இப்போ இருக்கிற 35 வயதிற்குக் குறைவான பல பேருக்கு இப்படி ஒரு பத்திரிகை இருந்தது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை .பத்திரிகை என்றால் பெரிய சைசில் .நியூஸ் பேப்பரை நாலாக மடித்தால் ஒரு சைசு வருமே அதில் நாலா பக்கத்திலும் கொஞ்சம் குறைச்சுக்கணும் வழக்கமான பத்திரிகைளை விடப் பெரிய சைசு .
அந்த அச்சு
வடிவம் ஃ போட்டோ எல்லாமே
நன்றாக இருக்கும். 1981 வரை
வாங்கிக் கொண்டிருந்தேன் என் சொந்தக்
காசில் . பிறகு ஆபிசில்
புக் கிளப் இருந்ததது
. அதில் இதுவும் கிடைக்கும்
இல்லஸ்ட்ரேட்டட்
வீக்லி படிக்காமல்
வெறுமனே கையில் வைத்திருந்தாலே நம்மைப்
பார்ப்பவர் மனதில் இவங்க
ஒரு அறிவாளி என்ற
எண்ணத்தைக் கொடுக்கும். என்
குழந்தைகள் பிறந்த பின்பு
புத்தகம் படிக்க நேரமில்லை
. என் மூத்த மகன்
வெகு சீக்கிரம் குழந்தைகள்
கதை கொண்ட புத்தகங்கள்
படிக்க ஆரம்பித்தது விட்டான்
. கிட்டத்தட்ட 7 வயதிலேயே
. அதனால்
அவனுக்கு என நிறைய புத்தகங்கள்
வாங்க ஆரம்பித்தோம் . பிறகு
குழந்தைகள்
இருவருக்கும் புத்தகங்களைக் கிழிக்கக் கூடாது
படிக்கணும் என்கிற புரிதல்
வந்து இந்தப் பத்திரிகை
வாங்க நினைத்த போது அந்தப் பத்திரிகை யை நிறுத்தி
விட்டார்கள் .
நான் படிக்க ஆரம்பித்த போது குஷ்வந்த் சிங் அவர்கள் அதன் எடிட்டர் ஆக இருந்தார் . அவரின் 'With Malice Towards One and All', என்கிற எடிட்டரின் பக்கம் பலரைக் கவர்ந்த ஒன்று .அவரது லோகோ மறைந்த மரியோ மிராண்டாவின் கேலிச்சித்திரத்துடன் இருக்கும் . ஒரு பெரிய பல்புக்குள் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் மதுபானங்கள் நடுவே அவர் அமர்ந்து பக்கம் பக்கமாக எழுதுவது போல ஒரு படம் . அவரது ஆங்கில எழுத்து நடை நன்றாக இருக்கும். நான் கல்லுரியில் படிக்கும் நாட்களில் டி வி கிடையாது . எனவே பத்திரிகைகள் மட்டுமே மக்களிடம் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது . அதில் வரும் ஆங்கில குறுக்கெழுத்துப் போட்டி மிகுந்த பிரசித்தம் .

எமர்ஜென்சி காலங்களில் திருமதி இந்திரா காந்தி பற்றி ஒரு வாரம் தனி இதழாகப் போட்டிருந்தார்கள் . மேலும் திருமதி இந்திரா காந்தி அவர்கள் வெகு விரைவில் குறுக்கெழுத்துப் போட்டிகளின் வெற்று கட்டங்களை நிரப்புவார் என்று ஒரு முறை எந்தப் பத்திகையிலோ எழுத ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டிகளை நிரப்பும் விளையாட்டைஇந்தப் பத்திரிகையிலிருந்து விளையாட ஆரம்பித்த என் தோழிகளும் உண்டு.
அதற்குப் பரிசும் உண்டு என்று நினைக்கிறேன் . . அதில் வரும் விளம்பரங்களும் அழகாகப் பளிச் என்று இருக்கும் . நிறைய வீடுகளில் பழைய வீக்லியை விலைக்குப் போடாமல் அப்படியே வைத்திருந்தார்கள் ஏனெனில் விலையும் அதிகம் கண்டென்ட்டும் இருந்தது . பொதுவாக அந்த நாட்களில் எல்லா வீடுகளிலும் கதைகளை எடுத்து பைண்டு பண்ணி வைக்கும் வழக்கம் உண்டு . படிக்க விரும்புவோர் கூகிளில் ஆர்க்கைவ்ஸில் இருக்கின்றன . படித்து இன்புறலாம் .