Saturday 12 November 2016

மூன்றெழுத்து மகாத்மியம்
 மூன்றெழுத்து     என்பது   பாமரன்   முதல்   அறிவாளிகளாலும்    

,ஆன்மிகம்    அரசியல் போன்ற வற்றிலும் சர்வ சாதாரணமாக

எதோ ஒரு எண்ணத்தை அழகுற 

வெளிப்படுத்த உபயோகிக்கப் படுகிறது.


 "ஒரு   மூணு   எழுத்து   முழுசா   எழுதத்    தெரியாத    மூதேவி  

  நீயெல்லாம் பேச வந்துட்டே பாரு " என்று  அறியாமை        ரூட்டை   எடுத்து 


   அடுத்தவர்களைக் கடுப்பேத்த  நாம் சொல்லும் போது  

 அப்போது        அந்த மூன்றெழுத்தின் 

பெருமை யை  விட       வன்மை  ( effectiveness ) புரிகிறது.


சினிமா என்று எடுத்துக் கொண்டால்   மல்லாக்கப் படுத்துக் கிட்டு 


விட்டத்தைப் பாத்துகிட்டே  பொழுதை கழிக்கும்     வெட்டி ஆட்கள்  கூட  

முணு முணுக்கும் பாட்டு           "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் "

என்று சத்தியம் பண்ணிச் சொல்லலாம் .


மூன்றெழுத்து என்ற தலைப்பிலேயே ஒரு சினிமா கூட வந்தது . 

  நன்றாக  ஓடியது . அரசியல்   என்றால்    கலைஞர்    அவர்கள்   அண்ணா   இறந்த போது

வாசித்த    கவிதை யில் பல மூன்றெழுத்து வார்த்தைகளால்

 வார்த்தை மாலையே     தொடுத்திருப்பார் ..


மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு-அதில்
முத்தமிழ் மணமுண்டு
மூவேந்தர்,முக்கொடி,முக்கனி-என
மும்முரசு ஆர்த்தவர் தமிழர்
அவர் வாழ்ந்த -தமிழ்
வாழ்வுக்கு மூன்றெழுத்து-அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம்
அன்புக்கு மூன்றெழுத்து-அந்த
அன்புக்கு துனைநிற்கும்
அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையில்எழும்
காதலுக்கு மூன்றெழுத்து
காதலர்கள் போற்றி நின்ற கடும்
வீரமோ மூன்றெழுத்து
வீரம் விளைக்கின்றகளம் மூன்றெழுத்து
களம் சென்று காண்கின்ற
வெற்றிக்கு மூன்றெழுத்து-வெற்றிக்கு
ஊக்குவின்ற அமைதிமிகு
அண்ணா   மூன்றெழுத்து.

 (நெட்டிலிருந்து சுட்டது )

 அந்தக் காலத்தில் இந்தக் கவிதையை மனப்பாடமாக ஒப்புவித்த 

மாணவர்கள் பலர் .


 நமது   ஆழ்வார்களுள்   பெரியாழ்  வார் அவர்கள் 

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இந்த மூன்றெழுத்து

என்ற ஒரு வார்த்தையை    வைத்து     ஒரு    பாசுரம் பாடியிருக்கிறார் .

  மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்
      மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய
      எம் புருடோத்தமன் இருக்கை
மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி
      மூன்றினில் மூன்று உரு ஆனான்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல்

      கண்டம் என்னும் கடிநகரே .

        இந்தப்    பாசுரத்தில் கங்கைக் கரையில் உள்ள கண்டம் எனும் ஒரு 


திருப்பதி பற்றியும் அதன் சிறப்புக்களைப் பற்றியும்  மூன்று என்ற 

வார்த்தையை வைத்து அழகுற     இயற்றியுள்ளார்     பெரியாழ்வார்  .    

8 comments:

 1. நெட்டில் நல்லதையே சுட்டு இருக்கின்றீர்கள் நன்று

  ReplyDelete
  Replies
  1. கலைஞரின் கவிதை வரிகள் மட்டும் தான் சுட்ட வரிகள் . மற்றவை சுடாத வரிகள்

   Delete
 2. மூன்று பற்றி மூன்று தகவல்கள் (சினிமாப பெயர், கலைஞர் உரை, பாசுரம்) சுவாரஸ்யம். ஆனால் படிக்காதவர்களை சொல்ல நாலெழுத்து என்று சொல்லித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்! :))))))

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நீங்கள் சொல்வது போல் அப்படி ஒரு சொல் வழக்கும் உண்டு
  அதே போல் ரெண்டு எழுத்து கத்து இருந்தேன்னாக்க என் கதையே வேறே
  என்ற சொல் வழக்கும் உண்டு . நான் எடுத்துக் கொண்ட டாபிக்கிற்காக மூணெழுத்தை மட்டும் எடுத்துக் கொண்டேன் .Auto suggestionl ல் ஒரு Error வந்துவிட்டது .அதுதான் என் காமெண்ட்டை அழித்து விட்டேன்

  ReplyDelete
 5. மூன்றெழுத்து அருமை...ஆனால் அந்த மூன்றெழுத்து/ மூன்றெழுத்துச் சொல் என்னனு லிஸ்டே போடலியே...மூன்று மூன்று அட!

  காதலர்ட்ட கேட்டிங்கனா காதல் அப்படிம்பாங்க

  நண்பர்கள்கிட்ட கேட்டா நட்பு அப்படிம்பாங்க

  கல்வியாளர்கிட்ட கேட்டிங்கனா கல்வி அப்படிம்பாங்க

  ரவிஷங்கர்ட்ட கேட்டிங்கனா மூச்சு (க்) கலை அப்படிம்பார்...நீங்க அந்த க் ஐ சேர்த்து நாலெழுத்துனு எல்லாம் சொல்லக் கூடாது!

  பிடித்த மொழி என்று கேட்டால் தமிழ் என்பார் கலைஞர் தமிழ் என் மூச்சு....அட மூன்றெழுத்து!!

  தத்துவஞானிகள் அன்பே சிவம் அப்படிம்பாங்க!

  அருமையான தொகுப்பு! ஆனால் அந்த மூன்றெழுத்து என்னனு மட்டும் சொல்லவே இல்லையே!!!!ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete