Tuesday 14 July 2020

அபிலீன் முரண்பாடு- Abilene Paradox

நாமும் எத்தனையோ முரண்பாடுகளைப்பற்றிக் 

கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் இந்த அபிலீன் முரண்பாடு என்பது நாம் எல்லோர் வீட்டிலும்

 அன்றாடம் நடக்கும் ஒரு  சர்வ சாதாரணமான  ஒரு விஷயம் . 

விளக்கமா சொல்லணுமின்னா இப்படி ஒரு சிச்சுவேஷனை

எடுத்துக்கோங்க

இப்ப ஒரு வீட்டில் ஆறு  பேரு ஒரு  தாத்தா பாட்டி அம்மா அப்பா 

ரெண்டு குழந்தைங்க இருக்காங்கன்னு வச்சுக்குவோம் .சரியா .?

 நாளைக்கு  என்ன இனிப்புப் பலகாரம் பண்ணலாம்னு அம்மா கேக்கிறாங்க . 

பாட்டி உடனே" கேசரி"ங்கிறாங்க .

தாத்தா "சரி "அப்படிங்கிறார் . 

அப்பா" எனக்கு ஓகே "என்கிறார் . 

பசங்களா உங்களுக்கு ?அப்படீன்னு அம்மா கேக்கிறாங்க .

எங்களுக்கும் "ஓகே"ங்கிறாங்க.

ஆச்சா....

அடுத்த நாள் கேசரி பண்ணினால் அவ்வளவாக யாருமே 

சாப்பிடவில்லை . ஏகத்துக்கும் மிஞ்சிக்கிடக்கு

கேட்டால்

மாமியார்” எனக்கு சக்கரை வியாதி எது செஞ்சாலும்   நம்மளாலே  சாப்பிடமுடியாது அப்படியிருக்கும் போது  எதுவானா  என்னா? உனக்கோ கால் வலி அதனாலே நான் கேசரின்னு சொன்னேன் ,

 மாமனார் “எனக்கும் வேறே ஏதாவது கேக்கணுமின்னு ஆசைதான் ஆனா இதுன்னாக்க உனக்கு ஈசி இல்லையோ அதனால நானும்

 வாயைத் திறக்கலை “

கணவர் “சரி பெரியவங்க அவங்க சொல்லும் பொது நாம 

எதுக்குன்னு பேசாம   இருந்துட்டேன்.”

“யாருமே எதுத்துச் சொல்லாதபோது நாமா ஏன் ஏதாவது சொல்லி 

உங்க கிட்டே திட்டு வாங்கிக்கணும் .வேறே ஏதாவது சொன்ன லாக் 

டவுன் நேரத்திலே அது எல்லாம் கிடைக்காது இதெல்லாம் 

கிடைக்காதும்பீங்க எதுக்கு வம்புன்னுட்டுதான் வாயத்தெறக்கல-” 

இது குழந்தைகள்

 ஒரு குழுவில் அதன் தனிப்பட்ட உறுப்பினர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் எதிரான ஒரு கூட்டு முடிவை எடுக்கும்போது

அதாவது  ஒருமித்த முடிவு போல் எடுக்கப்படும்      அந்த  முடிவில் காணப்படும்  முரண்பாட்டுக்குப் பேர்தான் 

அபிலீன் முரண்பாடு.

இந்த முரண்பாடு தியரி யாரால் எந்த வருடம்  ம்ஹூம் 

  ஸ்....ஸ் ப்பா அதுக்கெல்லாம் நான் போகப் போறதில்லை ஏன்னாக்க நான் ஒரு சிறு குறிப்பு வரைக என்கிற ரெண்டு மார்க் கேள்விக்கா பதில் எழுதறேன்

இந்த முரண்பாடு அந்த  அணியின் செயல்பாட்டை  மிகவும்  

 பாதிக்கிறது .அந்த அணியில் இருப்பவர்கள் சொல்லப்போனால் 

ஏனோ தானோ என்று தான் வேலை பார்ப்பார்கள்.

மேலாண்மைத் துறை இதை முடிந்தவரை தவிர்க்கணும் என்பது ஒரு கொள்கை .

ஆனால் இதைச் செயல்படுத்துவது என்பது கடினம்.

ஏனெனில் முடிவு எடுப்பது என்பதே ஒரு கலை .

அது எல்லோராலும் முடியாது.

 எல்லோருக்கும்  கைவராது  அந்த கலை.

 நிறையப் பேருக்கு முடிவே எடுக்கத் தெரியாது .

சிலருக்கு முடிவு எடுக்கத்தெரிந்தாலும் அது நல்லபடியா முடியாட்டி நம்மளை  உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க நமக்கு எதுக்கு வம்புனு    ஒதுங்கிக்கிடுவாங்க. ரிஸ்க் எடுக்கத்  தயக்கம்

அடுத்தவங்க எடுத்த முடிவை  அது எப்படியாகப்பட்ட நல்ல

முடிவாக  எடுத்தாலும்  அதைக் குத்தம் குறை சொல்லத்தான் தெரியுமே தவிர

தானா எந்த முடிவும் எடுக்கத்தெரியாது.- இப்படி ஒரு குரூப்பும் இருக்கும்.

முக்கால்வாசிப் பேரின் நிலைமை அடுத்தவங்க சொல்ற பாதையிலே செய்யற     மனநிலைதான்.

 தவிர எல்லார் எண்ணமும் ஒத்து வந்தா தான்  முடிவெடுப்பேன் என்று அடம்    புடிச்சுகிட்டு இருந்தா ஒருமித்த முடிவுக்கே வரமுடியாத நிலை கூட வரலாம்.

முக்கால்வாசி அலுவலகங்களில் எடுக்கப்படும் முடிவுகளில் இந்த அபிலீன் முரண்பாடு  இருப்பது தெள்ளத்தெளிவு.

 சொல்லப்போனால் இது நம்ம எல்லார் வீட்டிலேயும் தினம் தினம் நடக்கிற விஷயம் தான் .

ஆனால் நாம் இதை இது தான் அபிலீன் முரண்பாடு என்று உணர்ந்ததில்லை. 

சுவீட் கடையிலே சில சமயம் ஸ்வீட் பேரு என்னன்னு 

தெரியாமையே அந்த ஸ்வீட்டைச் சாப்பிட்டுக்கிட்டு

 இருப்போமே  அது மாதிரி .

 

அதனாலே என் எண்ணம் என்னவென்றால் ரொம்பப் பெரிய விஷயமாக இருந்தாலொழிய இந்த முரண்பாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

நாம் எடுக்கிற முடிவு எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்படணும் என்று 

நினைத்தால் கடைசி வரை எந்த முடிவும் எடுக்கவே முடியாது .

இது என் தனிப்பட்ட கருத்து

 


18 comments:

 1. நல்லதொரு கருத்து எதையும் ஆராயாமல் கருத்து சொல்வதே இந்த முரண்பாட்டுக்கு காரணம்.

  நமது முடிவுகள் எப்பொழுதும் சுயமாக இருக்கணும். அது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும்பாலும் கிடையாது ஆகவேதான் தமிழகத்துக்குகூட இந்த நிலை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி . Tamil literation font இருந்தவரை பிரச்னை இல்லை இதில் அலைன்மெண்ட் சரியாக வரலை .என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன் முடியலை

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. Excellent! Children have to be groomed to express their individual opinions..Whether you act on it or not is a different story altogether. Encouraging them to have an independent opinion paves the way for an independent personality and the courage to stick to moral values inspite of situation being unfavourable.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. அபிலீன் முரண்பாடு தெரிந்து கொண்டேன்.

  //நாம் எடுக்கிற முடிவு எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்படணும் என்று

  நினைத்தால் கடைசி வரை எந்த முடிவும் எடுக்கவே முடியாது .
  //

  சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. நாம் எடுக்கிற முடிவு எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்படணும் என்று நினைத்தால் கடைசி வரை எந்த முடிவும் எடுக்கவே முடியாது .
  ஆனால் முடிவு எடுக்குமுன் எல்லோரையும் கலந்து ஆலோசித்தால் எடுக்கப்படும் முடிவு எல்லோராலும் ஏற்கப்படும் அல்லவா?  

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. நல்லதொரு விளக்கம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. அபிலீன் முரண்பாடு பற்றி தெரிந்து கொண்டேன்.  இதைப்பற்றிய அலசல் நன்று.  யாரும் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை போலும்!

  ReplyDelete
 9. Human relationshipதேவையில்லாமல் கெடுத்துக்கொள்ள வேண்டாமென்றுதான் வாயைத்திறப்பதில்லை .

  ReplyDelete