நான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும்ஸ்ரீ அன்னை
இவர்களை வழிபடுவது உண்டு.
லண்டன் போனபோது
..ஸ்ரீ அரவிந்தர் தங்கி
இருந்த
வீட்டைப் பார்க்கப் போனோம்
அவர் லண்டனில்
படித்துக் கொண்டிருந்தபோது இந்த
வீட்டில் தான் 1884- முதல் 1887 வரை தங்கி
இருந்தாராம் .
இப்போது
அந்த வீட்டில் யாரோ குடியிருக்கிறார்கள் .
என் கணவர் அந்த
வீட்டைப்
பார்க்க
ஆசைப்பட்டதால்
என்
மகன்
அங்கு
அழைத்துப் போனான் . வீட்டின்
முன்னே ஸ்ரீ அரவிந்தர் 1884 முதல்
1887 வரை இந்த வீட்டில் தான்
குடியிருந்தார் என்று நீலக்
கலர் பேக்கிரவுண்டில் பளிச்சென வெள்ளை எழுத்தில் எழுதி வைத்துள்ளார்கள்.
நான் என் கணவர் மகன் மூவரும்
அங்கே நிற்பதைப்
பார்த்து
மாடியில் குடியிருக்கும் ஒரு
மனிதர் கீழே
இறங்கி
வந்து பேசினார் .
அவர் பாகிஸ்தானியர் .
நாங்கள் இந்தியர்கள் என்று
தெரிந்துதான் கீழே வந்தாராம்.
பிறகு அரவிந்தர் பற்றியெல்லாம் கேட்டார் .
ஞாயிற்றுக் கிழமையாதலால் அவருக்குப் பொழுது போகவில்லை போல . சொந்த வரலாறு விவரமாகச் சொன்னார்.
1970 களில்
இங்கிலாந்து
வந்து
செட்டில்
ஆகி
விட்டாராம்.
அப்போது
மான்சேஸ்டரில்
வீடுகள்
500 பவுண்டுக்கெல்லாம் கிடைத்ததாம்.
சொந்த மகன்கள் இருவர்
இருந்தபோதும்
அவர்
யாரிடமும் செல்லாமல் இங்கேயே தான் இருக்கிறாராம்.. வயது
70+.
என் மகனைப்
பார்த்துப்
பெற்றோர்கள்
ஆசை அறிந்து இந்த இடத்தைக்
காண்பித்தது பற்றி
வெகுவாகவே
சிலாகித்துப்
பேசினார்..
பாசமுள்ள
மகன் என்றார் .
நானும்
என் மகன் எப்போதுமே அப்படித்தான்
என்று கூட மசாலாவெல்லாம் தூவினேன்
( ஏனோ மனதில் கீழே
இருக்கிற சூப்பர் மார்க்கெட்டில்அவனிடம் ஒரு
சாமான் வாங்கி வா என்றால் நிச்சயமாக
ஒரு மாதம் கழித்துத் தான்
வாங்கி வரும் காட்சி ஒரு சைடு டிராக்
ஆக மனதில் ஓடியதை நிறுத்த முடியவில்லை ).
நிறைய பேர் வந்து வெளியில் நின்றவாறே பார்த்து விட்டுச் செல்கின்றனர் என்றார்
காலம் தான் எப்படியெல்லாம் விளையாடுகிறது
.
இதே அரவிந்தரைப் பழி
சுமத்திய
அரசு , ……
விடாமல் . அவருக்குத் தொந்தரவு கொடுத்தது .
அதைத் தவிர்க்க
அரவிந்தர் வங்காளத்திலிருந்து பாண்டிச்சேரி
வந்தார்
.(அது பிரெஞ்சு காலனி என்பதால் )
அதே பிரிட்டிஷ்
அரசு
இன்று அவர்
இருந்த
இடத்தில் ஸ்ரீ
அரபிந்தோ என்று
மரியாதையுடன் எழுதியது மட்டுமின்றி மூன்று வருடங்கள் அவர்
தங்கி இருந்த இடத்தை யாவரும்
அறியுமாறு எழுதி உள்ளது
.
ஆன்மபலம்
என்பது இதுதானோ?
அரவிந்தர் இருந்த வீடு. நல்ல அனுபவம் உங்களுக்கு. வேறொருவர் வாங்கி இருப்பதால் உள்ளே செல்ல அனுமதி கிடையாது போலும்.
ReplyDeleteபாண்டிச்சேரி அன்னை ஆஸ்ரமம் சென்றதுண்டு.... அமைதியான இடம்.
அரவிந்த மையங்களுக்குப் பணம் நிறைய இருந்தாலும் அந்த வீட்டை விலைக்கு வாங்கி தியான மையமாக மாற்றுவது என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அமைதி கெடும் என்பதாலோ என்னவோ தெரியவில்லை இது வரை அவர்கள் வாங்கவில்லை .
ReplyDeleteஅந்த வீட்டின் உள்ளே யாருமே நுழைய முடியாது. சும்மா வெளியில் இருந்துதான் பார்க்க இயலும்
நல்லதொரு விடயம் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteநல்ல அனுபவம் தான் உங்களுக்கு. பரவாயில்லையே எழுதி வைத்திருக்கிறார்களே. அரவிந்த மையங்கள் நினைத்தால் செய்யலாம்தான்.
ReplyDeleteகீதா: பாண்டிச்சேரியில் பல முறை சென்றதுண்டு. வீட்டிற்கு வருவோரை எல்லாம் அழைத்துச் சென்றதுண்டு. அங்கு அமைதி காப்பது போல அரவிந்தர் வாழ்ந்த வீட்டையும் அவர்கள் அப்படிச் செய்யலாம்தான். நீங்கள் சொல்லும் காரணம் இருக்கலாம். நிறைய வீடுகள் இருக்கின்றதோ அக்கம் பக்கத்தில்?
மகிழ்ந்தேன் சகோதரியாரே
ReplyDeleteஅறிய தகவலை பகிர்தமைக்கு நன்றி அம்மா.
ReplyDeleteபாகிஸ்தானியர் இந்தியர் என்று தெரிந்து(ம்) வந்து பேசியது வியப்பு. நல்ல அனுபவம்.
ReplyDelete