Monday, 4 July 2016

உத்தியோகப் பொறாமைகள் .


 திரு பழனி கந்தசாமி அவர்களின் பதிவைப் படித்ததும் மலர்ந்த  பழைய நினைவுகள் .

 நாம் வேலை பார்க்கும் இடத்தில் பல விதமான பொறாமைகளை
அவரவர் வேலைக்குத் தகுந்தாற்  போல் . சந்தித்திருப்போம் .

எனக்கும் பல விதங்களிலும் நடந்துள்ளது.
அதில் என்னால் மறக்க முடியாதது இது .

 கம்பியூட்டர் வராத காலம் அது .
 வங்கியில் நடந்த அன்றைய  பண விவகாரங்களை அது அதற்கான லெட்ஜ்ர்களில் எழுதி அன்றையக் கணக்கை சரி செய்யவேண்டும் ,
ஆங்கிலத்தில் சொல்வதானால் அன்றைய   DAY  BOOK       அட்ஜெஸ்ட் செய்யணும் .

  வங்கிகள் அரசுடைமை ஆக்கும் முன்பே வேலையில் சேர்ந்திருந்த ஒரு சீனியர் ஒருவர்.

 அவருக்கு வயது அறுபதுக்கும் மேலே .

வேலையில் சேரும்போது
அந்தக் காலத்தில் வயது எல்லாம் என்ட்ரி  போடும் வழக்கம் இல்லை .
 எத்தனை வயது வரை வேண்டுமானாலும் வேலை பார்க்கலாமாம் .

 பின்னாளில் ரெக்கார்டுகளை மெயின்டைன் பண்ணணும் என்ற நிலைமை வந்த போது நிறையப்  பேர் வயது குறைத்துச் சொல்லிவிட்டனராம் .

 இவரும்  அந்தக் குழுமத்தில் ஒருவர் .

  சாதாரணமாக டே புக் அட்ஜெஸ்ட் ஆக வில்லை என்றால்
 வித்தியாசம்  9 என்ற எண்ணால் வகுக்க முடியும் என்றால் அது நம்பர்  ட்ரான்ஸ்போஸிஷன்   .
( அதாவது  ரூ  450.00 என்ற எண்ணை   ரூ 4.50 என்று எழுதுதல்
வித்தியாசம் 445.50 . இதை 9 ஆல் வகுத்துக் கண்டுபிடிப்போம் .)

 இது மாதிரி  நிறைய ட்ரிக்குகள் .

  அந்த சீனியர் ரூபா அணா பைசா காலத்தில் வேலை பார்த்திருக்கிறார்.

 அதனால் நிறைய பேர்
 ரூபாயிலிருந்து அணா வாக மாற்றும் போதும்
 அணாவிலிருந்து   பைசா வாக  மாற்றும்போதும் ,
தவறு பண்ணியிருப்பார்கள்
,அதை முதலில்  செக் செய்யவே ரொம்பப் பிரயத்தனம் பண்ண வேண்டியிருக்கும் .

 நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் .
ரெண்டு புள்ளி தள்ளி குத்திட்டாப் போதும் கத முடிஞ்சுடுச்சு.

 அந்தக் காலத்தில் பேங்கில் வேலை பாக்கிறவனுக்குப் பொண்ணே குடுக்க மாட்டாங்க .
 உங்களுக்கெல்லாம் போட்டி போட்டுக்கிட்டு பொண்ணு தரானுங்க .

 அதனாலே பொண்ணு கொடுக்கிறேன் வந்த ஒருத்தன் பொண்ணையே

கட்டிக்கிட்டு கஷ்டப் படறேன் என்றெல்லாம் முனகுவார்

    பொறாமைகள் பலவிதம்

12 comments:

  1. விதம் விதமாய் அனுபவங்கள்....

    ReplyDelete
  2. இன்னமும் கூட பல அரசுத்துறை நிறுவனங்களில் கணினி உபயோகிக்காத தெரியாதவர்கள் இருக்கிறார்கள். ஒரே விரல் டைப்பர்கள்! அதாவது மொத்த வேலையையும் ஒரு விரலிலேயே தட்டச்சுவார்கள். இவர்களுக்கு தங்களுடனேயே பணிக்குச் சேர்ந்து கணினி கற்றுக் கொண்டு விட்டவர்களை பார்த்து பொறாமையும் எரிச்சலும் வரும்!

    ReplyDelete
    Replies
    1. பாங்கில் வேலை பார்த்த வரை எனக்கும் டைப்பிங் தெரியாது.
      TRANSLATION பண்ண ஆரம்பித்த பின்னர் தான் நானாகக் கற்றுக் கொண்டேன்
      முயல் ஸ்பீடெல்லாம் கிடயாது. ஆனலும் ஆமையை விட வேகம்

      Delete
  3. ஆம்! சகோ. எல்லா வித அலுவலிலும் இருக்கும்தான் நான் ஆசிரியாராய் இருக்கும் இடத்திலும் உண்டுதான். ஒவ்வொருவரது அனுபவமும் ஒரு விதம்...

    ReplyDelete
  4. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete