இந்த இரண்டு
வார்த்தைகள்
எனக்கு
மிகவும்
பிடித்த வார்த்தைகள்.
ஏனெனில்நன்கு
கூர்ந்து கவனித்தீர்களானால்
இந்த இரண்டு
வார்த்தைகளில் எந்த வார்த்தை யின்
GUIDANCE படிச் செல்கிறோமோ அல்லது
இந்த
இரண்டில் நாம் எதற்கு முக்கியத்துவம்
கொடுக்கிறோம் என்பதைப்
பொறுத்துத்தான்
நமது வாழ்க்கை வெற்றிகரமாக
அமைவதும்
மற்றும் நாடுகளின் முன்னேற்றம் அமைவதும்
.
நாடுகளுக்கிடையே
யான சண்டைகள் ஆரம்பிக்கக்
காரண மும் பல
நாடுகள் தோல்வி
அடைவதும்
அது
அவர்களின்
ஃ பர்ஸ்ட் சாய்ஸ்
என்பதாலா அல்லது லாஸ்ட்
ரிசார்ட் என்பதாலா ,என்பதைப் பொறுத்தே
.
நெப்போலியன் போனபார்ட்
எப்பொழுதும்
ஃ பர்ஸ்ட் சாய்ஸ் எது என்பதில்
தெளிவாக இருந்து
போரிட்ட
தருணங்களில் வெற்றியே பெற்றார் என்பது எனது
சொந்த நினைப்பு . (எண்ணம் ) .
நான் சிறு
வயதில் படித்த
போதிலிருந்தே எனக்கு
இந்த
வார்த்தை
மீது
ஒரு
ஈர்ப்பு .
தீவிர சிந்தனை செய்தேன் . அந்தப்
பாடத்தில் அவர் வாட்டர்லூ போரில்
தோற்ற போதுஃ பர்ஸ்ட் சாய்ஸ் என்கிற
கான்செப்ட் படி போரிடவில்லையோ என்ற
எண்ணம் எனக்கு இருந்தது .இங்கிலாந்தைத் தோற்கடிக்க இதை விட்டாக்கா வேறே வழியில்லேன்னு போட்ட சண்டை அது.
ஆனால் நான் சொன்னால் யார்
ஏற்றுக்கொள்வார்கள் என்று யாரிடமும் சொல்லவில்லை . (இப்பயும் யாரும் கேக்கமாட்டாங்க அது வேறே விஷயம் )
பிறகு வாழ்க்கையில் பல
வித அனுபவங்கள் பாடங்கள் எல்லாம் கற்ற பின்
நாம ஒரு
காரியத்தை வெற்றிகரமாக முடிக்கணுமின்னாக்க நல்ல
யோசிச்சு எது ஃ பர்ஸ்ட்
சாய்ஸ் அப்படீங்கரதிலே ஒரு தெளிவு ...தெளிவு என்றால் மேம்போக்கான
தெளிவு இல்லை . தீரத் தெளிவு
இருக்கணும் .அப்படி இருந்து செய்கிற
காரியங்களுக்கு வெற்றி 99% உறுதி .
வேறே வழியே இல்ல என்று
நீங்கள் ஆரம்பித்த காரியங்கள் எல்லாமே தோல்வி ஆகாது
என்றாலும் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சம் கம்மி .
பிரிட்டிஷ் அரசு
நம் நாட்டை விட்டுப் போனது
முதல் நமது 2016 தேர்தல் வரை நன்கு உற்று
நோக்கிப் பாருங்கள் புரியும்
உங்களது
சொந்த வாழ்க்கையில்
நீங்கள் இதுதான் என் முதல்
சாய்ஸ் என்று
தெரிந்தெடுத்த படிகள் அதில் நீங்கள்
அடைந்த வெற்றி
வேறே வழி இல்லாமால் தேர்ந்தெடுத்த
விவகாரங்களில் அவ்வளவு
மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது எல்லாம் புரியும் .
நிறையப்
பேரிடம்இது பற்றிக் கேட்டேன் சர்வே ஷீட் எல்லாம்
கொடுக்கவில்லை .
சும்மா
காஷுவலாக விசாரித்த போது 35 மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆமாம்
என்று ஒப்புக்
கொண்டிருக்கிறார்கள்
, எனது
மாணவர்களிடம் கேட்டபோது இல்லை ஃ பர்ஸ்ட்
சாய்ஸ் பல சமயங்களில் காலை வாரிடுச்சு, மேடம்
ஆனா வேறே
வழியே இல்லன்னு ஆரம்பிச்ச புராஜெக்ட்
பயங்கர சக்சஸ் என்றார்கள் .
உங்கள்
அனுபவம் எப்படி ?
No comments:
Post a Comment