Sunday 27 November 2016

எல்லோருமே ஒரு நிமிட சிந்தனையாளர்கள் / படைப்பாளிகள்
 எழுதுவது என்பது நிச்சயமாக ஒரு கலை,

 ஆனால் அதை ஒரு ஒரு சிறிய  வட்டத்திற்குள் அடைத்து இதுதான் கதை இது  மட்டுமே கட்டுரை, இவர்களின் எழுதும்   பாணிதான்  எழுத்தின்  இலக்கணம்  என்று கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது .


நான் சொல்வது  எழுபது எண்பதுகளில் .

 எனக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது ,
 என் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக நானே  நாட்டு  நடப்பு பற்றின என் எண்ணங்களை எழுதுவேன் .

என் ஆங்கில /தமிழ்   கட்டுரைகள் நன்றாக  உள்ளன என்று பலர் சொன்னாலும் , நான் எழுத்தை என்  முழு நேரத் தொழிலாக வைத்துக் கொள்ள நினைத்ததில்லை .

ஏனெனில் அது  சோறுபோடுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது .
 தவிர என் வேலை அரசாங்க வேலை ,ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை .

இருப்பினும் வேலையில்  இருந்தபோது  என் பக்கத்துக்கு அறையில் இருந்த தோழி மதுரைக்காரர் . தமிழ் எம்  

நாங்கள் இலக்கியம் அரசியல்  பெண்ணியச் சிந்தனைகள் ,அலுவலகத்தில் பெண்களின் பிரச்சனைகள் என  பல விஷயங்கள் குறித்துப் பேசுவோம் .

அவருக்கு என் எழுதும் ஸ்டைல்  பிடித்திருந்தது ,

அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் மிகப் பிரபலமான பத்திரிகையில் முக்கிய பொறுப்பில் இருந்தார்

என்னையும் ஒரு கதை ,இரண்டு கட்டுரை எழுதச்சொல்லி , தானும் எழுதி  அவர் வீட்டுக்கே  ஒரு சுப யோகங்கள் நிறைந்த  வளர்பிறை நாளில் ஞாயிற்றுக் கிழமை   சென்று அவரிடம் நேரில் கொண்டு  கொடுத்தார்

எங்கள் இருவரின் எழுத்து பாணி அப்பொழுது பிரபலமாக இருந்த எழுத்தாளர்களின் பாணியிலிருந்து வேறு பட்டிருந்தது .

 எனவே அவர் என் தோழியிடம் ' அந்த எழுத்தாளர்களின் பாணியைப் பின்பற்றுமாறு அறிவுரை கூறித் திருப்பிக் கையிலேயே கொடுத்து விட்டார் .

 அவங்க பாணியிலே எழுதணுமின்னா நாம எதுக்குன்னுட்டு பேசாம இருந்துட்டோம் .

நாங்கள் எங்கள் சுயத்தை  இழக்க விரும்பவில்லை.

பல காரணங்களால் எழுத்து ஆசை க்கு ஒரு பெரிய விடுமுறை . பிறகு 1999 ல்  எழுத ஆரம்பித்தேன் , கதை அல்ல , நான் எழுத ஆசைப்பட்ட  எந்த ஒரு தலைப்பிலும் எழுதினேன்
மங்கையர் மலர் ,சிநேகிதி ஞான ஆலயம் போன்றவைகளில்  பிரசுரமாயின . பிறகு ஜப்பானிய மொழி வேலையில் பிசி ஆகிவிட்டபடியால் கொஞ்சம் நிறுத்தி வைத்தேன்
பிறகு பிளாக்  டிவிட்டர் எழுதுகிறேன் .

ஆனால் நிலைமை இப்போது அப்படி இல்லை ,
நாமே பிளாக்    டிவிட்டர்     மூலம் எழுதிக் கொள்ளலாம் .

  தவிர  மற்ற எழுத்தாளர்கள் பாணியைத்தான்   நாம் பின் பற்றவேண்டும் என்கிற அபத்தமான எழுதப் படாத  ரூல்கள்  இல்லை .

  முன்பெல்லாம் ஒரு சில கார்டூனிஸ்டுகள் தவிர வேற யாரும் அரசியல் ,நாட்டு நடப்புகளைக் கிண்டல் செய்ய , எழுத அதற்கான தளம் அல்லது எழுதினாலும் பிரசுரம் செய்ய ,அவர்களை ஊக்குவிக்க என்ற சமாச்சாரங்கள் கிடையவே கிடையாது ,

 குறிப்பாகச் சொன்னால் ஒரு சிலரின் சிந்தனைகள் மட்டுமே எழுத்து   வடிவில்   சுகப்  பிரசவம் .
மற்றவர்களின் வித்தியாசமான சிந்தனைகள் குறைப்பிரசவம் ஆகின .


 இப்போது அப்படி அல்ல

  உதாரணமாக  Demonitize  செய்த அரை மணிக்கெல்லாம் ஏகப்பட்ட  சுவாரஸ்யமான மீம்ஸ் , ஜோக்ஸ் ,,கண்டனங்கள் , பாராட்டுக்கள் என்று  வந்து குவிந்துவிட்டன
நிச்சயமாக இவை எல்லாம் பழையகாலத்தில் வந்த  கார்ட்டூன்களுக்கு எந்த விதத்திலும் குறைவானவை அல்ல.

பலரின் வித வித மான சிந்தனைகளுக்கு ஒரு வடிவம் தர பிளாட்பாரங்கள் வந்து விட்டன

டிவிட்டரில் , பேஸ்புக்கில் ,பிளாக்கில் என்று மைக்ரோ பிளாக்கில் வந்த வண்ணம் .
அவற்றுக்கெல்லாம் ஏகப்பட்ட லைக்ஸ் . ஷேர்ஸ்  .

 அது மட்டுமல்ல .
 இப்பொழுது சில நியூஸ் பேப்பர் மற்றும்  வார இதழ்களிலும்  
 டி  வியிலும் சுவாரஸ்யமான  ட்வீட்டர்கள் ,மீம்ஸ் , வாட்ஸ் அப் காமெடிகள் இவற்றை அப்படியே பிரசுரம் / ஒளிபரப்புச் செய்கிறார்கள் .


சிந்தனை என்பதும் எழுத்து என்பதும் ஒரு சிலரின் ஏகாதிபத்திய உரிமை என்பது போய் யார் வேண்டுமானாலும்  , விருப்பப் பட்டால் ஒரு நிமிட எழுத்தாளர்களாகவோ  அல்லது   வாழ்நாள் எழுத்த்தாளர்களாகவோ ஆகலாம் என்ற நிலை வந்து விட்டது,
இது வரவேற்கத் தக்கது


12 comments:

 1. வரவேற்கத்தக்க மாற்றம் தான் இது. முன்பு இருந்ததற்கும் இப்போதைக்கும் எத்தனை வித்தியாசம். நாம் எழுதுவதை மாற்றி அதன் போக்கையே மாற்றி விடுவார்கள்!

  ReplyDelete
 2. பத்திரிகைகளுக்கு நாம் நம் படைப்புகளை அனுப்பினால் அது பிரசுரமாகுமா ஆகாதா என்று அறியவே மாதக்கணக்கில் பிடிக்கும். அப்படியே பிரசுரமானாலும் அதை பாராட்டி அல்லது அது பற்றி அடுத்த வாரம் அந்த இதழில் ஒரு கடிதமாவது வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்! இங்கும் அப்பை இல்லையே... உடனடியாக சுடச்சுடக் கருத்துகள்.. இவ்வ்ளவு பேர்கள் படித்திருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம்.. நீங்கள் சொல்வது போல இது வரவேற்க்கத்தக்க நிலை.

  உங்களிடமிருந்து எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதிக்கு ஒரு கதை எதிர்பார்க்கலாமா? சம்மதம் எனில் sri.esi89@gmail.com என்கிற மெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னென்ன அனுப்ப வேண்டும் என்பதை நீங்கள் இத்தனை நாள் அங்கு படித்த அனுபவத்தில் அறிந்திருப்பீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. நேரம் கிடைக்கும் போது எழுதி அனுப்புகிறேன் அழைத்தமைக்கு நன்றி

   Delete
 3. உண்மையிலேயே வரேவேற்குத் தகுந்த மாற்றம்தான்

  ReplyDelete
 4. தொடர வேண்டும் என்பதும் முக்கியம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தொடரணும்னு தான் ஆசை . வேலைகள் வந்துட்டாக்க

   Delete
 5. உண்மைதான். நான் பல சிறு கதைகள் எழுதி அனுப்பி பிரசுரம் ஆகாமல் மீண்டும் வந்த காலம் உண்டு. அப்படி எழுதி வைத்த சிறுகதைகளை எங்கள் தளத்தில் எழுதியிருக்கிறேன். கீதா தான் தளம் தொடங்கலாம் என்று சொல்லி நான் எழுதி வைத்திருந்தக் குறிப்புகளைக் கொண்டு அவரும் கதைகள் புனைந்து எங்கள் தளத்தில் பதிந்திருக்கிறோம். நாமே ராஜா, நாமே மந்திரி போன்று இப்போது நமக்கு எத்தனை வாசகர்கள் இல்லையா...நல்ல அனுபவமே..இது வரவேற்கத் தக்க மாற்றமே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி Geetha madam

   Delete
 6. தற்போதுதான் தங்கள் தளத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துகள்.
  ஒரு காலத்தில் வாசகர் கடிதம் எழுதி வராதா என எதிர்பார்த்தோம். தற்போதோ தளங்கள் கிடைத்துவிட்ட நிலையில் நம் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நன்கு பயன்படுத்திக்கொள்வோம். நன்றி.

  ReplyDelete
 7. வரவேற்கத்தக்க மாற்றம்தான்....
  மாற்றம் ஒன்றுதானே மாறாதது....!!!

  ReplyDelete