.
என் மகனின்போஸ்ட் கிராஜுவேஷன் பட்டமளிப்பு
விழாவிற்காகக்
கனடா வந்துள்ள
நான் அந்த விழாவில் கலந்து
கொண்டேன்.
அதில் நான்
கவனித்த
ஒன்று
கிராஜுவேஷன்
லெவலில்
மட்டும்
சீன
தேசத்தைச் சேர்ந்தவர்கள்
ஒரு
ஆறு ,ஏழு பேர் டிஸ்டிங்ஷன்வாங்கினார்கள்
(அந்தப்
பிரிவில் பட்டம் வாங்கியவர்கள் 39 பேர் ) .
வேறு எந்தப்
பிரிவிலும் எந்த
ஒரு குறிப்பிட்ட
நாட்டைச் சேர்ந்தவர்களும் இப்படி அதிக
அளவில் தனிப் பட்ட முறையில்
வாங்கவில்லை .
இது எதனால்
என்று என் மகனிடம் கேட்டேன்.
இதை நானே
கவனித்ததில்லை.உன் கண்ணுக்கு
மட்டும்
எப்படித்
தெரிஞ்சது எதிர்க் கேள்வி வந்தது
சரி இவன்கிட்டே பேசிப் பிரயோஜனமில்லே .
கூகிள்
மாமாவை அணுகினேன்.
அட சீனர்கள் லண்டனிலும் கட்டிடக் கலை சம்பந்தமான படிப்பு
படிப்பதில் ஆர்வம் காட்டி
வருகிறார் களாம். சமீபத்தில் சீன
மாணாக்கர்களின் எண்ணிக்கை இரட்டிப்
பாக உயர்ந்திருக்கிறதாம்.
எனக்கு
சீனர்களின் நாகரீகம்
கலாச்சாரம் இவைகளில்
ஒரு அலாதிப் பிரியம் உண்டு
.
நான் சுத்த சைவம் என்றாலும்
கூட அவர்கள் சாப்பிடும் பாம்பு
பூச்சி
வகையறாக்கள் சேர்க்கப்
பட்ட சமையல் குறிப்புகள்
பிடிக்கும்
.
வாட்சப்பில்
எனது நெருங்கிய உறவினர்களுக்கு அதன் சமையல் குறிப்புகளை
அனுப்பிக் கடுப்பேத்துவதில் சுகமோ
சுகம்.
தவிர என்
ஜப்பானியத் தோழி சொல்வாள்.
நாம் ஒரு உபகரணம் அல்லது
மெஷின் அல்லது பொருளை இப்படிச் செய்யலாமா
என்று மனதளவில் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதே மாடலில்
அவர்கள் செய்து மார்கெட்டில் விற்றுக்
கொண்டிருப்பார்கள் என்பாள்.
மதுரைத்
தமிழில் சொன்னால் நாம மல்லாக்கப்
படுத்துக் கிட்டு விட்டத்தைப் பாத்துகிட்டிருக்கும்போது
நம்ம விட்டத்துக்கு மேலேயே கட்டடம்
கட்டிடுவானுவ..
தவிர எந்த டெக்னாலஜியையும் எப்படியோ
காப்பி அடிச்சு கொறஞ்ச விலையிலே
சாமானுகளப் பண்ணுவதி ல் அவங்கள
அடிச்சுக்க முடியாது.
சரி ஆனது ஆகட்டும் என்று
ஒரு சீன மாணவரிடம் இது
பற்றிக் கேட்டேன்.அவர் சொன்னது ஒரு
நாடு முன்னேறனும் என்றால் முதலில் ஊரும்
நாடும் அழகான கற்பனைத்திறன் கொண்ட
வாழ வசதியான கட்டிடங்கள் கொண்டவையாக இருக்கணும் அதனால் தான் என்றார்.
ஆஹா !என்ன ஒரு தேசிய
சிந்தனை.
அருணா சகோ/அருணா உங்கள் வரிகளின் இடையே இழையோடும் நகைச்சுவை சத்தியமாக ஈர்க்கின்றது. அதுவும் க்ரிஸ்பாகச் சொல்லிவிடுகின்றீர்கள். நாங்கள் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.// மதுரைத் தமிழில் சொன்னால் நாம மல்லாக்கப் படுத்துக் கிட்டு விட்டத்தைப் பாத்துகிட்டிருக்கும்போது நம்ம விட்டத்துக்கு மேலேயே கட்டடம் கட்டிடுவானுவ..// ஹஹ்ஹ உண்மைதான்...
ReplyDelete(கீதா : இப்போதைய எனது மொபைல் ஆன்ட்ராய்ட். அதுவும் சீன மேக். ஜியோனி!! விலையும் கம்மி...நன்றாகத்தான் இருக்கின்றது. ஒன்றும் குறையில்லை. வரும் வரை வரட்டும் என்று.
Good !Congrats ! I do not know how to type in Tamil (commenting in Tamil) in Comments box . Chinese products do work well,otherwise they cannot survive. Failure percentage is there in Nokia also.Never regret choosing a chinese product
ReplyDelete