Friday, 8 November 2013

வாங்காத புடவை .

ஒரு  வாரமாக வேலைக்குப்

 போய்கொண்டிருந்ததால்  பிளாக் எதுவும் எழுத முடியவும் இல்லை .;

மற்ற பிளாக்குகளைப் படித்து பின்னூட்டாம் எதுவும் எழுத முடியவில்லை

எழுத நிறைய மேட்டர் இருக்கு ,

காலையில் 7.30 க்குக் கிளம்பினால் வர அதே மாதிரி 7.30 மணி ஆவதால் இந்த நிலைமை .

அடுத்த வாரமும் வேலை இருப்பதால் பதிவிற்கு விடுமுறை.

இருந்தாலும்  ஒரு மினி இட்லி சைஸில்  குட்டியூண்டு  பதிவாவது போடலாம் என்று நினைப்பதால்  என்னால் மறக்கமுடியாத ஒரு கவிதையுடன் ஒரு  பதிவு .

சுமார் 30 வருடம் முன்பு படித்தது .

ஆஹா என்ன ஞாபக சக்தி என்றெல்லாம் நினைத்தால் நான் அதற்குப்
பொறுப்பல்ல .

  ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தேன்

எழுதியது யார் என்று தெரியவில்லை .

மனதில்  நிறைந்து  கனவில் விரிந்து

உணர்வில் கலந்து  உயரில் அமர்ந்து

பகலிலும் இரவிலும் நினைவில் உறைந்து

பாடாய்ப்  படுத்துவதே வாங்காத புடவை .

சூப்பர்ல்ல!

9 comments:

  1. சூப்பர்தான். ஆனால் இந்தியாவில் எல்லோரும் ஆபிஸில் இருந்துதானே பதிவு எழுதி வெளியிடுகிறார்கள் என கேள்வி பட்டிருக்கிறேன்.. 7.30 லிருந்து 7.30 வரை ஆபிஸில் சும்மா உட்கார்ந்து பதிவு எழுதாமல் நேரத்தை வீணடிக்கும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  2. நான் பார்ப்பது மாதச் சம்பள வேலை அல்ல .
    நான் அப்படிப்பட்ட வேலை பார்த்தபோது பதிவு ஆரம்பிக்கவில்லை.
    இப்பொழுது நான் பார்ப்பது தினக் கூலி வேலை .

    வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம்.
    மாத எல்லா நாளும் எனக்கு வேலை கிடைக்காது..
    எனவே எனக்கு தனி கம்பியுட்டர் கிடையாது.
    அப்படி கிடைத்தாலும்
    வேறு ஒருவர் ஐ டி இல்தான் கம்பியுட்டர் பார்க்க முடியும்.
    புரிகிறதா என் நிலை .

    ReplyDelete
  3. ஹலோ மேடம் நான் கிண்டலாக சொன்ன கருத்துக்கு மிக சீரியஸாக பதில் அளித்து இருக்கிறீர்கள். அடுத்த தடவை நான் ஏதாவது கிண்டலாக கருத்து சொன்னால் பதிலுக்கு நீங்கள் கிண்டலாகவே நக்கலாகவோதான் பதில் அளிக்க வேண்டும் சரிங்களா???

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ !
      நான் காமெடி என்று நினைத்து எழுதியது சீரியசாக ஆயிடுச்சே!
      இதுதான் காமெடி.
      நானும் ஒரு காலத்தில் வில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில்
      ம்ஹூம் .... அது ஒரு பொற்காலம்....(ஒரு சோக டியூனை ஓடவிடவும்)
      அப்போது சொந்த வேலைகள் சிலவற்றை உட்கார்ந்த இடத்திலேயே செய்யமுடிந்தது.
      இப்போது நான் இல்லாவிட்டால் ( ஹி...ஹி ... என் மூக்கை நுழைக்காவிட்டால் ) சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளவே முடியாது.
      பேசிக்கொண்டாலும் முழுமையாகஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்து கொள்ளமுடியாது .
      கொஞ்சம் ஜாலியான வேலை.
      காமெடிக்குப் பஞ்சம் இருக்காது.ஆனாலும் சிரிக்க முடியாது.
      நெட் அக்செஸ் பண்ண முடியாது.
      முடிந்திருந்தால் பதிவுலகத்தையே சும்மா ஒரு கலக்கு கலக்கியிருக்க மாட்டேன் ?

      Delete
    2. பொற்காலம் என்பது PSU வில் வேலை செய்த காலம்

      Delete
  4. கேட்ட மெல்லிசை இனிமை
    கேளாத மெல்லிசை ரொம்பவும் இனிமை என்கிற ஆங்கில கவிதையின் வரிகளை ஒத்திருக்கிறது..
    நல்லா இருக்கு

    ReplyDelete
  5. நானும் பதிவு எழுதி ஒரு வாரமாகி விட்டது..தொடர்பிலேயே இருங்கள்..

    ReplyDelete
  6. அட, அப்போ நிறைய பேருக்கு தேக்க நிலை தானோ... same pinch here too

    ReplyDelete