Sunday 17 November 2013

அப்பாவும் முப்பத்திரண்டு சோற்று உருண்டைகளும்

சின்ன வயதில் எங்க அப்பா வைத்ததுதான் வீட்டில் சட்டம் .
சாப்பாட்டில் இருந்து படிப்பு வரை .
அதை யாருமே எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாது.
நான் மட்டும் டபாய்க்கும் வழி முறைகள் சில தெரிந்து வைத்ததினால்
சில சமயங்களில் எஸ்கேப் !

மற்றும் கடைசிக் குழந்தை என்பதால் செல்லம் வேறு. 

வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்காந்து  சாப்பிடணும்.
அவரோட உட்காந்து சாப்பிடுவதற்குள் போதும் போதும் ன்னு ஆயிடும் .
கையைக் கீழே ஊணக்கூடாது .
சாப்பிடும் போது பேசக்கூடாது.
அதுவும் 32 உருண்டை கட்டாயம்அவங்க அவங்க கை சைசுக்கு  சாப்பிடணும் இல்லாட்டி செத்தப்புறம் சாமி சாப்பிடாமல் விட்ட பாக்கி உருண்டைகளை கணக்கு போட்டு அதற்கு சரிசமமான சாணி உருண்டைகளை சாப்பிடச் சொல்வாராம் .டெய்லி மிச்சம் வெச்ச உருண்டைகளை கியுமுலேட்டிவ் சிஸ்டமில் கணக்கு  வெச்சு தீட்டி டுவார் என்றெல்லாம் சொல்லி கொடுமைப்படுத்திய காலம் .
திட்டவட்டமாக 32 தான் என்கிற  நம்பரை  எங்கே இருந்து புடிச்சார்
 உலகத்தில் இந்த மாதிரி சாப்பாடு  மிச்சம் வக்கிரவங்களுக்காக சாணி ஸ்டாக்கு சாமி எப்படி  மெயிண்டயின் பண்ணும்   என்கிற கேள்வியெல்லாம் கேட்க நினைத்தேன் அவரிடம் கேட்க முடியாது.அம்மாகிட்டே கேட்டேன் .
வாயை மூடிட்டு சாப்பிடு என்கிற தப்பான லாஜிக்கோட மிரட்ட ... நான் கப் சிப்
அப்பொழுது அவர் பாவம் எனக்கு ஒரு மகன் பிறந்து இனிமே எந்தக் குழந்தையையுமே 32 உருண்டை சாப்பிடச் சொல்லமுடியாத படி ஒரு
செம ஆப்பு வெப்பான் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

 இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியாமல் நான் என் அம்மாவிடம் என் அப்பா வருவதற்கு முன்பே அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே  என்று ஒரு பிச்சைக்கார டயலாக் அடித்து அப்பா  வருவதற்கு முன்னாடியே சாப்பிட்டு முடித்து அவரிடம் இருந்து தப்பித்தேன் .
பிறகு எட்டு ஒன்பது  வயதானதும்அம்மா நீங்களே பாவம் எல்லா வேலையும் செய்யறீங்க  நானே போட்டு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று பொறுப்புள்ள பிள்ளை மாதிரி வசனம் பேசி சுதந்திரம் பெற்றேன் .
அந்த வயசிலேயே அந்தக் காலத்திலேயே எவ்வளவு டிப்லோமேடிக்காக
அணுகியிருக்கிறேன்  பாருங்கள் .

 பிறகு  எனக்கும் மகன் பிறந்தான் .

அவனுக்கு சாப்பாட்டு கொடுப்பதற்கும் போதும் போதும் என்று ஆகிவிடும்.
நான் ஹைதராபாத்  போனால்  இப்பக்கூட  பக்கத்து வீட்டினர்  என் மகனிடம் சாப்பிடுவதற்காக அவன் படுத்திய பாட்டைச்  சொல்வார்கள் .

பெரியவனுக்கு ரெண்டேகால் வயசு இருக்கும் .
சின்னவன் ஒரு நான்கு மாதக் குழந்தை .
நானும் ஆபீசு போக ஆரம்பித்து விட்டேன்.
எங்க அப்பா என் பணிப்பெண் எல்லாருமே எனக்கு குழந்தை வளர்க்கத் தெரியவில்லை
நீ ஆபீசு போனப்புறம் நாங்க எப்படி அவனை சாப்பிட வெச்சு  நல்லா  குண்டாக ஆக்கிடறோம்  பாரேன் ன்னு சவால் .

ஒரு முக்கியமான விஷயம் இந்த இடத்தில்
மத்தியான தூக்கம் இல்லைன்னாக்க எங்க அப்பா வுக்கு மூட் அவுட் ஆயிடும் .
என்னுடன் அவர் வாழ்ந்த 54 வருடங்களில் அவர்  மத்தியான  தூக்கம் தூங்காத நாட்கள் என்றால் ஒரு பத்து நாள் கூட இருக்காது .

கல்யாண வீடோ செத்த வீடோ எதுவானாலும் உட்கார்ந்த நிலையிலேயே அரை மணி தூங்கி விடும் அசகாய சூரர் 

ஒரு ரெண்டு மூணு நாள் எல்லாம் நல்லத்தான் போயிக்கிட்டு இருந்திச்சு .
ஒரு நாள் என் மகனிடமும் இந்த 32 உருண்டை டயலாக்  மற்றும் அதன் விவரங்களை சொல்லியிருக்கார் .
அவருக்கு தெரியலை அன்றைய அவரின் ராசிக்கட்டத்தின்  12 கட்டத்திலிருந்தும் குரு புதன் போன்ற சுப கிரகங்கள்  எல்லாம் காலி பண்ணி போக சனியே 12 கட்டத்திலும் பூந்து விளையாடுகிறார் என்று.

என் மகன் 32 கணக்கு காமிக்க பத்து அப்புறம் இருபது  ஸ்டிரைட்டா முப்பது முப்பத்தி ஒண்ணு முப்பத்தி ரெண்டு என்றெல்லாம்  ஷார்ட் கட் செய்தும் விடவில்லை அப்பாவும் பணிப்பெண்ணும் .

சாப்பிடுடா  சாமி சாணி உருண்டை குடுப்பார் என  தொடர் மிரட்டல் 

பையன் மசியலை 

ராசிக் கட்டத்திலே இருந்த சனி எங்க அப்பா நாக்குக்கு
ஷிஃப்ட்   ஆகி
சாப்பிடுடா கண்ணா  அப்புறம் உனக்கு சாக்கிலேட் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் .
நான் எட்டடி பாஞ்சா எம்புள்ள 16 இல்ல இல்ல 32 அடி பாய்வான் என்கிற  வெவரம் எங்க அப்பாக்கு கிடையாது.
அவனும் சாப்பிட்டு விட்டு  நல்ல புள்ளயா  (என் புள்ள வேறே எப்படி இருக்குங்கிறீங்களா  அதுவும் சரிதான் )கான்ட்ராக்ட் போட்டபடி சாக்கிலேட் கேட்டு இருக்கிறான் .
ஒன்று மட்டும் குடுத்து இருக்கிறார்கள் .
பையன் 32 சாக்கிலேட் குடு இல்லாட்டி சாமி  32 சாணி உருண்டை குடுத்திடும் என்று சொல்லியிருக்கிறான் .
எங்க அப்பா சாப்பாடு  வேறேடா  சாக்கிலேட் வேறே டா
 சாக்கிலேட் சாணி உருண்டை கணக்கில் சேராது என்று சொல்லியிருக்கிறார் .
பையன் விடவில்லை 
சாப்பாட்டுக்கு ஒரு லாஜிக் சாக்கிலேட்டுக்கு ஒரு லாஜிக்கெல்லாம் சாமி வெச்சுக்காது. என்கிற அர்த்தத்தில்
அம்மாதான் சாமி அந்த மாதிரி வேறுபாடெல்லாம் பாக்காது ன்னு சொல்லியிருக்கங்க . ன்னு லா பாயிண்டு எடுத்து வுட்டுருக்கான்

எப்படி என் வார்த்தை யை தெய்வ வாக்காக மேற்கோள்  காட்டியிருக்கான் பாருங்க
அதுவுமில்லாம  சாணி உருண்டை  நீங்க சாப்பிடனும்ன்னாலும் பரவாயில்ல நானில்ல சாப்பிடணும் என்று ஒரே அழுகை ,
அடம் .
இவன் அழுததில் இரண்டாவது குழந்தையும் அழ யாருமே தூங்க முடியவில்லை .
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரப் போராட்டம் .
பக்கத்து வீட்டில் உள்ளவர் முயற்சி செய்தும் விடாமல் அதே டயலாக்  அதே அழுகை
அப்புறம் மத்தியானம்  3 மணிக்கு   சாமிக்கு விளக்கு ஏற்றி வைத்து ஊதுபத்தி காமிச்சு   32 சாக்கிலேட் சாப்பிடாததற்க்கான  சரிசமமான    32 சாணி உருண்டை யை எங்க அப்பாவுக்கும் அந்த பணிப்பெண்ணுக்கும்  ஆன சாணி உருண்டை அக்கவுண்டில்
 சேர்க்கும்படியாக வேண்டிக்கொண்டு
சாமி கே சொல்லிடுச்சுடா ன்னு சமாதானம் பண்ணி  இருக்காங்க .
சைக்கிள் கேப்பில என் பையன் என்ன அறிவு பாருங்க
அப்படியே சாமிகிட்டே சாக்லேட் மட்டுமில்ல சாதம் சப்பாத்தி இட்லி தோசை எதுக்குமே 32 வேணாம்ன்னு சொல்லிடுங்கன்னுருக்கான்.
 மத்தியான தூக்கம் போன எரிச்சலில் எங்கப்பா வெறுத்துப் போய் போடா இனிமே 32 நம்பரையே கணக்குலேருந்து எடுத்துடலாம்ன்னு சொல்லிட்டார்

  


26 comments:

  1. //சின்ன வயதில் எங்க அப்பா வைத்ததுதான் வீட்டில் சட்டம் //

    உங்கப்பா என்ன கார்பெண்டரா?


    சின்ன வயசிலே உங்க அப்பா சட்டம் போட ஆரம்பிச்சுட்டாரா?

    ReplyDelete
  2. வாலுக்கு பிறந்தது வாலுவாட்டம்தானே இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் உறுதியாகச் சொல்லமுடியாது.
      உங்க அம்மா பரம சாதுவாமே !

      Delete
  3. நான் எங்க வீட்டில் கடைசி குழந்தைதான் ஆனா யாரும் எனக்கு செல்லம் தரவில்லை. கடைசி பிள்ளை எடுப்பார கைபிள்ளை போல இருந்தேன் . பொண்ணா பிறந்து இருந்தா செல்லமா வளர்ந்து இருக்கலாம். ஹும்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. ஹைய்யா... எங்க வீட்ல நானும் கடைசியா பொறந்தேனே..அதுவும் எங்க அக்கா.. அண்ணாவுக்கு அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பொறந்ததால இன்னும் ஸ்பெஷல் நான் வளர்றதுக்குள்ள அவங்க செட்டிலாகி போய்ட்டாங்க... வீட்ல நாந்தான் இளவரசி, மஹாராணி...எல்லாம்... சமையல் எதாவது எனக்கு புடிக்கலைன்னு சாப்பிடாம விட்டா.. எங்க அம்மா என் கையில் கால்ல விழுந்தில்ல சாப்பிட கெஞ்சுவாங்க.... ஹா... ஹா... ஆமா எங்கோ புகையற நெடி வருதே...? 'அவர்களே ' ...இப்படித்தான்...!

      Delete
    2. கடைசிக் குழந்தைகள் சமர்த்தாக இருந்தால் மட்டுமே செல்லமாக
      இருக்கமுடியும் .ie Conditions apply

      Delete
    3. இளவரசி மஹாராணின்னு உங்களை கூப்பிடனும் என்று சொல்வரீங்களா?

      இளவசின்னு கொஞ்சம் இளமையானவர் மஹாராணின்னா ஒல்டு. இப்ப சொல்லுங்க எப்படி உங்களை கூப்பிடுறதுன்னு

      Delete
    4. அசடான குழந்தைகள்தான் சமத்தாக இருக்க முடியும் பெயர் எடுக்க முடியும்
      ie Conditions apply

      Delete
    5. ம் அழகுல இளவரசி அதிகாரத்துல மஹாராணின்னு அர்த்தம் எடுத்துக்கனும் ... சும்மா நொய் நொய்னு கேள்வியெல்லாம் கேட்கப்படாது....

      Delete
  4. ஆமாம் நீங்க ஆபிஸுக்கு போகும் முன் குழந்தை சாப்பாட்டை" வாயில் வைக்கிற அளவிற்கு டேஸ்ட்டாக" சமைத்து வைக்காமல் அப்பாவை குறை கூறுகிறீர்களே பாவம் அந்த அப்பாவி மனிதர்

    ReplyDelete
  5. உங்களுடைய முந்தைய பதிவில் எனது பூரிக்கட்டை எடுத்து கிண்டல் பண்ணி இருக்கிறீர்கள். இந்த பதிவில் எனது முந்தைய பதிவில் நான் சொன்ன 32 பல்லும் போச்சு என்பதில் இருந்து 32 யை எடுத்து காமெடி பண்ணி இருக்கிறீர்கள்... உங்களுக்கு வர வர கிண்டல் அதிகம் ஆகிடுச்சு போல

    ReplyDelete
    Replies
    1. ஹை..இப்பதான் தோணுது .
      இது மாதிரி நாலஞ்சு பதிவிலே இருந்து வார்த்தையை சுட்டு கொஞ்சம் நம்ம திங்கிங் போட்டு பெரட்டி ரொட்டி சுட்டு பதிவாக்கிடலாமுன்னு.
      ஐடியாவுக்கு நன்றி.

      Delete
  6. நக்கல், கிண்டல் எல்லாம் தானாக வருவது....அது உங்களுக்கு மிக நன்றாகவே வருகிறது.

    ReplyDelete
  7. இதை படிச்சவுடனே என் மகளை நான் சாப்பிட வைக்க பட்ட பாடு நினைச்சி சிரிப்பா வருது.. டி.வியில் பார்த்து ..நடிகை ஜோதிகா ன்னா என் குட்டிக்கு பிடிக்கும்.. ஜோதிகா ஆன்ட்டி வந்தாதான் சாப்பிடுவேன்னு ரொம்ப அடம் புடிப்பா... "ஜோதிகா ..இப்ப ஊர்ல இல்லையாம்... ஸண்டே வர்றாங்களாம்னெல்லாம்..." சமாதானப்படுத்தி ஊட்டுவேன்.. ஸண்டேவும் வந்தது... அன்னிக்கு ஒரே அழுகை இப்பவே ஜோதிகா ஆன்ட்டி வந்தாகனும்னு..! வேற வழியில்லாம பக்கத்து வீட்டு ஆன்ட்டியை ஜோதிகா மாதிரி போன்ல பேச வச்சி சமர்த்தா சாப்பிட சொல்ல வச்சேன்..! இப்ப என் குட்டி கிட்ட இத சொன்னா " மம்மி ரொம்ப கேவலமா இருக்கு வெளியே சொல்லிடாதங்கறா..."

    ReplyDelete
    Replies
    1. ஒரு குழந்தையை சாப்பிட வைப்பதின் கஷ்டம் நமக்குப் புரிகிறது .ஆனால்
      "அவர்கள்" புரிந்து கொள்வது கஷ்டம்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அட வுட்டா குழந்தையைக்கு ஊட்டி விடுறது என்னமோ அம்மா மட்டும்தான் என்று கதை உட ஆரம்பிக்கிறீர்களே எங்க வூட்டு குழந்தையை ஊட்டி வளர்த்தது நாந்தாமோ....................

      Delete
  8. ஹஹஹஹஹஹா படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன்... இப்போ முப்பத்து ரெண்டு பல்லும் கொட்டிடுமோ?

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி

      Delete
    2. பல்லு கொட்டலைன்னா சொல்லுங்க ஆளு அனுப்புறேன்

      Delete
  9. ஹா ஹா... அந்த முப்பத்து ரெண்டுங்கிறது என்ன கணக்கு?

    ReplyDelete
  10. எங்க அப்பா இதுமாதிரி நிறைய சொல்லி பயமுறுத்தி இருக்கார்.
    ஏழு கண்ணு முனியன் (ஒரே முகத்தில் ஏழு கண்ணும் எந்த எந்த இடத்தில் இருக்குமுன்னு எல்லாம் கேட்டிருக்கேன் , பதில் சொன்னதில்லை. குறுக்கு கேள்வி கேட்டாக்க அது கோச்சுக்கும் என்பார் ) இன்னும் நிறைய..... .தனி பதிவே போடலாம் .

    ReplyDelete
  11. வெடித்து சிரிக்க வைத்த பதிவு... வாழ்த்துக்கள்

    சிரிப்பை தொடர ஆசை..

    ReplyDelete