Monday, 20 June 2016

கனடாவின் நீர்வீழ்ச்சிகள்




   கனடாவின் நீர்வீழ்ச்சி என்றால் உடனே நினைவுக்கு வருவது நயாகராதான்.
 அது பற்றித் தனியாக ஒரு பதிவு போட எண்ணம் .

இப்பொழுது எழுதுவது கிட்டத்தட்ட நயாகரா மாதிரியான நீர்வீழிச்சியே தான் .

அவைகளின்  பிரமாண்டம் என்னை பிரமிக்க வைத்தது.

கிராண்ட் கான்யான் செயின்ட் ஆன் ஃ பால்ஸ் என்பதும்
சூட் மொண்ட்மொரென்சி நீர்வீழ்ச்சி என்பதும் எந்த விதத்திலும்ஓடும்  அழகிலும் தரையை நோக்கிச் சீறிப் பாயும் வேகத்திலும்  நயாகரா
 விற்குக் குறைந்ததில்லை.


 நயாகராவாவது அவ்வளவு உயரத்திலிருந்து விழுவதால் நிச்சயமாக அவ்வளவு ஆர்ப்பரிப்புடன் வருவதை நம் மனது எதிர் பார்க்கிறது . ஆனால் இங்கே நாம் எதிர்பார்க்காமலே  இவ்வளவு வேகமாக விழுகிறது. நீங்களே பாருங்களேன்.
சம தளத்திலிருந்து கொஞ்சமே கீழே உள்ள பகுதியில் விழும்போது என்னமாய் ஆர்ப்பரிக்கிறது பாருங்கள் .





மேலே உள்ள தொங்கும் பாலம் கிட்டத்தட்ட நம் லக்ஷ்மண்  ஜூலா என்பார்களே அது போலத்தான் இருக்கிறது. ஆனால் ரொம்பவே ஸ்ட்ராங்  என்றாலும் நடக்கும் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்தேன் என்பதே உண்மை.





மற்றவர்கள் நடக்கும் போது பாலத்தில் அதிர்வுகள் உண்டாகிறது. பாலம் ஆடுகிறது.

. இவ்வளவு ஆக்ரோஷத்துடன்  கொட்டும் நீர்வீழ்ச்சி குளிர்காலங்களில் அது தனது சக்தி அனைத்தும் இழந்து அப்படியே ஒரு இஞ்சு கூட நகரமுடியாமல் அப்படியே உறைந்து விடிகிறது. கோடைக் காலங்களில் எவராலும் கிட்டே நெருங்க முடியாது இருக்கும் அதே இடத்தில் ஐஸ் ஸ்கேட்டிங்  போகமுடியும் ..

சூட் மொண்ட்மொரென்சி நீர்வீழ்ச்சி

அதன் அருகேயே இன்னொரு நீர்வீழ்ச்சி .சூட் மொண்ட்மொரென்சி நீர்வீழ்ச்சி. இது நயாகராவை விட  உயரம் என்று கூறுகிறார்கள்.
 இது தூரத்தில் இருந்து எடுத்த போட்டோ  .
இங்கே ரோப் கார் வழியாகப் போய் மேலே போகமுடியும்



அங்கே  மேலே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரோப் கார் இன்றி தொங்கிய நிலையில் வரும் திறமையாளர்கள்  பயிற்சியாளர்கள் நிறைய  உண்டு.





  • இதே நீர்வீழ்ச்சியினை வேறு வேறு கோணங்களில் எடுத்தேன்.
 மேலே  இருந்து விழுந்த நீரருவி  தான் வேகம்  தணிந்து அமைதியாகச் செல்லும் படம் .
 இதே அருவிக்கு நடந்து வருபவர்கள் வரும் பாதை தான் அது.
 அதே அருவி ரயில் பாலத்தை கடந்து அமைதியாக ஓடும் படம் இது.

10 comments:

  1. புகைப்படங்கள் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கின்றது.

    ReplyDelete
  2. ஆமாம் நீங்கள் ரோப் கார் இன்றி தொங்கிய நிலையில்தான் இங்குள்ள படங்களை எடுத்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஃ போட்டோ 1 மற்றும் 6 ரொம்ப ரிஸ்க் எடுத்துதான் எடுத்தேனாக்கும் .இன்னும் நிறைய ஃ போட்டோ எடுத்தேன். ஐ பேட் ஃ புல் ஆகி எதோ கூத்து ஆகி என் மருமகள் எதோ செய்து கொடுத்தாள் . அதில் வந்த ஃ போட்டோ தான் . ரோப் காரில் சரி வர எடுக்க முடியவில்லை .குறுக்கே இரும்புக் கம்பி வந்தது

      Delete
  3. நீர்விழ்ச்சியை பார்க்க பார்க்க மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும் என்ன இங்குள்ள நீர்விழ்ச்சிகளில் நம்மை பாதுகாப்பு கருதி குளிக்க விடமாட்டார்கள் பயந்தாக் கொள்ளி பக்க்கோடாக்கள். எங்க ஊர் குற்றாலத்துல இதை மாதிரி நீர் வரத்துதான் வரும் அதில நாங்கள் குளித்து இருக்கிறோம் ஹும்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. குற்றாலம் அழகு தனித்துவம் வாய்ந்தது என்பது என் தனிப் பட்ட எண்ணம் .IT'S incomparable.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. உண்மை உண்மை இருவரின் கருத்துகளையும் ஏற்கிறேன். நம்மூரிலும் ப்ளாஸ்டிக் குப்பைகள், உணவுக் குப்பைகள் போடாமல், ஷாம்பூ, சோப் போடாமல், குளித்தார்கள் என்றால் நம்மூர் அருவிகளையும் இன்னும் நாம் பாதுகாக்கலாம். அது ஒன்றுதான் இங்கு எனக்கு வருத்தம் அளிக்கும் விஷயம்.

      கீதா

      Delete
  4. கயிற்றுப் பாலத்திலிருந்து மேலேயிருந்து கீழே பார்த்தால் பயம்தான். த்ரிலிங்கான அனுபவம்தான். படங்கள் அருமை.

    ReplyDelete
  5. பிரமிப்பாக இருக்கின்றது நீர்வீழ்ச்சிகள். புகைப்படங்கள் அழகு. மிக மிக அழான அனுபவம் தங்களுக்கு. எங்கள் ஊர் கேரளத்திலும் இப்படிப்பட்ட நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன.

    கீதா: மேற் சொல்லப்பட்டக் கருத்துடன்.... இமயமலைப் பக்கம் சென்றால் மிக மிக அழகான நீர்வீழ்ச்சிகளைக் காண முடியும். தென்னகத்தில் இருக்கும் அழகு மிக்க நீர்வீழ்ச்சிகள் எல்லாம் இப்போது கெட்டு வருகின்றன மக்களின் நடவடிக்கைகளால். பாட்டில்கள் எல்லாம் கிடக்கும். அதே இது வட இந்தியாவில் உள்ள நீர்வீழ்ச்சிகள் ஒரு வேளை அருகில் செல்வது சற்று சிரமமாக இருப்பதாலோ என்னவோ சுத்தமாக இருக்கின்றன. கேரளத்திலும் மக்கள் அவ்வளவாகக் குளிப்பதில்லை. அப்படியே குளித்தாலும் குப்பை போடுவதில்லை. எனவே சுத்தமாக இருக்கின்றன. அதிரம்பள்ளி ஃபாஸ்ல், வாழ்ச்சல் ஃபால்ஸ் எல்லாம் செமையா இருக்கும். நோ சான்ஸ்.... நிஜமாகவே அதிரும்...

    என்னதான் சொல்லுங்கள் அருவியில் குளிப்பது என்றால் தனி சுகம் நான் மிகவும் அதுவும் யாரும் கண்டிராத, பெயர் அறியாத/சூட்டப்படாத, சுற்றுலாப்பயணிகள் வராத இடங்களாக ட்ரெக் பண்ணிச் சென்றுக் குளித்த அனுபவங்கள் நிறைய. எங்கேனும் மலைப்பகுதியில் தண்ணீர் விழுவதைக் கண்டால், ஆறு என்றால் அவ்வளவுதான் நானும் மகனும், எங்கள் உறவினர் வட்டம் ஒன்றுள்ளது இது போன்று எஞ்சாய் செய்ய எல்லோரும் உடன் இறங்கிவிடுவோம்...

    ReplyDelete