Saturday, 25 June 2016

மிட்சுபிஷி இட்லி

சமையலில்   எனக்கு  ஆர்வம்  உண்டு .
சில புதுமைகள் செய்வேன் .
என் குழந்தைகள் 10 வது படிக்கும் வரை என் ரசிகர்கள் .
பிறகு தோளுக்கு மேல் வளர்ந்த பின் ...
" நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா என்ன ?" ரேஞ்சு பேச்சுதான் .
ரொம்பக் கிண்டல் பண்ணுவார்கள் .
 என் உறவினர் குழந்தை கள்  நான் whatsapp பில் அனுப்பும் சாப்பாட்டு  போட்டோக்களை ரசிப்பார்கள் .

 காலம் காலமாக நாம் சாப்பிடும் இட்லி யை ஒரு பிரபல ஜப்பானியக் கம்பெனியின் லோகோ மாதிரி ஆக்கி "மிட்சுபிஷி இட்லி" என்று பெயர் சூட்டினேன் .


 இதை ரொம்ப ஓவர் என்று சிலர் கலாய்த்தாலும் (எல்லாம் வயித்தெரிச்சல் தான் )

சிறு குழந்தைகளின் அம்மாக்கள் இதை
ஐடியா நன்றாக educative  value வோடு  இருக்கிறது” என்று  புகழ்ந்தனர்.

 காரணம் குழந்தைகள்  " மிட்சுபிஷி " என்றால் என்ன என்று கேட்க ப்
பிறகு
 நெட்டில் அது பற்றி ப் படித்து பசங்களுக்கு விளக்கம் சொன்னதன் மூலம் மிட்சுபிஷி கம்பெனியின் பிரம்மாண்டம் பெற்றோர்கள் குழந்தைகள் இருவருக்குமே புரிந்தது .

இதற்காகவும் ஜப்பானியத்  தொழில் துறையையும்  தென்னிந்தியப் பாரம்பரிய மிக்க உணவையும்  இணைத்துச் செய்த தற்காகவும்
மிட்சுபிஷி கம்பெனி எனக்கு ஒரு ஸ்பெஷல் அவார்ட் கூடத் தரலாம் .

ம்ம் .....அதுக்கெல்லாம் ஆள் வேணும்.

நான் 2010-2012 கால கட்டங்களில்  T. C. S ஸின் மிட்சுபிஷி புராஜெக்டில்  Free Lancer ஆக வேலை பார்த்தபோது தான் அந்தக் கம்பெனியின் அருமை பெருமைகள் எனக்கே தெரிய வந்தது .


 பிறகு அந்தக் கம்பெனியின்  ADMIRER ஆனேன் . (MITSUBHISHI )


 அதனால் வந்த ஐடியா தான் இந்த "மிட்சுபிஷி இட்லி"  .

சரியோ தப்போ   எனக்கு ஒரிஜினாலிட்டி தான் முக்கியம் .

 நாம் ஒரு சமையல் குறிப்பு செய்கிறோம்  பதிவு போடுகிறோம் என்றால்
ரஜினியின் பன்ச் டயலாக்  மாதிரி
"அபயா அருணா " வின் எஸ்க்க்ளுசிவ் டச்  இருக்கணும் இல்லையா ?

(யாரும் தயவு செய்து சிரிக்கவேண்டாம் )

இந்த "மிட்சுபிஷி இட்லி" க்குக்  காப்புரிமை வாங்கணும் என்ற எண்ணமும் உண்டு.

13 comments:

  1. மிட்சுபிஷி இட்லி! அட நல்லா இருக்கே - பார்க்க.... காப்புரிமை வாங்கிடுங்க... எப்படி செய்யறதுன்னும் சொல்லி இருக்கலாம்.... செய்து பார்த்துருப்பேனே....

    ReplyDelete
  2. காசு கொடுக்காம தெரிஞ்சுக்க ஆசையா ?
    பரவாயில்லை ... சொல்கிறேன் . மிட்சுபிஷி என்றால் மூன்று வைரங்கள் அல்லது மூன்று RHOMBUS . (RHOMBUS .= ஸ்கூலில் படித்த கிராஃப் ஞாபகப் படுத்திக்கொள்ளவும் ) cookie கட்டர் வைத்து RHOMBUS வடிவத்தில் வெட்டி மேலே இட்லி மிளகாய்ப் பொடி தூவணும் . இட்லி குண்டாக இருப்பதால் corners ல் ஷார்ப் edges வராது. டெல்லியில் கரோல்பாக் ஏரியாவில் நீங்கள் கடை போட்டு விற்றால் அடுத்த அம்பானி+ அதானி நீங்கள்தான் . (ஐடியா கொடுத்த எனக்கு லாபத்தில் ஒரு பங்கு தரணும் )

    ReplyDelete
  3. இந்த இட்லி ஆம்லெட் மாதிரி தெரிகிறதே.... ரெண்டு பார்சல் அபுதாபி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .
      மூன்றாக வாங்கினால் ஒன்று free

      Delete
  4. நானும் கூட்டு சேந்துக்கிறேனே !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .
      கவலையே வேண்டாம் நீங்கள் தான் C.E.O

      Delete
  5. பொடி தோசை மாதிரி அட, நம்ம பொடி இட்லி!

    :)))

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .
      என்ன ஒரு R & D வேலை எல்லாம் பண்ணி ஒரு பெரிய முயற்சிக்குப் பிறகு கண்டு பிடித்த ஒன்றை " ஒரு ஊ......த்தப்பம் " அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டீங்க . இதே ஒரு ஜப்பான்காரன் செஞ்சிருந்தா ஒரு அவார்ட் கொடுத்திருப்பீங்க .....

      Delete
  6. என்ன பெயர் வைத்தாலும் இட்லிதானே. வயிற்றுக்குள் போனபின் ஷேப்பாவது ஒன்றாவது. என்னவோ என்று நினைக்க வைத்தது சாமர்த்தியம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .
      இதெல்லாம் சும்மா ஒரு ஜாலிக்குத்தானே

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ஹஹஹ்ஹஹ் முதலில் தலைப்பைப் பார்த்ததும் சரி நம்ம ஜப்பானிய நங்கை ஆயிற்றே என்று நினைச்சாலும் கூடவே இதுல ஏதோ வேற ஒரு சூட்சுமம் இருக்கற மாதிரி தெரியுதேனு வந்தா அதே தான்....ரொம்பவே ரசித்தோம்....

    (துளசிதான் முதலில் இந்தத் தலைப்பைப் பார்த்துட்டு கீதாவுக்கு என்னவோ ஜப்பான் மாதிரி இருக்கே நமக்கு யாராவது ஜப்பான்ல பதிவர் இருக்காங்களானு மெயில் வழி கேட்க, ஜப்பான் அப்படினா அது நம்ம அபயா அருணாவின் வேலையாத்தான் இருக்கும்னு சரியாத்தான் சொல்லிருக்கா கீதா...துளசியும் வாசித்து சிரிக்க படம்தான் பார்க்க முடியலை என்று வருத்தம். கீதா விளக்கம்..)

    ReplyDelete
  9. கீதா: அந்த மோல்டை வைச்சே இட்லி மாவு ஊத்திடலாமே இல்லையா...இந்த மினி இட்லினு செய்வமே அப்படி...இப்படித்தான் என் பையன அட்ராக்ட் பண்ண அவன் சின்ன வயசுல.....கப் இட்லினு கப் கேக் ஷேப்ல, பிஸ்கட் கட்டர் ஷேப்ல அதுவும் அவனுக்கு அனிமல்ஸ் பைத்தியம் அப்படின்றதுனால அந்த ஷேப்ல இருக்கற பிஸ்கட் கட்டர்....அதுவும் குறிப்பா காஞ்சிபுரம் இட்லி

    தோசை ஷேப், அதுதான் ரொம்ப ஈசியாச்சே ரவுண்டா வரலைனா உடனே அதுக்கு ஒரு பெயர் சூட்டி...சப்பாத்தி..சப்பாத்தியில் அவனும் சேர்ந்து விளையாடுவான்.....பல நினைவுகள் (அட உங்க ப்ளாக் நேம்) மண்டைல முட்டி மோதியது....அவனிடமும் சொல்லிச் சிரித்தேன். அவன் என்னைக் கலாய்த்தான். அம்மா நீ உனக்கு சப்பாத்தி செய்யறப்ப ஷேப் ஒழுங்கா வரலைனா உடனே இது கான்டினென்டல் அப்படினு சொல்லி ஏதோ ஒரு பேர் தெரியாத நாடெல்லாம் சொல்லி உடனே அதோட காப்பிட்டல் சொல்லி...சிரிக்க வைச்சு என்ன எப்படி எல்லாம் ஏமாத்திருக்க சாப்பிட வைக்க...

    கீதா

    ReplyDelete