Monday 18 November 2013

சந்தேகங்கள்-1

   
நாளை முதல் ஒரு மாணவருக்குப் பாடம் கற்பிக்கும் வேலை  ( உலகளாவிய ஜப்பானிய மொழி பரீட்சை 2.12.2013 அன்று இருப்பதால் ) மறுபடியும் இரண்டு வாரத்திற்கு திங்கள் முதல் வெள்ளி வரை  பதிவிற்கு விடுமுறை.
எனவே இப்ப  ஒரு சின்ன பதிவு.
எனக்கு  இந்த சமுதாயத்தில் நடக்கும் பல நிகழ்வுகளைப் பார்க்கும் போது பல சந்தேகங்கள் வருகின்றன .
யாராவது முடிந்தால் ஏன் இப்படி என்று பதில் சொல்லுங்கள் .
தகுந்த சன்மானமாக சனி கிரகத்துக்கான போக வர டிக்கெட்டு
தரலாமா என ஆய்வில் உள்ளது.
சனி நம்மகிட்டே வரதுக்கு முன்னாடி  நம்ப சனிகிட்டே போய்ட்டா  சனி வேறே யார்கிட்டேயாவது போயிடும் என்பது ஐதீகம் (  நம்ப  என்ன சொன்னாலும் மக்கள் நம்புவாங்க  என்ற  அசைக்க முடியாத நம்பிக்கைதான் )
சரி .சந்தேகத்துக்கு வருவோம்.

அங்கங்கே பேப்பரில் காய் கறி வெட்ட ,நொடியில் அரைக்க .ஆட்டோமேடிக்கா   சமைக்க என்று பல வித இயந்திரங்களும் சாதனங்களும் விற்கிறார்கள் .
தெருவிலே கடையிலே எல்லாம் அதை விளக்கமாக செய்து வேறு காண்பிக்கிறார்கள். மக்களும் குறிப்பாக ஆண்களும்  நிறையப்பேர்  வாங்கிக் கொண்டு போகிறார்கள்
தொலைக்காட்சி விளம்பரத்திலும் அதை உபயோகிக்கும் பெண்கள் முகத்தில்
லவலேசமும் சமையல் செய்த அயர்ச்சி தெரிவதில்லை .
நாம் சமைக்கும் போது  மட்டும்எரிச்சல் வருது .ஏன்?
அந்த அம்மா  சிரிச்சிட்டே  சமையல்  நொடியில் ஆச்சுங்குது.
குழந்தைங்களைப்  பார்த்து   அன்பா ஒரு லுக் வுடுது .
ஆனா நிஜ வாழ்க்கையில் குழந்தைங்க  திட்டு வாங்குதே  ஏன்?
சரி பெண்களை விடுங்க பாவம்  குயிக் சமையல் சாதனங்களை  வாங்கிப் போன ஆண்கள் அதை என்ன பண்ணினார்கள் ?

அதை விடக் காமெடி என்னன்னாக்க இத்தனை சமையல்  வசதி இருந்தாலும்  எந்த ஓட்டல் போனாலும்  உக்காரவே இடம் கிடைக்க மாட்டேங்குது ..ஏன்?



8 comments:

  1. அதானே..? நல்ல கேள்வி...????!!!!

    ReplyDelete
  2. விளம்பரத்துல எல்லாம் ஈசியா இருக்கிற மாதிரித்தான் இருக்கும்... ஆனா யூஸ் பண்ணும்போது தான் தெரியும்... ஹா ஹா...

    ReplyDelete
  3. //குயிக் சமையல் சாதனங்களை வாங்கிப் போன ஆண்கள் அதை என்ன பண்ணினார்கள் ?///
    அதை மனைவிக்கு கிப்ட்டாதான் கொடுத்து இருப்பாங்க

    ReplyDelete
  4. //எந்த ஓட்டல் போனாலும் உக்காரவே இடம் கிடைக்க மாட்டேங்குது ..ஏன்?//
    1.வீட்டு அம்மா சமைப்பதைவிட உணவு நல்ல இருக்கும்
    2. ஒட்டல் உணவில் குறை இருந்தால் சுட்டிக்காட்டலாம்
    3. பறிமாறுபவர் அன்பாக பறிமாறுவார்

    ReplyDelete
  5. //தொலைக்காட்சி விளம்பரத்திலும் அதை உபயோகிக்கும் பெண்கள் முகத்தில்
    லவலேசமும் சமையல் செய்த அயர்ச்சி தெரிவதில்லை .///\

    1.அயர்ச்சி தெரியாமல் நடிக்கதான் சம்பளம்
    2. அவர்கள் உண்மையாக சமைப்பத்தில்லை சமைப்பது மாதிரி நடிக்கிறார்கள்

    ReplyDelete
  6. ஒரு ஆயாசம் தெரிகிறதே...

    ReplyDelete
  7. எந்த ஓட்டல் போனாலும் உக்காரவே இடம் கிடைக்க மாட்டேங்குது ..ஏன்?//இன்றெல்லாம் செலவைப் பற்றி பெரும்பாலானோர் கவலைப்படுவதில்லை

    ReplyDelete