சென்ற மாதம் 13 ம் தேதி அன்று மாண்ட்ரியலில் என் மருமகளுடன் வசிக்கும்
எனது மகன் வீட்டிற்கு நானும்
என் கணவரும் வந்தோம் . இரண்டு
வாரங்கள் வார விடுமுறையில் ஊர்
சுற்றினோம் . பிறகு ஊருக்கு உள்ளேயே பல
கடைகள் இடங்கள் போனோம் . மாண்ட்
ராயல் எனப்படும் ஒரு சிறிய
மலை ஒன்றிற்கு நாங்கள் சென்றோம் .
அதன் முன்னால் உள்ள
ஒரு பெரிய சிலை இது
. மக்கள் இந்த ஏரியாவைச் சுற்றியும்
நடக்கிறார்கள் .
மலை மேலே எல்லோரும் ஏறிப் போகலாம் என்று
என் மகன் சொன்னான் . மாட்டேன் என்று நான்சொ ல்லிவிட்டேன்
. அவனுக்கு மலை ஏறுவதில் ஆசை உண்டு
. இந்தியாவில் இருந்த போதே பல
மலைகளில் ஏறிய அனுபவம் உண்டு
. ஹைதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது
அவன் mountaineering கிளப் மூலம் மலையேறுவது
பற்றிய ஃ போட்டோக்கள் ஹிந்து
பத்திரிகையில் வந்தது . ஆனால் அவன் கங்கோத்ரியிலிருந்து கிளம்பி களந்திகால் என்ற இடத்திற்குச் சென்ற
போது அவன் திரும்பி வரும் வரை இரவுகளில் நான்
தூக்கம் வராமல் தவித்தது எனக்குத்
தான் தெரியும் .
மலையைச்
சுற்றிஇருந்த நடை பாதையில் நான், என் மருமகள் என்
மகன் மற்றும் கணவர் கூட நடந்த
போது எதோ ஏ. சி .ரூமில்
நடப்பது போல இருந்தது.
சுற்றிவர உயரமான மரங்களும் சில பறவைகளும் சூழ நடை பாதையே ரொம்ப ரம்மியமாக ........
உடலில் அசதி இல்லை .
ஆனால் கால் வலிக்க ஆரம்பித்து விட்டது.
கோடை
நாள் என்றாலும் வெயிலே தெரியவே இல்லை .
வெப்ப நிலை .11 டிகிரி
முதல் 17 க்குள் தான் இருக்கிறது
. நான் டெல்லி ஹைதராபாத் போன்ற
இடங்களில் வசித்திருந்தாலும்
இந்தக் குளிர் கொஞ்சம் ஓவராகவே
இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது .இங்கு உள்ள வானிலை
மையம் வெப்ப நிலையைத் தவறாகச் (அதாவது 4 அல்லது 5 டிகிரி வெப்பநிலையைக் 11-17 என்று
கூடுதலாக ) சொல்வது
போல உள்ளது . .சொல்லப் போனால் குளிர்
காலத்தையே இங்கு இருக்கும் மக்கள்
எல்லாரும் தப்பிதமாக கோடை என்று சொல்வதாக
என் நினைத்துக் கொண்டிருந்தேன்.
.
ஆனால் நான் சொல்வதை யார்
ஒத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தேன்.
நிஜத்தில் வானிலை மையத்தில் அவர்கள் உண்மை வெப்ப நிலை ,மற்றும் நாம் உணரக் கூடும் வெப்ப நிலை என்று தனித் தனியே அறிவிக்கிறார்கள்.
மலையின்முழு நடைபாதையையும் நாங்கள் நடக்கவில்லை .
கிட்டத்தட்ட
ஒன்றரை மணி நேரம் நடந்து
விட்ட படியால்" மெக் ஹில் "பல்கலைக்கழகம்
அருகே உள்ள இடத்துக்கருகே
நாங்கள் முடித்துக் கொண்டோம் .
ஆனால் பலரும் வேக
வேகமாக ஓடுகிறார்கள் ,
சிலர் சைக்கிளில் வேகமாகப்
போகிறார்கள்
அதே பாதையில் ஸ்கேட்டிங் போகிறவர்களும் உண்டு.
நடப்பவர்களில் வயதானவர்களும் அநேகம் என்பதே என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
.
இதில் நான் கவனித்த ஒன்று
என்னவென்றால் யாருமே கஷ்டப் பட்டுக்
கொண்டு ஓடவில்லை நடக்கவில்லை .
ஒரு சந்தோஷத்துடனேயே செய்கிறார்கள்
. சென்னை நடைவாசிகளிடம் இந்த சந்தோஷம் மிஸ்ஸிங்கு
இதற்கு நானும் விதி விலக்கல்ல .
என்னையும்
சேர்த்துத் தான் சொல்கிறேன் . நடப்பதையே
ஒரு தீராத வேலை என்பது
போல் தான் செய்தேன் . நடக்கும்
போதே வீட்டில் அடுத்து செய்ய வேண்டிய
வேலைகளைப் பற்றியும் ,மற்ற உப்புப் போறாத விஷயங்கள் என ,யோசனையில் முழுகி எழுந்தாலும் தீர்க்க முடியாத சமாச்சாரம் பற்றிய கவலையுடனுமே செய்தேன்
இனி சென்னை சென்றதும் நடக்கும்
போது இந்த வெட்டிக் கவலைகளையெல்லாம்
விட்டொழித்து விட்டு நடையில் மட்டுமே
கவனம் செலுத்த வேண்டும் என்று
தீர்மானித்துள்ளேன் .
மழைக்காலத்தில்
இந்த மலையைச் சுற்றிய பாதை
இப்படித் தான் இருக்குமாம் . ஐஸ் ஸ்கேட்டிங்
போகிற இடமாக இது மாறிவிடுமாம் .
- மலை மீது ஏறிச் சென்று பார்த்தால்தான் மலையின் முழு அழகும் தெரியும் என்கிறார்கள் எல்லோரும்..கால் வலி பயத்தினால் போகவில்லை
//என் மருமகளுடன் வசிக்கும் எனது மகன் வீட்டிற்கு//
ReplyDeleteஎங்கியோ இடிக்குதே?
வருகைக்கு நன்றி.
Deleteநானும் நினைத்தேன். ஆனால் இன்னும் திருமணமாகாத மற்றொரு மகன் வீட்டிற்கும் செல்ல உள்ளதால் வேறுபடுத்திக் காட்டும் எண்ணத்துடன் அப்படிக் குறிப்பிட்டுள்ளேன்
என்ன கனடா வந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் அமெரிக்கா வாரமல் போய்விட்டீர்களே நியாமா இது
ReplyDeleteஅழைப்புக்கு நன்றி. நயாகரா நீர்வீழ்ச்சி யைப் பார்க்கவந்தபோது உங்களைப் பார்த்துக் கூப்பிட்டேன். அருவி சத்தத்தில் காதில் விழவில்லை என்று நினைக்கிறேன்.
Deleteநான் கனடாவில் ஒரு பொருள் வாங்கினேன். அதைப் பார்த்தால் எல்லோருக்குமே தங்கள் ஞாபகம் வரும்.அது பற்றி பதிவு எழுதி தங்களைக் கலாய்க்கலாமாஅல்லது பாவம் விட்டு விடலாமா என்று டாபிக்கையே பெண்டிங்கில் வைத்துள்ளேன்.
Good experience. Good post.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteமலையின் அழகைப் பார்க்கும் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டீர்களே!
ReplyDeleteநடப்பது பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை அப்படியே ஒத்துக்கொள்ளுகிறேன். ஏதேதோ சிந்தனையில் நடக்கும் போது ஏற்படும் சந்தோஷத்தை உணர மறக்கிறோம்!
தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteஉங்கள் காமேண்டைப் பார்த்து விட்டு இன்று (12.6.16)போகலாமா என்று நினைத்தேன் . ஆனால் நேற்றுத் தான் கியுபெக் மற்றும் சில இடங்களுக்குச் சென்று வந்தேன் ,எனவே உடம்பு அசதியாக இருந்தது. தவிர நான் 14 ம் தேதி அன்று கிளம்புவதால் போகவேண்டாமென்று தீர்மானித்து விட்டேன் .