Monday 7 November 2016

3 in 1 கலக்கல் பலகாரம்


 நான் போன வாரம் இது பற்றி எழுதணும் என்றிருந்தேன் .

 கம்பியூட்டரில் உட்கார்ந்தால் இடுப்பிற்குப் பிடிக்கவில்லை போல ,

ஊர் சுற்றினால் வலி இல்லை .

கம்பியூட்டரில்  உட்கார்ந்தால் வலிக்கிறது

சரி   என்று தான் இன்று எழுதுகிறேன் .

இது  நான் அடிக்கடி செய்வேன் .

பூரணம் ஒரே மாதிரி தான் .

அதை முதலில் பண்ணி பிரீசரில் வைத்து விடுவேன் .

இது எல்லாவற்றுக்கும் கை கொடுக்கும் .

முதலில் பூரணம் .

கடலைப்பருப்பை  லேசாக  வறுத்துக் கொண்டு  ஒரு  இரண்டு  மணி நேரம் ஊறவிடவும் .

 பிறகு  பிரஷர்   குக்கரில் ஒரு ஐந்து  ஆறு விசில் வரும்  வரை  வேக வைத்துக் கொண்டு தண்ணீரை நன்கு வடித்து விடவும் .

நான் வேக வைக்கும்போதே   தண்ணீர்    சரியான அளவுடன் வைப்பேன் .
 ஹி.. ஹி …..அனுபவம்

பிறகு  ஒரு தட்டில் பரத்தி   நன்கு  உலரவிட்டு ( அவசரமாகச் செய்யணும் என்றால் ஒரு வாணலியில் போட்டு லேசாக சூடு பண்ணினால் உலர்ந்து விடும் . )
பிறகு மிக்ஸியில் அரைத்தால் பூப்  போல  பொல   பொல  என மாவு வரும் .

.தனியே    எடுத்து    வைத்து விட்டு    வெல்லப் பாகு    காய்ச்சி வடிகட்டவும்

    பிறகு    வடி கட்டிய    வெல்லப் பாகுடன்    கடலைப்பருப்பு    வெந்த மாவையும்   போட்டுக்   கலந்து அடி கனமான பாத்திரத்தில் கொட்டி   அடுப்பில்    சிறிய   தீயில்   வைக்கவும் .  
  ஏலக்காய் பொடித்துப் போடவும்

  துருவிய தேங்காய் இஷ்டமானால் சேர்த்துக் கொள்ளலாம் .

 ஒரு 20 நிமிடம் கிளறிய பின்    பந்து    போல உருண்டு  வரும்.

 ஆறிய  பின் கீழே   உள்ள மாதிரி    உருண்டை களாக   உருட்டிக் கொள்ளவும் .




.
 ப்ரீசரில் வைக்கவும் .





 இதே பூரணத்தை    வைத்து   கொழுக்கட்டை ,   போளி,   சுகியன்    என அசத்தலாம் .


 கொழுக்கட்டை :

தேவைப் பட்டபோது    கொழுக்கட்டை மாவைப் பிசைந்து    இதை உள்ளே வைத்து    மோதகம் செய்யலாம்    வெகு    சீக்கிரத்தில் .



கோதுமை/ மைதா  போளி  :

 நான்   பொதுவாக    இந்தப் பூரணத்தை   வைத்து    கோதுமை மாவு சப்பாத்திக்குள்   வைத்து   குழந்தைகள்   சிறியவர்களாக    இருந்தபோது லஞ்சுக்கு   கொடுத்தனுப்புவேன் . சைடு   டிஷ்   செய்ய   வேண்டிய அவசியம் இருக்காது .( மைதாமாவு முடிந்த வரை தவிர்த்து விடுகிறேன் )





 ஏனெனில்   வேலை   பார்த்துக் கொண்டிருந்த போது    நானும்  ஏழு மணிக்கு கிளம்பணும்

  இதே பூரணத்தை  மைதா மாவில் நனைத்து எண்ணையில் பொறித்து , சுகியன்    ( பதிவர் திரு ஸ்ரீ ராம் செய்த மாதிரி )செய்யலாம் .


இந்தப் படம் கூகுளிலிருந்து  சுட்ட  சுகியன் . எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து வருவதால் நான் செய்வதில்லை 

சமீபத்தில் நான் இன்டர்பிரட்டேஷன்  வேலை விஷயமாக மறைமலை  நகருக்குச் சென்றிருந்த போது அங்கு அந்தக் கம்பெனியில் வெள்ளிக் கிழமை பூஜைக்கு என்று ஒரு சுவீட்  கொடுத்தார்கள் 
அது எப்படி என்றால்  மைதா மாவைப் பூரி மாதிரி தேய்த்து அதை சின்ன சின்ன வட்டமாக வெட்டி அதில் இந்தப் பூரணத்தை வைத்துப் பொறித்திருந்தார்கள் . அதுவும் நன்றாக இருந்தது

13 comments:

  1. ஸ்வீட் சாப்பிட வேண்டாம் என்று நினைத்து இருந்தால் இப்படி ஒரு ரிசிப்பி போட்டு பண்ண வைக்கிறீங்களேம்மா?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .அதற்கு ஒரு வழி இருக்கு . தனி பதிவு போடுகிறேன்.

      Delete
  2. ஒரு பூரணத்தில் பல பலகாரங்கள்! நல்ல ஐடியா. எங்கள் ப்ளாக்கில் அந்த ரெஸிப்பியை வழங்கி இருந்தவர் நெல்லைத் தமிழன். படங்கள் நன்றாய் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .கடைசி போட்டோ தவிர மத்ததெல்லாம் நான் செய்ததை நான் போட்டோ எடுத்தேன்

      Delete
  3. உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளவும்...

    ReplyDelete
  4. நல்லாத்தான் இருக்கும் போலயே....

    ReplyDelete
  5. வாரக் கடைசியில் பூரணம் செய்து வைத்துக் கொண்டால் வார நாட்களில் சாப்பிடலாம் .செய்து பாருங்கள்.

    ReplyDelete
  6. Pooranathai theerviduvan yen paiyen.

    ReplyDelete
  7. மைதா தவிர்த்து கோதுமை மாவில் போளி! முயற்சிக்கலாம்! நல்ல குறிப்புகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஐஸ்க்ரீம் போளி பதிவிலிருந்து இங்கே வந்தேன்! சுட்டி தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete