Friday 3 July 2020

காணாமல் போன ஆங்கிலப் பத்திரிகைகள்

 இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி  என்று   ஒரு  ஆங்கிலப்   பத்திரிகை .

இப்போ இருக்கிற 35 வயதிற்குக்     குறைவான பல பேருக்கு இப்படி ஒரு பத்திரிகை  இருந்தது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை .பத்திரிகை என்றால் பெரிய சைசில் .நியூஸ் பேப்பரை  நாலாக மடித்தால் ஒரு சைசு வருமே   அதில் நாலா பக்கத்திலும்  கொஞ்சம் குறைச்சுக்கணும்    வழக்கமான  பத்திரிகைளை    விடப்   பெரிய சைசு .

அந்த  அச்சு வடிவம் போட்டோ  எல்லாமே நன்றாக இருக்கும். 1981 வரை வாங்கிக் கொண்டிருந்தேன் என் சொந்தக் காசில் . பிறகு ஆபிசில் புக் கிளப் இருந்ததது . அதில் இதுவும்  கிடைக்கும் 

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி  படிக்காமல் வெறுமனே கையில் வைத்திருந்தாலே  நம்மைப் பார்ப்பவர் மனதில் இவங்க ஒரு அறிவாளி என்ற எண்ணத்தைக் கொடுக்கும்.  என் குழந்தைகள் பிறந்த பின்பு புத்தகம் படிக்க நேரமில்லை . என் மூத்த மகன் வெகு சீக்கிரம் குழந்தைகள் கதை கொண்ட புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தது விட்டான் . கிட்டத்தட்ட 7 வயதிலேயே .  அதனால் அவனுக்கு என நிறைய  புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தோம் . பிறகு  குழந்தைகள் இருவருக்கும் புத்தகங்களைக் கிழிக்கக் கூடாது படிக்கணும் என்கிற புரிதல் வந்து  இந்தப்   பத்திரிகை வாங்க நினைத்த போது   அந்தப் பத்திரிகை யை  நிறுத்தி விட்டார்கள் .

 நான் படிக்க ஆரம்பித்த போது குஷ்வந்த் சிங் அவர்கள்  அதன் எடிட்டர் ஆக இருந்தார் . அவரின்  'With Malice Towards One and All', என்கிற எடிட்டரின் பக்கம் பலரைக் கவர்ந்த ஒன்று .அவரது லோகோ மறைந்த மரியோ மிராண்டாவின் கேலிச்சித்திரத்துடன் இருக்கும்  . ஒரு பெரிய  பல்புக்குள்  புத்தகங்கள்,  பத்திரிகைகள் மற்றும்  மதுபானங்கள் நடுவே அவர் அமர்ந்து பக்கம் பக்கமாக எழுதுவது போல ஒரு படம் . அவரது ஆங்கில எழுத்து நடை நன்றாக இருக்கும். நான் கல்லுரியில் படிக்கும் நாட்களில் டி வி  கிடையாது . எனவே பத்திரிகைகள் மட்டுமே மக்களிடம் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது .  அதில் வரும் ஆங்கில குறுக்கெழுத்துப் போட்டி மிகுந்த பிரசித்தம் .

Shepherd-Nama: Khushwant Singh - A man who has beaten death in his ...

எமர்ஜென்சி காலங்களில் திருமதி  இந்திரா காந்தி பற்றி ஒரு வாரம்  தனி இதழாகப் போட்டிருந்தார்கள் . மேலும் திருமதி  இந்திரா காந்தி அவர்கள் வெகு விரைவில் குறுக்கெழுத்துப் போட்டிகளின்  வெற்று  கட்டங்களை நிரப்புவார் என்று  ஒரு முறை எந்தப் பத்திகையிலோ எழுத ஆங்கிலக்    குறுக்கெழுத்துப் போட்டிகளை நிரப்பும் விளையாட்டைஇந்தப் பத்திரிகையிலிருந்து விளையாட ஆரம்பித்த என் தோழிகளும் உண்டு.

அதற்குப் பரிசும் உண்டு என்று நினைக்கிறேன் . . அதில்  வரும்  விளம்பரங்களும் அழகாகப்   பளிச் என்று இருக்கும் . நிறைய வீடுகளில் பழைய வீக்லியை விலைக்குப் போடாமல் அப்படியே வைத்திருந்தார்கள் ஏனெனில் விலையும் அதிகம் கண்டென்ட்டும் இருந்தது . பொதுவாக அந்த நாட்களில் எல்லா வீடுகளிலும் கதைகளை எடுத்து பைண்டு பண்ணி  வைக்கும்    வழக்கம் உண்டு . படிக்க விரும்புவோர்   கூகிளில் ஆர்க்கைவ்ஸில் இருக்கின்றன . படித்து இன்புறலாம் .

 

 

 


14 comments:

 1. இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி படிக்காமல் வெறுமனே கையில் வைத்திருந்தாலே நம்மைப் பார்ப்பவர் மனதில் இவங்க ஒரு அறிவாளி என்ற எண்ணத்தைக் கொடுக்கும். //

  ஹா ஹ ஹா அருணா இப்படியெல்லாம் பந்தா விட்டதுண்டு!!

  எங்கள் ஊர் லைப்ரரியில் வரும். எங்கள் வீட்டிற்கு எதிரே உள்ள ரோடில் சென்றால் லைப்ரரி. 2 நிமிட நடையில் ஆனால் எங்களை விடமாட்டார்கள். மாமா சென்று எடுத்து வந்து தருவார். நாங்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

  ஆனால் எனக்கு ஆங்கில அறிவும் சரி தமிழ் அறிவும் சரி மிக மிகக் குறைவு. அதனால் அதிகம் வாசித்ததுஇல்லை. ஹிஹி

  கீதா

  ReplyDelete
 2. ஆனால் எங்கள் வீட்டில் இதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்பவர்கள் உண்டு அதான் என் தங்கைகள் தம்பிகள் எல்லாம்.

  குஷ்வந்த்சிங்க் ஜோக்ஸ் என்று சிலவற்றை ரகசியமாகச் சொல்லி சிரிப்பார்கள்.

  கீதா

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி . ஒரு கால கட்டத்தில் அவர்கள் படிக்கும் பத்திரிகைகள் அவர்களின் அறிவுத்திறனை மதிப்பிடும் ஒரு அளவு கோலாக இருந்ததென்னமோ உண்மை

  ReplyDelete
 4. குறுக்கெழுத்து போட்டியில் பூர்த்தி செய்வது எனக்கு பிடித்தமானது.

  ReplyDelete
 5. நான் பார்ததுண்டு, ஆனால் படித்ததில்லை. என் வீட்டில் ஹிந்து
  தான். இல்லஸ்ட்ரேடட் வீக்லி படித்தால், அறிவு மட்டுமல்ல, மதிப்பும்
  கூடும் என்று தெரிந்துகொண்டேன். நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. Replies
  1. வருகைக்கு நன்றி மேடம்

   Delete
 7. எங்கள் வீட்டிலும் இதற்கு ரசிகர்கள் நிறைய உண்டு.  இது போலவே பவன்ஸ் ஜர்னல்.  நான் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, படித்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி .பவன்ஸ் ஜர்னல் இன்னும் வந்து கொண்டிருப்பது ஒரு சந்தோஷமான விஷயம்

   Delete
 8. இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி - நானும் படித்ததுண்டு.

  ஸ்ரீராம் சொல்லும் பவன்ஸ் ஜர்னல் இன்னும் வருகிறது. தில்லி தான் தலைமையகம். அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 9. வருகைக்கு நன்றி பவன்ஸ் ஜர்னல் இன்னும் வந்து கொண்டிருப்பது ஒரு சந்தோஷமான விஷயம் சென்னையில் நான் பார்க்கவே இல்லசி மயிலாப்பூரில் கிடைக்குமோ என்னவோ தெரியவில்லை

  ReplyDelete
 10. I have heard about this newspaper in my school days, but never read it. Informative article.

  ReplyDelete