Monday 22 June 2020

உலகமும் ( மூட )நம்பிக்கைகளும்



உலகம்  எங்கும்  பரவலாக  மூட நம்பிக்கைகள்  பின் பற்றப் படுகின்றன .
 நமக்கு  நாம்   வாழும்  சமூகத்தில் அல்லது  நம் நாட்டில் பின் பற்றப்படாத பழக்க வழக்கங்களை  விநோதமாகப்   பார்த்தோம் ஒரு காலம் வரை . இப்பொழுது எல்லாம் மீம்ஸ் போட்டுவிடுகிறோம் .

 உதாரணமாக மழை வேண்டிக்   கழுதைக்கும்   கழுதைக்கும்  கல்யாணம் பண்ணிவைத்த  செய்தி நம் எல்லோருக்கும் தெரியும் . பிறகு 2015 ல்  சென்னையில்  பெரு வெள்ளம் வந்தபோது எல்லோராலும் ரசிக்கப்  பட்ட மீம்ஸ்  " முதலில் அந்தக் கல்யாணம் பண்ணி கிட்ட கழுதைங்களுக்கு விவகாரத்துப் பண்ணி வைங்கப்பா  சீக்கிரம் .   மழை நிக்கட்டும் " . 
.
இது போன்ற மூட நம்பிக்கைகள் பற்றி ஒரு MNC யில் வேலை செய்துகொண்டிருந்த போது மதிய சாப்பிட்டு வேளையின் போது  நாங்கள்  பேசிக்கொண்டிருந்தோம் .அப்போது ஒரு ஜெர்மானியர்  தங்கள் நாட்டில் புது வீடு  குடி போகும் போது அவர்களுக்குப் பரிசாக  ரொட்டியும் உப்பும் கொடுத்தால், அவர்கள் ஒருபோதும் தங்கள் புதிய வீட்டில் பசியோடு இருக்க மாட்டார்களாம் 
இருப்பினும், கத்திகளைப் பரிசாக கொடுக்கவே கூடாதாம்   அப்படிக் கொடுத்தால் அது அவர்களுக்கு மரணம் அல்லது காயத்தைக்  கொடுக்குமாம்
கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் உப்புடன் தொடர்புடைய மூட நம்பிக்கைகள் நிறைய  உள்ளன .ஜப்பானில் உப்பு என்பது ஒரு சுத்தீகரிக்கும் வஸ்துவாகக் கருதப் படுகிறது    .. ரஷ்யா மற்றும் சில நாடுகளில் , உப்பைக் கீழே   கொட்டுவது குடும்பத்தில்  உள்ள உறவுகளுக்கிடையிலான சந்தோஷத்தைக்   குலைக்குமாம். நம் நாட்டில் உப்பைக் கீழே சிந்தினால் கடன் வரும் என்பார்கள் .Ever heard the theory that it's bad luck to spill salt and you should throw it over your back as soon as possible? Well, ever wondered where it originated?


 சாய்ந்த ஏணியின் கீழ் நடப்பது கூடாது என்பதும் ஐரோப்பிய  நாடுகளின் பொதுவான மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும். இதன்  பின்னணி என்னவென்றால்  ஒரு சுவர், ஏணி மற்றும் தரை ஆகியவை ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன. முக்கோணம் என்பது ஒரு மிகவும் புனிதமான  வடிவம். ( பிரமிட்டுடன் தொடர்பு கொண்ட ஒரு சிந்தனை மாதிரி) ஒரு ஏணியின் கீழ் நடப்பவர் ஒரு புனிதப் பகுதியை சேதப்படுத்துகிறார்,   அவரது வாழ்க்கையில் தீமையை அவரே  அழைக்கிறார் என்பதாம் . அதாவது  "சும்மா போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள போட்டுக்கிற மாதிரி"


நான் மிகவும் கிண்டலடித்த மூட நம்பிக்கையில் ஒன்று  தென் கொரியா, ரஷ்யா ஜப்பான் மற்றும் சில ஆசிய நாடுகளில்  பரீட்சை அன்று     தலைக்குக்  குளிப்பது எனபது    நாம் படித்த எல்லாவற்றையும் கழுவி விடுமாம் ,எதுவுமே ஞாபகம் இருக்காதாம் தலைமுடியையின் அழுக்கு கழுவப்  படும் போது  நாம் படிச்சதும் அந்தத் தண்ணியிலே ஓடிடுமாம் .

என்னதான் உலகத்தையே நாம  கிண்டல் பண்ணினாலும் கிளம்பற போது பூனை குறுக்க வந்தாக்க வீட்டுக்குத் திரும்பி வந்து தண்ணி குடிச்சுட்டு ஒரு நிமிஷம் உக்காந்துட்டு அப்புறம் கிளம்புறவங்கதான்  நாம எல்லாம்