Thursday 16 July 2020

கடைசி பெஞ்சுக்கு வந்த கடும் சோதனை

கொரோனா இந்த உலகத்தில் தற்போதைக்குப் பல விஷயங்களைக்

காணாமல் போகச்செய்து விட்டது.

அதில்  முக்கியமான ஒன்று இந்தக் கடைசி பெஞ்சு .

கடைசி பெஞ்சு பசங்க அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக

இருந்தாலும் சரி கடைசி பெஞ்சு  அப்படின்னாலே ஒரு 

எளக்காரமதான் பாப்பாங்க .

மக்கு பசங்க எல்லாம் கடைசி பெஞ்சுல தான் இருப்பபாங்க என்பது 

இந்தப் பள்ளி மற்றும் கல்லூரி களில்   இந்த  டிஜிட்டல் யுகத்திலும் கூட 

ஒரு எழுதப்படாத  ரூல் .

லாஸ்ட் பெஞ்சா   நீயெல்லாம்  . எருமை மேய்க்கத்தான் லாயக்கு  

என்றெல்லாம் கடைசி பெஞ்சு பசங்களைத் திட்டுவாங்க .

  ..கடைசி பெஞ்சு . பசங்களா சத்தம் போடாதீங்கன்னு திட்டுவாங்க . 

   கடைசி பெஞ்சு பாடத்தைக்   கவனிக்காம  அங்கெ என்னா  பண்றே

இதைச் சொல்லாமல் எந்த டீச்சராலும் பாடம் நடத்தியே இருக்க முடியாது  .

இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் இதையே க் ,ச் ,ப்  விடாமல்

இங்கிலீஷில் சொல்லுவாங்க அவ்வளவு தான்.

கடைசி பெஞ்சத் தவிர்த்து நாம் கல்வியின் வரலாற்றை எழுதவே முடியாது

இந்த ஆன்லையன் கிளாஸ் வந்தப்புறம் கடைசி பெஞ்சு காணாமல் போய் விட்டது . 

கடைசி பெஞ்சு கடந்து வந்த பாதை ரொம்பவே கரடு முரடான பாதை

 டீச்சருங்களும்   சில சமயங்களில் கடைசி பெஞ்சு  பசங்களைத்  திருத்தி

நாட்டையும் திருத்தறோம் அப்படீன்னு நெனெச்சிகிட்டு அப்படியே 

கடைசி பெஞ்சு பசங்களை முன் வரிசைக்கு வரச்சொல்லி  முன் வரிசை 

மாணவர்களைப் பின் வரிசைக்குப்  போகச்சொல்லி  

தோசை மாதிரித் திருப்பி போட்டு  விளையாடற  விளையாட்டையும் விளையாடுவாங்க .

அது கடைசியில் எதிர்மறை விளைவாக முன்னாடி ஒழுங்கா

உக்காந்திருந்த பசங்களும் டீச்சருக்கு  எப்படியெல்லாம் தண்ணி 

காட்டலாம்  என்கிற ஆய கலைகளில் அவசியமான அந்தக்  

கலையைக் கற்றுக்கொண்டு முதல் பெஞ்சுக்குத் 

திரும்பி வந்ததும் செயல் படுத்த ஆரம்பித்து விடுவார்கள் .

 

அதுவுமில்லாமல் காலம்  காலமாக கடைசி பெஞ்சுக்குத் தர வேண்டிய மதிப்பு  

மரியாதை ஒரு சமூக அங்கீகரிப்பு இல்லை என்றே சொல்லணும் .

.நாட்டில் எல்லாத்துக்கும் டேட்டா இருக்கு 

ஆனால் கடைசி பெஞ்சில் படிச்சு பெரிய ஆளானவங்க   எத்தனை பேரு

என்கிற டேட்டா இல்லவே இல்லை .பார்க்கப் போனால் ஒருமுக்கிய 

வரலாறு மறைக்கப் படுகிறது . இன்னைக்கு ரிசல்ட் கூட   

பெண்கள் தேர்ச்சி சதவிகிதம் பையன்கள் தேர்ச்சி சதவிகிதம் 

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம் அரசுப் பள்ளி மாணவர்கள்

தேர்ச்சி சதவிகிதம் என்றெல்லாம் இருக்கிறது 

ஆனால் முதல் பெஞ்சு மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்  

கடைசி பெஞ்சுமாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்  என்று இல்லவே இல்லை . 

அந்த டேட்டா  எதுவுமே இல்லாமல் பொத்தாம் பொதுவா

கடைசி பெஞ்சு  மாணவர்களை இந்த சமுதாயம் பாரபட்சமாக  நடத்துகிறது

கடைசி பெஞ்சு இருந்தவரையாவாது  பாடத்தக் கவனிக்காத மக்குப் 

மக்குப் பசங்கல்லாம் யாருன்னு தெரிஞ்சுக்க     சரியோ  தப்போ 

காலம் காலமாக கடைசி பெஞ்சு  ஒரு அடையாளக் குறியீடாக

(அலகுக்  குறியீடாக)   இருந்தது 

இந்த   ஆன்லயன் கிளாசில் யாரு கவனிக்கிறா யாரு  

கவனிக்க மாட்டேங்கிறாங்க என்பதைக் கண்டே பிடிக்க முடியவில்லை .

அப்பப்போ மூஞ்சி திடும்ன்னு காணாப் போயிடுது  

கேட்டா எங்க ஏரியால கரண்டு கட்டு அப்படீங்கிறாங்க .

மொபைல் டேட்டா காலியாயிடுச்சுங்கிறாங்க

 வகுப்பறையில் கிளாஸ் நடக்கும்போது டீச்சர் கிட்ட சொல்லாம

வெளியே போகவே முடியாது . ஆனால் இந்த ஆன்லயன் கிளாசில்

  டீச்சர் தயவே தேவை இல்லை.

கடைசி பெஞ்சோட  அருமை அது இல்லாதபோது தான் தெரியுது .

 இத்தனை கடும் சோதனைக்கு நடுவிலும் கடைசி பெஞ்சுக்கு  ஆறுதல் 

தரக்கூடிய ஒரு சின்ன  விஷயம் எனக்குத் தெரிந்து   ஃபேஸ்புக்கில்  

தமிழில்  "கடைசி பெஞ்ச் மாணவன் " " கடைசி பெஞ்சர்ஸ்" "

கல்லூரியின் கடைசி பெஞ்ச் " என்று ஒரு மூணு குரூப்பு இருக்கு .

 

இங்கிலீஷில்   Last bench students da  ,Last bench students(danger), Last bench trolls,

Last benchers memes என்று ஏகப்பட்ட குரூப்புகள் இருக்கின்றன ,

 இங்கிலீஷ் மீடியத்தில் படித்தவர்களா எனத்தெரியவில்லை .  இவ்வளவு  சமூக அக்கறையோட   கடைசி பெஞ்சு பத்தி எழுதறேனே 

அதனாலே நான் கடைசி பெஞ்சான்னு கேக்காதீங்க . 

நானெல்லாம் முதல் பெஞ்சாக்கும் . 

அறிவாளிங்கிற காரணமோ இல்லை ஆள் குள்ளமா இருந்த காரணமோ

தெரியல எப்படியோ முதல் பெஞ்சிலேயே காலத்தைக் கடத்திட்டேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


12 comments:

 1. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. நல்லதொரு அலசல் காலமாற்றம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

  எப்படியோ நம்மை யாரும் கடைசி பெஞ்ச் என்று சொல்லக்கூடாதுனு முந்திக் கொண்டு சொல்லி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. Through out my school days,நான் ஒரு கடைசி bench student, because I am tall,so I can relate to the experiences expressed here.It's so much fun.

  ReplyDelete
 4. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. நல்லதொரு கட்டுரை. கடைசி பெஞ்ச். என்னுடைய உயரம் காரணமாக நானும் கடைசி வரிசையில் அமர்ந்ததுண்டு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. அருமை! அட்டகாசம்! ஒரு விஷயம் தெரியுமா? கடைசி பெஞ்ச் மாணவர்கள்தான் அரசியல்வாதிகளாகி நம்மை ஆள்கிறார்கள்.

  ReplyDelete
 7. இதேபோல் இப்பொழுது என்னுடைய வாழ்விலும் நடந்துகொண்டு உள்ளது இப்படிக்கு திருச்சியிலிருந்து சீ.தர்க்ஷ்னா

  ReplyDelete
 8. Very nice 👍 nice research 😃

  ReplyDelete