ரயில் பயணம் என்பது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து செய்து வருகிறேன் .
காரணம் என் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்தார்.
அப்போதெல்லாம் விருத்தச்சலத்திலிருந்து சொந்த ஊரான தஞ்சைக்கு அருகே உள்ள திருக்காட்டுப் பள்ளிக்குச் செல்லவேண்டுமானால் திருச்சி
சென்று ரயில் மாறி பூதலூர் செல்ல வேண்டும் .
டிரையினில் போவது என்றால் ஒரு பித்தளை கூஜா வில் தண்ணீர் ,கொறிக்க தின்பண்டங்கள் எங்க அம்மா படிக்க தமிழ் வார இதழ்கள் .
டிரையினில் ஊர் போகிறோம் என்றால் ஒரு இரண்டு நாள் முன்பே மனசில் ஏகப்பட்ட சந்தோஷம்இருக்கும் .
டிரையின் கூவு முன்பே நான் கூவி டிரையின் கிளம்பினால் நான் கூவியதை டிரைவர் கேட்டு அதனால் தான் வண்டியை ஸ்டார்ட் செய்கிறார் என்றெல்லாம் பில்டப் கொடுத்திருக்கிறேன் .
( அந்த வயதில் அப்படித்தான் நம்பினேன் ).
பெரியவர்கள்ப க்கத்தில் உட்காந்திருப்பவர்களுடன் ஏகத்துக்கும் அளவளாவி அவர்கள் குடும்ப விவகாரம் நம் குடும்ப விவகாரம்
இவைகளை ச் சொல்லிகொண்டு தான் பயணம் போகும் .
பிறகு கோவைக்கு என் சித்தப்பா வீட்டுக்குப் போகும் போது எங்க அப்பா ஸ்வெட்டர் போட்டு விட்டு ஒரு "டவல் "லை தலையில் கட்டிவிடுவார். மற்றபடி தண்ணீர் தின்பண்டங்கள் வழக்கப்படி .
திருச்சி வந்த பின் அடிக்கடி ரயில் பயணங்களில் நானும் அம்புலி மாமா அந்தக் காலத்தில் அதுதான் காமிக்ஸ்கள் அவ்வளவு இல்லை .
எங்க அப்பா இங்கிலீஷ் பேப்பர் .
அம்மா தமிழ் வார இதழ்கள்
. பக்கத்தில் உள்ளவர்கள் ஆண்களாக இருந்தால் அரசியல் நாட்டு நடப்பு பிரிட்டிஷ் காரன் காலத்தில் எப்படி எல்லாம் ஒரு சிஸ்டமேடிக் ஆக இருந்தது இப்போ நிலவரம் சுத்தமாக சரியில்லை என்ற தினுசில் தான் பேச்சு போகும்
.பெண்களாக இருந்தால் சமையல் கைவேலை இவைகள் பற்றிப் பேசுவார்கள்,
கொஞ்சம் வளர்ந்த பிறகு சென்னை டெல்லி பம்பாய் போன்ற நீண்ட தூரம் பயணங்களின் போது நாங்களும் கொஞ்சம் வளர்ந்த படியால் சீட்டுக் கட்டு செஸ் போர்டு இவைகள்கூ ட வந்து ஒட்டிக் கொண்டன
.குழந்தைகள் ட்ரையினுக்குள்ளேயே ஓடி விளையாடுவார்கள் .
]
காலையில் ஆபீஸ் வேளைகளில் பெண்கள் வண்டி என்றால் ஸ்லோகங்கள் பாண்டிச்சேரி அன்னையின் மலர் போல பாடல்களையும் பாடிக்கொண்டு செல்வார்கள் .
அரக்கோணம் பக்கம் ரயிலில் செல்லும்போது ஜெயா இஞ்சினீரிங்க் கல்லூரி மாணவர்கள் (லேடீஸ் காரெஜுக்கு அடுத்த வண்டியில் ) தாளம் விசில் இவைகளுடன் .சினிமாப் பாடல்கள் பாடிக்கொண்டே செல்வார்கள் .
.
பம்பாயில் சனிக்கிழமைகளில் நானும் என் கணவரும் ஊர் சுற்றிவிட்டு வி. டி ஸ்டேஷனில் ஏறும்போது (இரவு ஒன்பது ,ஒன்பதரைக்கெல்லாம் ) ஒரு குருப்பில் ஒருவர் ஒடி ரெண்டு சைடு சீட்டும் பிடித்து சீட்டு செஸ் விளையாட இடம் பிடிப்பார்
ஆனால் இப்போது செல் ஃ போன் அதுவும் ஸ்மார்ட் ஃ போன் வந்தாலும் வந்தது
சீட்டு செஸ் போர்டு வார இதழ்கள் இவையெல்லாம் காணாமல் போன வர்கள் பட்டியலில் சேர்க்கலாம் போல ஆகிவிட்டது நிலைமை .
எல்லாமே ஸ்மார்ட் போனுக்குள் அடக்கம் .
குழந்தைகளும் இதற்கு அடிமை ஆகிவிட்டனர். ஸ்மார்ட் ஃ போன் கொடுத்தால் உச்ச ஸ்தாயியில் அழுகிற குழந்தை கூட அழுகையை நிறுத்துகிறது.
ஸ்மார்ட் போன்கள் ரொம்பத்தான் ரயில் பயணங்களை மாற்றிவிட்டது..
A
உங்களது நீண்ட ரெயில் பயணங்களை சுருக்காகவே முடித்து விட்டீர்கள். திருச்சி டூ பூதலூர் இடையில், எதிரில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக மணிக் கணக்கில் ஐயானவரம் ஸ்டேஷனில், ரெயில் கிராசிங் என்று நிறுத்தி விடுவார்கள். இப்போது எப்படி என்று தெரியவில்லை.
ReplyDeleteவருகைக்கு நன்றி.Micro blogging காலம் இது என்பதால் ரொம்ப நீளமாக இருந்தால் யாரும் படிக்க மாட்டார்களோ என்று நினைத்தாலும் பிளாட் ஃ பாரம் கிடைக்காமல் பேசின் பிரிட்ஜில் வண்டியை நிறுத்திப் பாடாய்ப் படுத்துவதும் காவிரிப் பிரச்னை மாதிரி .தீர்வு காணப் படாமலேயே இருக்கிறது.அதுக்கெல்லாம் தனி பதிவு தேவை என்று நினைத்த தால் இங்கே சேர்க்கவில்லை.
Deleteஸ்மார்ட் போண்களின் வரவு இரயில் பயணங்களை மட்டுமல்ல குடும்ப உறவுகளின் அலசல்களையும் ஒடுக்கி விட்டது உண்மையே.... - கில்லர்ஜி
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteகாலம் ரொம்பத்தான் மாறிவிட்டது.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇப்போது எனக்கு பிடித்த பயணம் கார் பயணம் ஜூலை முதல் வாரத்தில் நான் டிரைவ் செய்து காரில் பயணம் செய்யப் போகிறேன் ஒன்வே மட்டும் 1200 மைல் என் கூட வரப் போவது என் மகள் எனது நாய்குட்டி மட்டுமே எனது மனைவி விமானத்தில் பயணம் செய்யப் போகிறாள் இவ்வளவு நீண்ட கார்பயணம் பிடித்தற்கு காரணம் மனைவி கூட கார் பயணம் செய்ய மாட்டாள் என்பதால்தான் இதை மட்டும் அவளிடம் சொல்லிவிடாதீர்கள்
ReplyDeleteஇப்பொழுது புரிகிறது ஏன் தங்கள் மனைவி பிளேனை த்தெரிவு செய்துள்ளார் என்று. இப்பவாவது காரில்fuel போட்டு வண்டி ஒட்டவும் .ஸ்டியரிங்கைக் கையில் பிடித்தாலே வண்டி ஓடும் என்று நினைக்கவேண்டாம்
Deleteமதுரைத் தமிழன் இந்தப் பயணம் எங்கு அமெரிக்காவிலா இங்கேயா? அங்குதானோ? நான் தெரியாமல் நீங்கள் இங்குதான் வரப் போகின்றீர்கள் இங்குதான் உங்கள் பயணம் என்று நினைத்துத்தான் சன்னியைப் பற்றிச் சொல்லியிருந்தேன்...எங்கள் தளத்தில் இதைச் சொல்லியிருந்த போது நீங்கள் மூவர் கார் அவங்க விமானம் என்பது குழப்பமாக் இருந்தது
Deleteஅது சரி அவங்க மட்டும் விமானத்திலா....புரிகிறது ஏன் பிடித்தது என்று பூரிக்கட்டையிலிருந்து தப்பிக்கின்றீர்கள் என்றுதானே.......ஹஹஹஹ்
ReplyDeleteநீங்கள் கூவிதால் ரயில் கிளம்ப துவங்கியது அது போல ரயிலின் உள்ளே நான் உட்கார்ந்து அங்கு இருக்கும் ஜன்னலை நான் புஸ் பண்ணியதால் மெதுவாக சென்ற ரயில் வேகம் பிடித்தது என நான் நினைப்பேன்
எனது பயணம் எப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை வரைதான்
வருகைக்கு நன்றி.சிறிய வயதில் அப்படி எல்லாம் நினைத்தால்;தான் வளர்ந்ததும் கிரியேட்டிவ் ஆக எழுத முடியும் .தமிழ் சினிமாவில் வரும் குழந்தை மாதிரி ரொம்பவே லாஜிக்கால்லாம் பேசக்கூடாது.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறு வயதில் ஒரே ஒரு முறைதான். கொலம்போவிலிருந்து (அப்போது சிலோன்) தலைமன்னாருக்கு. தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் கப்பல் பயணம். நாகர்கோவில் வந்த பிறகு கல்யாணத்தின் போதுதான் நினைவு தெரிந்த ரயில் பயணம்.
ReplyDeleteஅதன்பின் பயணங்கள்தான் அதுவும் ரயிலில் அதிகம்....அருமையான அனுபவங்கள் உங்களுக்கு
கீதா