நானும் என் கணவரும் போன மாதம் 12 ம் தேதி இந்தியா விலிருந்து கிளம்பினோம்
இவ்வளவு நாட்கள் வீட்டை விட்டு இருந்ததே கிடையாது.
வங்கியில் வேளையில் இருந்த பொழுது எங்களுக்கு டிரைனிங்கு என்ற பேரில் வந்து சென்னையில் இரண்டு வாரம் போல வந்திருக்கிறேன். அப்போவெல்லாம் ஜாலியாக இருக்கும். இத்தனைக்கும் இன்டர்நெட் இல்லாத காலம் அது.
ரொம்பவே ஒல்லியாக இருப்பேன் ரெண்டு பிரேக் ஃ பாஸ்ட் எல்லாம் சாப்பிட்டு குண்டாக இருப்பவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் க ட்டிக்கொண்டிருக்கிறேன.
அமெரிக்கன் கல்லூரியில் ஒரு கோர்ஸ் மூன்று வாரம் , என்று இரண்டு முறை நான் வகுப்புகள் எடுத்தேன். கிளாஸ் எடுத்த நேரம் போக மிச்ச நேரம் ஊர் சுற்றுவேன்.
சிம்மக்கல் போய் பழம் வாங்குவேன்.
கடை க்குப் போவேன்.
கோயிலுக்குப் போவேன் .
என் உறவினர் வீட்டுக்குச் செல்வேன்.
மதுரையில் இருந்த பொழுது எனக்கு நன்கு பொழுது போகும் .
தவிர அது தமிழ் நாடு என்பதால் பிரச்னை இல்லை.
வீட்டு வேலைகளிருந்து ஒரு மாறுதல் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷமாகவே இருப்பேன்.
என் மூத்த மகன் உடல் நிலை சரியில்லாமல் ஹைதராபாத்திலிருந்த போதும் எனக்கு நன்கு பொழுது போகும். சமையலில் ஆர்வம் உள்ளதால் விவிதவிதமாகச் சமைத்து என் மகனின் உடல் எடையை ஏற்றினேன்.
.
.அதன் பின் இப்பொழுதுதான் நான் அதிக நாட்கள் வீட்டை விட்டு இருக்கிறேன்.
ஊர் சுற்றினேன் ,
கடைகளுக்குப் போனேன்
வாக்கிங் போனேன்
ஸ்கைப்பில் தினம் ஒரு மணி நேரம் கிளாஸ் எடுக்கிறேன்.
இருந்தும் வேலை என்பது இல்லாமலிருப்பது செம்ம போரடிக்கிறது.
நெடு நாள் ஆசையான ட்விட்டர் கணக்கு துவக்கினேன் ..
சும்மா சும்மா கனடா சுத்தியதையே எழுதி போரடிக்க மனமும் இல்லை..
டி வி பார்க்கவும் பிடிப்பதில்லை.
யு டியுபில் எவ்வளவு நேரம்தான் பார்ப்பது ?
குளிர் வேறு பிடிக்கவில்லை.
மகனும் ரெஸ்டில் இரு என்கிறான்
எப்படித்தான் எல்லோரும் வேலையே செய்யாமல் இருக்கிறார்களோ?
அதுவும் ஆய கலைகளில் ஒரு கலைதான்
அவர்களுக்கு ஒரு சல்யூட்
ஆச்சு. இன்னும் இரண்டு நாளில் ஊருக்குக்
கிளம்பிடுவோம்.
பிடித்த இசை கேளுங்கள். புத்தகங்கள் படியுங்கள். அவ்வப்போது தூக்க தியானம் செய்யுங்கள்! பொழுது போய்விடும்!
ReplyDeleteவாங்க மேடம்! வந்தவுடன் உங்கள் அயல்நாட்டு அனுபவங்களை படங்களுடன் எழுதுங்கள்.
ReplyDeleteஅயல் நாட்டு அனுபவங்களை அறியக்க காத்திருக்கிறேன் சகோதரியாரே
ReplyDelete