நாளை முதல் ஒரு மாணவருக்குப்
பாடம் கற்பிக்கும் வேலை ( உலகளாவிய
ஜப்பானிய மொழி பரீட்சை 2.12.2013 அன்று
இருப்பதால் ) மறுபடியும் இரண்டு வாரத்திற்கு திங்கள்
முதல் வெள்ளி வரை பதிவிற்கு விடுமுறை.
எனவே இப்ப ஒரு
சின்ன பதிவு.
எனக்கு இந்த
சமுதாயத்தில் நடக்கும் பல நிகழ்வுகளைப் பார்க்கும்
போது பல சந்தேகங்கள் வருகின்றன
.
யாராவது
முடிந்தால் ஏன் இப்படி என்று
பதில் சொல்லுங்கள் .
தகுந்த
சன்மானமாக சனி கிரகத்துக்கான போக
வர டிக்கெட்டு
தரலாமா
என ஆய்வில் உள்ளது.
சனி நம்மகிட்டே வரதுக்கு முன்னாடி நம்ப
சனிகிட்டே போய்ட்டா சனி
வேறே யார்கிட்டேயாவது போயிடும் என்பது ஐதீகம் ( நம்ப என்ன
சொன்னாலும் மக்கள் நம்புவாங்க என்ற அசைக்க
முடியாத நம்பிக்கைதான் )
சரி .சந்தேகத்துக்கு வருவோம்.
அங்கங்கே
பேப்பரில் காய் கறி வெட்ட
,நொடியில் அரைக்க .ஆட்டோமேடிக்கா
சமைக்க என்று பல வித
இயந்திரங்களும் சாதனங்களும் விற்கிறார்கள் .
தெருவிலே
கடையிலே எல்லாம் அதை விளக்கமாக
செய்து வேறு காண்பிக்கிறார்கள். மக்களும்
குறிப்பாக ஆண்களும் நிறையப்பேர் வாங்கிக்
கொண்டு போகிறார்கள்
தொலைக்காட்சி
விளம்பரத்திலும் அதை உபயோகிக்கும் பெண்கள்
முகத்தில்
லவலேசமும்
சமையல் செய்த அயர்ச்சி தெரிவதில்லை
.
நாம் சமைக்கும் போது மட்டும்எரிச்சல்
வருது .ஏன்?
அந்த அம்மா சிரிச்சிட்டே சமையல் நொடியில்
ஆச்சுங்குது.
குழந்தைங்களைப் பார்த்து அன்பா
ஒரு லுக் வுடுது .
ஆனா நிஜ வாழ்க்கையில் குழந்தைங்க திட்டு வாங்குதே ஏன்?
சரி பெண்களை விடுங்க பாவம் குயிக்
சமையல் சாதனங்களை வாங்கிப்
போன ஆண்கள் அதை என்ன
பண்ணினார்கள் ?
அதை விடக் காமெடி என்னன்னாக்க
இத்தனை சமையல் வசதி
இருந்தாலும் எந்த
ஓட்டல் போனாலும் உக்காரவே
இடம் கிடைக்க மாட்டேங்குது ..ஏன்?
அதானே..? நல்ல கேள்வி...????!!!!
ReplyDeleteவிளம்பரத்துல எல்லாம் ஈசியா இருக்கிற மாதிரித்தான் இருக்கும்... ஆனா யூஸ் பண்ணும்போது தான் தெரியும்... ஹா ஹா...
ReplyDelete//குயிக் சமையல் சாதனங்களை வாங்கிப் போன ஆண்கள் அதை என்ன பண்ணினார்கள் ?///
ReplyDeleteஅதை மனைவிக்கு கிப்ட்டாதான் கொடுத்து இருப்பாங்க
//எந்த ஓட்டல் போனாலும் உக்காரவே இடம் கிடைக்க மாட்டேங்குது ..ஏன்?//
ReplyDelete1.வீட்டு அம்மா சமைப்பதைவிட உணவு நல்ல இருக்கும்
2. ஒட்டல் உணவில் குறை இருந்தால் சுட்டிக்காட்டலாம்
3. பறிமாறுபவர் அன்பாக பறிமாறுவார்
//தொலைக்காட்சி விளம்பரத்திலும் அதை உபயோகிக்கும் பெண்கள் முகத்தில்
ReplyDeleteலவலேசமும் சமையல் செய்த அயர்ச்சி தெரிவதில்லை .///\
1.அயர்ச்சி தெரியாமல் நடிக்கதான் சம்பளம்
2. அவர்கள் உண்மையாக சமைப்பத்தில்லை சமைப்பது மாதிரி நடிக்கிறார்கள்
அருமையான கேள்வி
ReplyDeleteஒரு ஆயாசம் தெரிகிறதே...
ReplyDeleteஎந்த ஓட்டல் போனாலும் உக்காரவே இடம் கிடைக்க மாட்டேங்குது ..ஏன்?//இன்றெல்லாம் செலவைப் பற்றி பெரும்பாலானோர் கவலைப்படுவதில்லை
ReplyDelete