான் நுழையத் தயாரில்லை .
 பார்க்காமலேயே கோப்பெரும்  சோழனும் பிசியராந்தையரும்
நட்பு கொண்ட மாதிரி நானும் கோபியும் ஒருவரை ஒருவர்  பார்க்காமலேயே  உர்  உர்  ஆகவேண்டாம் என்று தீர்மானித்துவிட்டேன்  ,
 பிறகு என்னதான் நோக்கம் என்றால்  மேலே படியுங்கள் புரியும்.
 ஒரு இரண்டு வருடம் முன்பு  என் மகன் ஹைதராபாத்தில் பணி புரிந்த போது  நான் போய்  ஒரு 20 நாள் தங்கியிருந்தேன் . நான் முன்பே அங்கு 7 வருடங்கள் பணி புரிந்த காரணத்தால்  என்னால் தனியாக எங்கும் ஊர் சுற்றும் தெகிரியம்  உண்டு. மொழி பிரசினை கிடையாது.
என்னிடம் இருந்த சின்ன பர்ஸ் கிழிந்து விட்டதாலும் வேறு சில சாமான்கள் வாங்க வேண்டியும் நான் கோடி என்ற இடத்துக்கு போனேன் . அங்கே ஒரு 12 வயது மதிக்க்கூடிய  ஓர் பையன் வாஸ்து  பர்ஸ்  வாஸ்து பர்ஸ் என்று கூவிக்கொண்டு  சூரியா  ஒரு படத்தில் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி உபயோகித்தது என்று சொல்வாரே அந்த ரேஞ்சில் இந்த பர்ஸ்  நமது ராமர்
 என் டி ஆர் , மற்றும்  ஏ  . நாகேஸ்வர ராவெல்லாம் இந்த பர்ஸ்  வாங்கியதன் பின் தான் பிரபலம் ஆனார்கள். இந்த பர்ஸ்சை இவர்கள் குடும்பம் மட்டுமே ஒரு சிலருக்கு மட்டுமே செய்து கொடுத்த தாகவும் ,இப்பொழுது  மாநிலமும் மன்பதையும் பயனுறும் வகையில் இப்பொழுது நிறைய செய்து அதுவும் ஏழைகள் கூட வாங்க வகை செய்யும் விதமாக  மிகவும் சல்லிசாகவும் விற்பதாகக் கூறினான்
பிறகு ஒரு  50 வயது மதிக்கத்தக்க  ஒரு ஆள் வந்து  தெனாலி யிலிருந்து . வருவதாகவும்  போன முறை  ஹைதராபாத் வந்த போது  பர்ஸ் இவனிடம் வாங்கியதிலிருந்து  பணத்திற்கு தட்டுப்பாடே இல்லை என்று சொல்லி ஒரு 10 பர்ஸ் வாங்கினான் . அதைப்  பார்த்து  ஒரு நாலு பேர் பர்ஸ் வாங்க அவன் பேச்சு சாதுரியத்தை கேட்டவே  கும்பல் கூடியது..
 இது  ஒரு அக்மார்க் பொய் என்று தெரிந்தும் நான் என் தேவை கருதியும் 20 ரூபாய் பர்ஸுக்கு  எட்டு கொட்டேஷன் வாங்குவார்களா,இதுக்கொசரம் கோடி  ஏரியா வுக்கே பாதயாத்திரை  போகணுமா என்ற  (சோம்பேறித்தனமா   ?) என்ற அறிவும் உணர்த்த நானும் ஒரு பர்ஸ் வாங்கினேன்.
 பிறகு வேறு இடங்கள் சுற்றி  செகந்திராபாத் பஸ்  ஸ்டாண்ட் வந்தேன் .
ஒரு டீக்கடையில் இருந்த ஆளை ஒருத்தன் சத்தமாக சீக்கிரம் வா மாமா என்றான். யாரென்று பார்த்தால் நம்ப 12 வயது வியாபாரியும்  தெனாலி யிலிருந்து .  வந்ததாக சொல்லப்பட்ட ஆளும்  !
 பிறகு  கோடி"யில் செய்த மாதிரியே!
 சே! என்ன செட்டப்புடா!
 என்று நினைத்தாலும் எனக்கு அது  ஒன்றும் தப்பாக தெரியவில்லை.
 ஏனென்றால் " என் மேனி அழகின் ரகசியம் ..... என்று பெரிய பெரிய தயாரிப்புகளுக்கு  பிரபல அழகிகள்  விளம்பரம் தந்த போது யாருமே அது உண்மையா  என உரசிப்பார்த்தோமா என்ன,  அப்புறம் இதை மட்டும் ஏன் ?
அவன் ரேஞ்சிற்கு இதுதான் முடியும். . ஓகே  !
 ஆனாலும் வீட்டுக்கு வந்தும் கூட அவனின் வியாபார உத்தி  எனக்குப் பிடித்திருந்தது.
பிறகு நான் என் வீட்டு  வேலை ஆபிஸ் வேலை களில்  பிசியாக இருந்த காரணத்தால் அவனுடைய உத்தியை பின்பற்ற முடியவில்லை.
சரி இப்போ டயம் இருப்பதால் நானும் அவன் போல் செய்யலாம் என்று ரூம் போடாமல் யோசித்து ஒரு  பிசினஸ் செய்யப் போகிறேன் . இதில் நீங்களும் பங்கேற்கலாம்.
 சரி என்ன பிசினஸ்  என்றால் வாஸ்து அரிசி வாஸ்து துவரம்பருப்பு போன்ற அனைத்து சூப்பர் மார்கெட் சமாசாரங்களும்  !
உதாரணமாக எங்களது வாஸ்து நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வாஸ்து பிரகாரம் ஆரம்ப கால கட்டங்களில்  வானத்தை பார்த்து தான் வளர வைப்போம்.
பிறகு அறுவடைக்கு முன் வாஸ்து ரூல்ஸ் படி  நாம் வாழும் பூமியை நோக்கி வளர்ப்போம். ( இது எப்படி?)
இது எங்கள் குடும்பம் மட்டுமே செய்து வந்தது. இதற்கு  ஒரு அறு நூறு வருட சரித்திரம் உள்ளது. இதை யார் வேண்டுமானாலும்  பழைய ஏடுகளில் பார்க்கலாம். ஆனால் ஒன்று அந்த ஏடுகள் பிராப்தம் உள்ளவர்களுக்கு  மட்டுமே கிடைக்கும். ( இது சூப்பரா இருக்கில்ல )
 இதற்காக தமிழகமெங்கும் .... (. ஏமாத்தறதுன்னு  பிளான்  போட்டாச்சு, அப்புறம் எதுக்காக தமிழ் நாடு மட்டும் ) என  இல்லாது உலகம் முழுவதும் மற்றும் செவ்வாய்  புதன் கிரகங்களில் உள்ளவர்களிடம் இருந்தும் ஏஜென்சி மற்றும் முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
 ( ஒரு ஆயிரம் இனா  வானாவாவது   அப்ளை பண்ணாது?)
 முகவர் கட்டணம்  ரூபாய் 10000.
 பார்த்து காமெண்டு போடும் பதிவர்களுக்கு 50% சலுகை உண்டு.
இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே!
 ( அப்புறம் நாங்களே ஓடிடுவோமில்லே )
 எனவே உங்கள் ஏஜென்சிக்கு முந்துங்கள்.
 அணுக வேண்டிய முகவரி
  வாஸ்து மளிகை
 எண்  420, ஃ பிராடு தெரு.
ஜேப்படி அவின்யு ,
டுபாக்கூர் நகர்,
 

13 comments:

  1. // என்று நினைத்தாலும் எனக்கு அது ஒன்றும் தப்பாக தெரியவில்லை. ஏனென்றால் " என் மேனி அழகின் ரகசியம் ..... என்று பெரிய பெரிய தயாரிப்புகளுக்கு பிரபல அழகிகள் விளம்பரம் தந்த போது யாருமே அது உண்மையா என உரசிப்பார்த்தோமா என்ன, அப்புறம் இதை மட்டும் ஏன் ?//

    எனக்கு 50% டிஸ்கவுன்ட் உறுதி...

    ReplyDelete
  2. இதோ வந்து விட்டேன்... விண்ணப்பத்தை அனுப்புகிறேன்...!!!

    ReplyDelete
  3. ஓ! பிரமாதமான ஐடியாவா இருக்கே! எனக்கும் 50% சலுகை உண்டு...:))

    ReplyDelete
    Replies
    1. முதலில் காமெண்ட் போட்ட உங்கள் மூவருக்கும் ஸ்பெஷல் சலுகையாக வாஸ்து சாமான்களை ஏஜன்சி மூலம் முற்றிலும் இலவசமாக விற்கும் உரிமை அளிக்கப்படுகிறது .

      Delete

  4. அப்போதைய பாம்பேயில் இப்படித்தான் ஏமாந்து பேண்ட் துணி வாங்கினேன். நீங்கள் சொன்ன அதே டெக்னிக். அசல் டெரிலின் என்று நிரூபிக்க துணியைக் கொஞ்சம் எரித்துக் காண்பித்தார்கள். மிகவும் சலிசாக இருக்கவே வாங்கினேன். ஊரில் அதைத் தைக்கக் கொடுத்தபோது டெய்லர் எப்படி ஏமாந்தேன் என்று கதை கேட்டார்..! இப்போது தோன்றுகிறது உங்கள் ஐடியா எனக்கு வரவில்லையே என்று. . பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஆரம்பிச்சாச்சா ?! அப்போ வாஸ்து படி பிசினஸ் பிக் அப் ஆக வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  6. பெரிய பிசினஸ் ஆளுங்கெல்லாம் இந்தியாவையே கூறு போட்டு விற்கும்போது சின்ன பையனின் வயத்துப்பாட்டுக்கான பிசினஸ் மூளைக்கு ஒரு சல்யூட்...அட்லீஸ்ட் உழைத்து சாப்பிடணும்னு நினைக்கிறானே...
    உங்கள் பதிவு இயல்பாக உள்ளது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா

    திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....!

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete