Friday, 15 November 2013

பூரிக்கட்டை --->மனைவி----> கணவன்

பூரிக்கட்டையால் மனைவி கணவனை அடிப்பது போல பல ஜோக்குகள்  சின்ன வயதிலிருந்து  படித்திருக்கிறேன் .


அதுமட்டுமல்ல சில பதிவுகளிலும் இதை  நிறையப் பேர்கள் மனைவிக்குப் பயந்ததுபோல் ஒரு இமேஜ் உருவாக்கும் பொருட்டு இந்த உதாரணத்தை சொல்லுகிறார்கள் .

இந்தப் பதிவின் நோக்கம்

அவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமா
இந்த மாதிரி நிஜமாகவே பூரிக்காட்டையால் அடிக்கும் /அடிவாங்கும் ஒரு பாரம்பரியம்  எப்பொழுது ஆரம்பித்தது  , (அதன் வரலாறு )
அதுவும் இட்டிலியை  காலை உணவாகக்கொண்டுள்ள தமிழ் நாட்டில் எப்படி நுழைந்தது
போன்றஇன்ன பிற  பரிமாணங்களில் பார்ப்பதுதான்.


வரலாறு என்றால் எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்துதான் சொல்லமுடியும்
நான் சுமார் 1961ம் வருடத்திலிருந்தே படிக்க ஆரம்பித்து விட்டேன் .
பாடம் என்று அர்த்தம் கொள்ளாதீர்கள் .
குமுதம் விகடன் தினத்தந்தி போன்றவைகளை நான் ஸ்கூலுக்குப் போகாததால் என் அம்மா சமையல் வேலை மற்றும் வீட்டு வேலைகள் செய்தபடியே என்னைப் படிக்கச் சொல்லி அவ்வப்போது  தப்பாகப் படித்தால் திருத்து வார்கள்
.ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் என்று ஒரு பகுதி வரும் தினத்தந்தியில் . அதிலும் நான் இதைப் படித்ததாக ஞாபகம் .
அதற்கு பூரிக்கட்டை என்றால் என்ன என்றும் ஜோக்கின் பொழிப்புரை பதவுரை  களை என் அம்மாவிடம் விளக்கம் கேட்டு பூரிக்கட்டை பற்றிய உபயோகங்களை ஹி .....ஹி ....தெரிந்து கொண்டேன்.
சுமாராக ஒரு சிறு குறிப்பு வரைக கேள்விக்கு பதில் எழதும் அளவுக்கு விஷய ஞானம் பெற்றேன் .
எனவே பூரிக்கட்டையால் அடிக்கும் பழக்கம் 1960களில் இருந்ததற்கு ஆதாரமாக 1960ம் வருட தினத்தந்தியில் மேட்டர்  உள்ளது.
வேறு ஏதேனும்  அதற்கு முந்திய ஆதாரம் இருப்பதாக யாராவது தெரிவித்தால் அதை இதில் சேர்த்து  முடிந்தால் விக்கி பீடியாவில் கூட சேர்க்கும் எண்ணம் உள்ளது.

எனக்கு இதில் ஒரு  சந்தேகம் என்னவென்றால்
 பூரி அல்லது சப்பாத்தி செய்து முடித்ததும் பொதுவாக அந்த பூரிக்கட்டையைஅப்பாடா வேலை ஒரு வழியா முடிந்தது என்று  ஒரு கடாசு கடாசுவதுதான் பலரது பழக்கம் .
மறுபடி வேலை செய்யும் போது தேடாமல் இருக்கும் மாதர்கள் ரோம்பக்குறைவு.
அப்படி இருக்கும்போது கோபம் வந்தால் கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது தானே பாரம்பரியம்?
பூரிக்கட்டையை தேடி ....கண்டுபிடித்து ...அப்புறம் அடிப்பது ....ம்ஹூம் ..சான்சே இல்லை .
ஒரு வேளை ரெகுலராக அடிப்பவர்கள்  அதை ஒழுங்காக  அதாவது தேவைப்பட்டபோது  எடுக்க வசதியான இடத்தில் வைப்பார்களோ என்னவோ யாமறியேன்.
இந்த பாயிண்டிலும் ஃ பீட்  பேக்குகள் வரவேற்கப்படுகின்றன .

மேலும் பூரிக்கட்டையால் அடிப்பதனால் நாள் வாரியான அல்லது மாதவாரியான ஆசுபத்திரி அட்மிஷன்கள் பற்றிய விவரம் எதுவும்
இருப்பதகாவும் தெரியவில்லை .
உதாரணமாக  தீ விபத்து ,வாகன விபத்து ,போன்று பூரிக்கட்டை விபத்து ,என்ற ஒரு டேட்டா உள்ளதா அதன் சதவிகிதம் என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை.
ஆதாரம் இருந்தால்  எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பதிவு தேத்திடலாம்.

பூரிக்காட்டையால் அடிக்கும் /அடிவாங்கும் நபர்கள் இது சம்பந்தமான முழு விவரங்களை முன் வந்து அளிக்கலாம் .
தகுந்த சன்மானமாக பூரிக்கட்டை (உடையாதது ) அளிக்கப் படும்.

எனக்கு ஒரு முக்கிய சந்தேகம் .
தொழில்நுட்பம் பல்கிப் பெருகிவரும் இந்நாளில் சப்பாத்தி மேக்கர் ஏன் ரெடிமேட் சப்பாத்தியே பாக்கெட்களில்  சக்கை போடு போடும் இந்நாளில் கூட
அதே பூரிக்கட்டைதானா?
மாற்றமே இல்லையா?

ஒருவேளை  பூரிக்கட்டையால் ஆயிரம்  அடி வாங்கிய அபூர்வ சிகாமணி தான் பாக்கெட்டுகளில் விற்கப்படும் சப்பாத்திகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானியோ?
இருக்கலாம்
நதிமூலம் ரிஷிமூலம்  ரொம்பவே சுவாரசியமாக இருக்கும் .
யார் கண்டது?
கடைசியாக
வட இந்தியாவில் பூரிக்கட்டை உடைந்தால் அபசகுனம் என்றும் வீட்டுக்கு ஆகாது என்றும் சொல்வார்கள் .
எனவே சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்த காலத்தில் என்றெல்லாம் விடும் புரூடா க்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா .
அதனால் வடஇந்தியா விலிருந்து வந்திருக்க முடியாது என்பது என் எண்ணம் .
வடஇந்தியா வில் பூரிக்கட்டைக்கு பதில் வேறு ஏதாவது ஒரு மாற்று சாதனம் உபயோகித்திருந்திருக்கலாம்
மேலும் ஆந்திராவில் பூரிக்கட்டை பிரயோகம் இருந்த மாதிரித் தெரியவில்லை.
 கர்நாடகாவிலும் கேரளாவிலும் இல்லை என்றால் இது முழுக்க முழுக்க
நமது தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரியமாகக்  கொள்ளலாம்

26 comments:

  1. ///பூரிக்கட்டையால் மனைவி கணவனை அடிப்பது போல பல ஜோக்குகள் சின்ன வயதிலிருந்து படித்திருக்கிறேன் .///

    பார்க்க வேண்டுமென்றால் எங்கள் வீட்டிற்கு வரவும்

    ReplyDelete
  2. ///அதுமட்டுமல்ல சில பதிவுகளிலும் இதை நிறையப் பேர்கள் மனைவிக்குப் பயந்ததுபோல் ஒரு இமேஜ் உருவாக்கும் பொருட்டு இந்த உதாரணத்தை சொல்லுகிறார்கள் .///

    மனைவிக்கு பயப்படாத மாதிரி இருபது போல காமிக்கதான் பலர் இமேஜ் உருவாக்குகிறார்கள்.. மனைவிக்கு பயப்படாத ஒரு ஆண்மகனை காண்பியுங்கள் பார்ப்போம்

    ReplyDelete
  3. ///பூரிக்கட்டையால் அடிப்பதனால் நாள் வாரியான அல்லது மாதவாரியான ஆசுபத்திரி அட்மிஷன்கள் பற்றிய விவரம் எதுவும் இருப்பதகாவும் தெரியவில்லை .///

    ஆஸ்பத்திரி அட்மிஷன் போது இது பூரிக்கட்டையால் பெற்ற அடி என்று யாரும் சொல்லி சிகிச்சை பெறுவத் கிடையாதுங்க அப்படி சொன்ன அடி வாங்கின இடத்திலேயே மீண்டும் அடி கிடைக்குமுங்க

    ReplyDelete
  4. ///பூரிக்காட்டையால் அடிக்கும் /அடிவாங்கும் நபர்கள் இது சம்பந்தமான முழு விவரங்களை முன் வந்து அளிக்கலாம் .தகுந்த சன்மானமாக பூரிக்கட்டை (உடையாதது ) அளிக்கப் படும்.///

    இப்படி பல விபரங்களை நான் அப்பாவியாக எனது பல பதிவுகளில் சுட்டிகாட்டியதால் என் மேல் இரக்கம் கொள்வார்கள் என்று தவறாக நினைத்தேன் ஆனால் அதை படித்த பெண்கள் என் மனைவிக்கு இப்படி உடைக்க முடியாத பூரிக்கட்டையை அன்பளிப்பாக வாங்கி அனுப்பி கொண்டே இருக்கிறார்கள்

    ReplyDelete
  5. என்னைப்பற்றி இப்படி உள்குது பதிவு போட்டதற்கு கடும் கண்டனங்கள்

    ReplyDelete
    Replies
    1. அவங்க காமெடியா போட்டிருந்தா கூட... எனக்கு உங்க ஞாபகம்தான் வந்தது...இதுல... ரொம்ப பிரபலம் நீங்கதானே... ஹ...ஹா...!

      Delete
  6. ஆரம்பத்தில் தமிழகத்தில் விளக்குமாற்றால்தான் கணவனை அடிக்கும் வழக்கம் இருந்தது, அதன் பின் வட மாநில மோகத்தால் பூரி தமிழகத்தில் நுழைந்ததும் பூரிக்கட்டையால் அடிக்கு பழக்கம் வந்தது, பூரிகட்டையின் இரு பக்கமும் கைப்பிடி போல இருப்பதால் அதை அவசரத்திற்கு எந்த பக்கத்திலும் பிடிட்து எளிதாக அடிக்கலாம், ஆனால் விளக்குமாற்ரை எடுத்தால் அதன் ஒரு பகுதியைத்தான் பயன் படுத்த முடியும்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி வாங்கிய அனுபவம்... எவ்வளவு கரெக்ட்டா சொல்றார் பாருங்க பொது மக்களே...!

      Delete
    2. என்னடா ஆளை காணும் என்று நினைத்தேன்... இங்கேயும் என் புகழ்பாட வந்திட்டீங்களா? நான் கட்சி ஆரம்பிச்சா நீங்கதான் கொள்கைபரப்பு செயலாளர்

      Delete
  7. ஆ.... ஆறு காமேண்டா?அம்மாடியோவ்!
    இது முழுக்க முழுக்க ஒரு காமெடி பதிவுதானே தவிர
    யார் மனதையும் புண் படுத்தும் உள் குத்து பதிவு அல்ல .
    அப்படி புண் படுத்தியிருந்தால்முதலில் மன்னிப்புக் கோருகிறேன்.
    நான் வங்கியில் பணி புரியும் போதும்லேட்டாக உக்காந்து வேலை செய்யச்சொன்னாக்க பலர் ஜோக்கிர்க்காக
    வீட்டில் பூரிக்கட்டை வாசலிலேயே
    ரெடியாக இருக்கும் என்பார்கள் .
    நேற்றும் ஆபிசில் வெள்ளிக்கிழமை லேட்டா போனால் பூரிக்கட்டை அர்ச்சனைதான் என்று ஒருவர் சொல்ல ஒரு மணி நேர வீடு திரும்பும் கம்யூட்டிங்க் நேரத்தை வீணாக்காமல் யோசித்ததின் விளைவுதான் இந்தப் பதிவு.
    காலை 9 மணியிலிருந்து மாலை 6.15 வரை வேலைக்குப் பின்னும் இந்த வயதிலும் இப்படியெல்லாம் அக்குவேறு ஆணிவேராக அனலயிசு பண்ணி ஒரு மொக்கை டாபிக்கை பற்றிய மொக்கை பதிவுக்கு+என் ஸ்டாமினாவுக்கு சில வாய் வழி பாராட்டுகளும் வந்தன.
    வாய் வழி வந்த காமேண்டில் ரசித்த ஒன்று.
    அப்ப பூரிக்கட்டையே தான் வேணுமா ( பெட்ரோ மாக்ஸ் லைட்டேதான் வேணுமா பாணியில் )
    பதிவு எழுதுவதே சும்மா ஒரு ஸ்டெரெஸ் ரிலீசு தானே தவிர வேறு எதுவும் இல்லை..
    உங்களது ஆறாவது கமெண்டு விஷய பூர்வமாக இருந்தது.
    வரலாற்றைக் குடைந்தால் இன்னும் என்னென்ன சாதனங்கள்
    பரவலாக இந்த மேட்டருக்குப் பயன்படுத்தினார்கள் என்று தெரியவரலாம்.
    கமெண்டுகளுக்கு நன்றி

    ReplyDelete
  8. ///இது முழுக்க முழுக்க ஒரு காமெடி பதிவுதானே தவிர
    யார் மனதையும் புண் படுத்தும் உள் குத்து பதிவு அல்ல///

    அம்மா திரும்பவும் சீரியஸா பதில் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா??? அடக் கடவுளே நான் சும்மா போட்ட கருத்துக்கு இந்த பொண்ணு இப்படி சீரியஸா பதில் சொல்லிகிட்டே இருக்குதே..... கடவுளே இந்த பொண்ணுக்கு கிண்டல் பண்ண சொல்லி தாப்பா

    ReplyDelete
  9. ஆகா அருமையான ஆராய்ச்சி

    ReplyDelete
  10. ஹா... ஹா... விக்கி பீடியாவில் விரைவில்-->வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. உங்க பதிவில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இதுதான்...உங்கள் எழுத்து நடையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது..உங்களுக்கு காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆகுது..இதையே பின்பற்றுங்கள்..அப்புறம் நீங்களும் பிரபலமான பதிவர்தான், நீங்களும் பிரபலமான பதிவர்தான்

    ReplyDelete
  12. ஹா... ஹா... இந்த தலைப்பை படித்தவுடன் எனக்கு " மதுரை தமிழன்" ஞாபகம்தான் வந்தது.. நல்ல காமெடியான அலசல் .. பாராட்டுக்கள் சகோதரி...!

    ReplyDelete
  13. 'அவர்கள் உண்மைகள்' கமென்ட் போடறதுல ரிக்கார்ட் ப்ரேக் பண்ண பாக்கறார் போல :)

    பூரிக்கட்டையில அடிச்சா வெளிக்காயம் படாது.... உள்காயம்தான். அதனால மனைவி கணவன அடிச்சத வெளியில சொல்லாம மறைச்சிரலாம்கறதாலதான் இந்த ஐடியாவ அந்த காலத்து வீட்டம்மாக்கள் பயன்படுத்தியிருக்கணும்.

    எப்பவும் போலவே நகைச்சுவை உணர்வோட எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies

    1. பார்த்தீங்களா என்ன மாதிரி அடிவாங்கிய என் சகோதரன் தன் அனுபவத்தை இங்கே சொல்லி இருக்கிறார்.

      Delete
    2. பாராட்டுக்கு நன்றி

      Delete
  14. விரிவான ஆய்விற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. பதிவு நகைச்சுவையாக இருந்ததினால்தான் இப்படி கிண்டல் கேலி பண்ணி கருத்துக்கள் இட முடிகிறது.. இல்லையென்றால் பதிவு அருமை என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு சென்று இருப்பேன்.


    ஆமாம் எங்கே அடுத்த பதிவு?

    ReplyDelete
  16. தொடர்ந்து 10(சனி ஞாயிறு தவிர ) நாட்கள் 10 மணி முதல் ஆறு மணி வரை
    வேலை (வெறும் டெக்னிகல் பேச்சுதான்) முதுகு வலி. எனவே கொஞ்சம் ஒய்வு .பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete