இது என்ன பற்பசை விளம்பரத்தைக் கட் பேஸ்ட் செய்து ஜனங்களை பிளாக் படிக்க வைக்கும் ஒரு உத்தியா என்று நினைக்க வேண்டாம் .
நிஜமாகத்தான் கேட்கிறேன்
உங்க பாவ் பாஜியில் கரி இருக்கிறதா?
என்னது ?
பாவ் பாஜியில் எந்த மடையன் கரியக் கொண்டு போடுவான் ?
அப்படியே போட்டாலும் எந்த மாங்கா மடையன் சாப்பிடுவான் என்று கேட்கிறீர்கள் இல்லையா ?
நிஜமாகவே பம்பாயில் மசாலா பார் என்னும் ரெஸ்டாரண்ட்டில் கார்பன் பாவ் பாஜி என்ற பெயரில் ஒரு பாவ் பாஜி விற்கிறார்கள் .
அது அங்கு மட்டும் தான் கிடைக்கும் போல .
நான் சென்னை திரும்பி வரும்போது ( மும்பை வழியாக வந்தேன் )
ஏர் இந்தியா விமானத்தில் கொடுத்த ஒரு புத்தகத்தில் எந்த எந்த
ரெஸ்டாரண்டில் எந்த எந்த உணவுகள் பிரபலமானவை என ஒரு கட்டுரை
வந்திருந்தது.
அதில் மசாலா பார் ரெஸ்டாரண்ட் -கார்பன் பாவ் பாஜி என்று போட்டிருந்தது
ஆனால் அதன் போட்டோ எதுவும் இல்லை .
சரி என்று அதை என் சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன்.
வீட்டிற்கு வந்ததும் நெட்டில் அது என்ன ரெசிபி என்று தேடினேன் .
ரெசிபி எதுவும் கொடுக்க வில்லை .
ஆனால் போட்டோ மட்டும் உள்ளது .
சுவை நார்மலாக இருக்கும் பாவ் பாஜி சுவையே தானாம் .
அதில் சேர்க்கும் பொருட்கள் உருளைக்கிழங்கு மிளகாய் தக்காளி இவைதானாம்
ஆனால் பன் மற்றும் அதற்குத் தரும் கூட்டு எல்லாம் ஒரே கருப்புக்கலர் ..
இதன் விலை ரூபாய் 295/-
யாராவது மும்பை சென்று இதை சாப்பிடும் பட்சத்தில் என்னை நினைத்துக் கொள்ளவும் .
எங்கே இப்ப சொல்லுங்க
உங்க பாவ் பாஜியில் கரி இருக்கிறதா?
.
பார்க்கவே பிடிக்கவில்லையே இதை எப்படி சாப்பிடுவது......
ReplyDeleteஎனக்கு வேண்டாம்... பாம்பே போனால் சாப்பிட வேறு நிறைய ஐட்டங்கள் உண்டு!
டூத் பேஸ்ட்டில் கரி இருக்கலாம் .பாவ் பாஜியில் இருக்கக் கூடாதா
Deleteமுதல்ல போட்டோவுல இருப்பது என்ன அதை சொல்லுங்க....
ReplyDeleteகரி பூசப்பட்ட பாவ் பாஜி . சாப்பிடும் உணவு
Deleteமும்பையில் உள்ள அந்த உணவகம் தமிழரால் வைத்து நடத்தப்படுவதாக இருக்கும் என் நினைக்கிறேன் கரி பாவு பாஜி என்று விற்பதில் கறி( அதாவடு மட்டன்) கலந்து இருப்பதால் அப்படி பெயர் வந்து இருக்கலாம் ஆனால் அதை மொழி பெயர்க்கும் போது கறி கரியாகி அதை கார்பன் என்று மொழி பெயர்த்து இருக்ககூடும் என நினைக்கிறேன் அதனால் அதை நீங்கள் சாப்பிட்டு அதி இருப்பது கரியா அல்லது கறியா என்று உறுதி செய்து விடுங்கள்
ReplyDeleteஇது நிச்சயமாக கரி தான் ( CARBON PAV BHAJI) நெட்டில் பார்க்கவும்..
Deleteநீங்கள் யாராவது சாப்பிட்டு வயத்துக்கு ஒண்ணும் கெடுதல் பண்ணலைன்னாக்க நான் சாப்பிடலாமுன்னுதான் உங்களை சாப்பிடச்சொல்கிறேன்
என்னங்க, பாவ் பாஜிக்கு 10 அல்லது 15 ரூபாய் கொடுக்கலாம். 295 ரூபாய் விலையா? என்ன அக்கிரமம்?
ReplyDeleteஎங்க அப்பா கூட உங்களை மாதிரித்தான் சொல்லுவார்கள் .
Deleteஒரு வடைக்கு 15 ரூபாயாயான்னு
சாதா பாவ் பாஜியே ரூ 50 இருக்கும். இது கரியில முக்கி எடுக்கணுமில்லையாஅதான் அந்த விலை .
அது தவிர இப்படியும் செய்யலாமுன்னு யோசிச்ச ஐடியாக்கு இந்த விலை
விலை 295ஆ
ReplyDeleteஎன்ன விலை என்றாலும் சாப்பிட ஆட்கள் இருந்தால் இன்னும் கூட விலைக்கே விற்கலாம்
ReplyDeleteபாவ்பாஜியில் கரியா நல்லதே இல்லையே....!!!! கார்பன் கார்சினோஜன் இருக்குதே. டாக்டர்ஸ் என்னன்னா இப்ப எல்லாம் தோசை சப்பாத்தி சுட்டா கூட அதுல கறுப்பு கூடாதுனு சொல்றாங்க குறிப்பா கேன்சர் பேஷன்ட்ஸ்க்கு சொல்றாப்புல கூட போறவங்களுக்கும் இனாமா அட்வைஸ். பாட்டி காலத்துல கரி அடுப்புல சுட்டதும் சரி இப்ப கிரில்லுல சுடறதும் சரி கரி நல்லதில்லைனு ஒரு பக்கம் முழக்கம்.
ReplyDeleteபார்க்கவே பன் சுட்ட கத்தரிக்கா மாதிரியும் அது கூட இருக்கற அந்த சப்ஜி.....வேண்டாம் விடுங்க நான் ஏதாவது சொல்ல அப்புறம் இங்க வர்ரவங்க எல்லாரும் வாந்தி எடுத்துட போறாங்க...