Saturday, 4 June 2016

ஃ பர்ஸ்ட் சாய்ஸ் லாஸ்ட் ரிசார்ட




இந்த  இரண்டு  வார்த்தைகள்  எனக்கு  மிகவும் பிடித்த வார்த்தைகள்.
ஏனெனில்நன்கு கூர்ந்து கவனித்தீர்களானால்  
இந்த  இரண்டு வார்த்தைகளில் எந்த வார்த்தை யின் GUIDANCE  படிச்  செல்கிறோமோ  அல்லது  இந்த இரண்டில்  நாம்  எதற்கு  முக்கியத்துவம் கொடுக்கிறோம்  என்பதைப்  பொறுத்துத்தான்
 நமது வாழ்க்கை வெற்றிகரமாக
அமைவதும் மற்றும் நாடுகளின் முன்னேற்றம்  அமைவதும் .
   நாடுகளுக்கிடையே யான  சண்டைகள்   ஆரம்பிக்கக் காரண மும்  பல நாடுகள்  தோல்வி  அடைவதும்  அது  அவர்களின் பர்ஸ்ட் சாய்ஸ் என்பதாலா  அல்லது  லாஸ்ட் ரிசார்ட் என்பதாலா ,என்பதைப்  பொறுத்தே .
 நெப்போலியன்  போனபார்ட்  எப்பொழுதும் பர்ஸ்ட் சாய்ஸ்  எது  என்பதில் தெளிவாக  இருந்து  போரிட்ட தருணங்களில் வெற்றியே   பெற்றார்  என்பது  எனது சொந்த நினைப்பு . (எண்ணம் ) .
 நான்   சிறு வயதில்   படித்த போதிலிருந்தே   எனக்கு  இந்த  வார்த்தை  மீது  ஒரு ஈர்ப்பு .
தீவிர சிந்தனை செய்தேன் . அந்தப் பாடத்தில் அவர் வாட்டர்லூ போரில் தோற்ற போதுஃ பர்ஸ்ட் சாய்ஸ்  என்கிற கான்செப்ட் படி போரிடவில்லையோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது .இங்கிலாந்தைத் தோற்கடிக்க இதை விட்டாக்கா வேறே வழியில்லேன்னு போட்ட சண்டை அது.


ஆனால் நான் சொன்னால் யார் ஏற்றுக்கொள்வார்கள் என்று யாரிடமும் சொல்லவில்லை . (இப்பயும் யாரும் கேக்கமாட்டாங்க  அது வேறே விஷயம் )


 பிறகு வாழ்க்கையில் பல வித அனுபவங்கள் பாடங்கள் எல்லாம் கற்ற பின் நாம  ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்கணுமின்னாக்க  நல்ல யோசிச்சு எது பர்ஸ்ட் சாய்ஸ் அப்படீங்கரதிலே ஒரு தெளிவு  ...தெளிவு என்றால் மேம்போக்கான தெளிவு இல்லை . தீரத் தெளிவு இருக்கணும் .அப்படி இருந்து செய்கிற காரியங்களுக்கு வெற்றி 99% உறுதி .


வேறே வழியே இல்ல என்று நீங்கள் ஆரம்பித்த காரியங்கள் எல்லாமே தோல்வி ஆகாது என்றாலும் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சம் கம்மி .
 பிரிட்டிஷ்  அரசு நம் நாட்டை விட்டுப் போனது முதல் நமது 2016 தேர்தல்  வரை  நன்கு உற்று நோக்கிப் பாருங்கள் புரியும்

உங்களது சொந்த  வாழ்க்கையில் நீங்கள் இதுதான் என் முதல் சாய்ஸ்  என்று தெரிந்தெடுத்த படிகள் அதில் நீங்கள் அடைந்த வெற்றி 
வேறே வழி இல்லாமால் தேர்ந்தெடுத்த விவகாரங்களில்  அவ்வளவு மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது எல்லாம் புரியும் .

நிறையப் பேரிடம்இது பற்றிக் கேட்டேன்  சர்வே ஷீட் எல்லாம் கொடுக்கவில்லை .
சும்மா காஷுவலாக விசாரித்த போது 35 மற்றும்  40 வயதுக்கு மேற்பட்டவர்கள்  ஆமாம் என்று  ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் ,   எனது மாணவர்களிடம் கேட்டபோது இல்லை பர்ஸ்ட் சாய்ஸ் பல சமயங்களில்  காலை வாரிடுச்சு, மேடம் ஆனா  வேறே வழியே இல்லன்னு ஆரம்பிச்ச  புராஜெக்ட் பயங்கர சக்சஸ் என்றார்கள் .

உங்கள் அனுபவம் எப்படி  ?

Friday, 3 June 2016

சீனாவில் ஆர்கிடேக்சருக்கு சுக்கிர திசை . கூடவே குரு பார்வையும் போலே .

 .
என்  மகனின்போஸ்ட்  கிராஜுவேஷன்  பட்டமளிப்பு விழாவிற்காகக்
 கனடா  வந்துள்ள நான் அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

அதில்  நான்  கவனித்த  ஒன்று  கிராஜுவேஷன்  லெவலில்  மட்டும்  சீன தேசத்தைச்  சேர்ந்தவர்கள்  ஒரு ஆறு ,ஏழு பேர் டிஸ்டிங்ஷன்வாங்கினார்கள்
(அந்தப் பிரிவில் பட்டம் வாங்கியவர்கள் 39 பேர் ) .

வேறு  எந்தப் பிரிவிலும்  எந்த ஒரு  குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்களும் இப்படி  அதிக அளவில் தனிப் பட்ட முறையில் வாங்கவில்லை .

இது  எதனால் என்று என் மகனிடம் கேட்டேன்.

இதை  நானே கவனித்ததில்லை.உன்  கண்ணுக்கு  மட்டும்  எப்படித் தெரிஞ்சது எதிர்க் கேள்வி வந்தது 
சரி இவன்கிட்டே பேசிப் பிரயோஜனமில்லே .
கூகிள் மாமாவை அணுகினேன்.
அட சீனர்கள் லண்டனிலும் கட்டிடக் கலை சம்பந்தமான படிப்பு படிப்பதில் ஆர்வம்  காட்டி வருகிறார் களாம். சமீபத்தில் சீன மாணாக்கர்களின் எண்ணிக்கை  இரட்டிப் பாக உயர்ந்திருக்கிறதாம்.

எனக்கு சீனர்களின்  நாகரீகம் கலாச்சாரம்  இவைகளில் ஒரு அலாதிப் பிரியம் உண்டு .
நான் சுத்த சைவம் என்றாலும் கூட அவர்கள் சாப்பிடும் பாம்பு  பூச்சி வகையறாக்கள்  சேர்க்கப் பட்ட சமையல்  குறிப்புகள்  பிடிக்கும் .
வாட்சப்பில் எனது நெருங்கிய உறவினர்களுக்கு அதன் சமையல் குறிப்புகளை அனுப்பிக் கடுப்பேத்துவதில்  சுகமோ சுகம்.

தவிர என் ஜப்பானியத் தோழி சொல்வாள்.
நாம் ஒரு உபகரணம் அல்லது மெஷின் அல்லது பொருளை இப்படிச்  செய்யலாமா என்று மனதளவில் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதே மாடலில் அவர்கள் செய்து மார்கெட்டில் விற்றுக் கொண்டிருப்பார்கள் என்பாள்.
மதுரைத் தமிழில் சொன்னால் நாம  மல்லாக்கப் படுத்துக் கிட்டு விட்டத்தைப் பாத்துகிட்டிருக்கும்போது நம்ம விட்டத்துக்கு மேலேயே   கட்டடம் கட்டிடுவானுவ..

தவிர எந்த டெக்னாலஜியையும் எப்படியோ காப்பி அடிச்சு கொறஞ்ச விலையிலே சாமானுகளப் பண்ணுவதி ல்  அவங்கள அடிச்சுக்க முடியாது.

சரி ஆனது ஆகட்டும் என்று ஒரு சீன மாணவரிடம் இது பற்றிக் கேட்டேன்.அவர் சொன்னது ஒரு நாடு முன்னேறனும் என்றால் முதலில் ஊரும் நாடும் அழகான கற்பனைத்திறன் கொண்ட வாழ வசதியான  கட்டிடங்கள்   கொண்டவையாக இருக்கணும் அதனால் தான் என்றார்.
ஆஹா !என்ன ஒரு தேசிய சிந்தனை.




Tuesday, 17 May 2016

கியோமசாவின் அதிர்ஷ்டக் கிணறு

திரு சுப்புத் தாத்தா அவர்கள் ஜப்பானிய நாட்டின் சமயம் பற்றி எழுதுமாறு கேட்டதின் படி இதை எழு துகிறேன்.

அதற்கு முன் சமயம் ஆன்மிகம் இவற்றுடன் எனது ஈடுபாடு பற்றி சொல்லிவிடுகிறேன்

 சிறு வயதிலிருந்து இவைதான் கடவுள்கள் என்று எனக்குக் காண்பிக்கப் பட்ட தெய்வங்களை மட்டுமே நான் கும்பிட்டு வந்தேன் .

இங்கிருந்து வடக்கே போன பின் பளிங்குக் கற்களில் பள பள என இருந்த கடவுள்களைப் பார்த்தபின் அவைகளைக் கடவுளாக நினைக்க ,பக்தி வரக் கொஞ்சம் நாள் பிடித்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை 


 . தெற்கே வந்தபின் அதே மாதிரித்தான்.

 ஆபீசில் கூட வேலை பார்த்த மற்றவர்களால் சீக்கிய மதம் புத்த மதம் ஜைன மதம் போன்ற இவைகளிலும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.

 பிறகு மற்ற ஆசிய மொழியில் ஈடு பாடுவந்தபின் குவான் இன் தெய்வம் பற்றிக் கேள்விப் பட்டேன். ரெய்கி கொஞ்சம் படித்தேன்.


 ஆனால் தியானம் இன்னும் கை கூடவில்லை . (தியானத்தில் பிரஷர் குக்கர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது .


 எனவே யோகாவும் .... ம்ம் ... அதே தான். ) ;

 நடைப் பயிற்சி மட்டுமே 80% சக்சஸ் .

 குவான் இன் தேவியின் படத்தைக் காப்பி செய்து சிலருக்குக் கொடுத்தேன் அவர்கள் தனக்கு நல்ல விஷயங்கள் பல நடந்ததாகச் சொன்னார்கள் .

இப்பொழுதும் ஃ பேஸ் புக்கில் நிச்சிரென் புத்த மதம் என்கிற குழுமத்தில் உள்ளேன் "நம் ம்யொஹொரெங்கே கியோ " என்கிற மந்திரத்தை தனக்காக வேண்டி பிரார்த்திப்பவர்களுக்கு நானும் எழு தி ஒரு பத்து தடவை சொல்லுவேன்

. நிறையப் பேர் பிரார்த்தனைக்கு நன்றி என்று கூறுவார்கள் . எங்கோ முகம் தெரியாத ஒருவருக்குக் கஷ்டத்திற்கு நம்மால் முடிந்தது என்று செய்கிறேன்


.மற்ற படி தீவிர பக்தி என்றால் இல்லை .
 நான் வாக் போகும் போதேபிரார்த்தனையை முடித்துவிடுவேன்

சரி விஷயத்துக்கு வருவோம் .

 ஷிண்டோ ( ஜப்பானில் ஒரு மதம் ) மதத்தில் கியோ மசா கிணறு ஒன்று உள்ளது .அந்தக் கிணறு   தோக்கியோவில் மெய்ஜி ஜிங்கு என்ற இடத்தில் உள்ள கோயிலில் உள்ளது .

இது மிகவும் சக்தி வாய்ந்த கிணறாகக்  கருதப் படுகிறது. நிறைய நேர் மறை சக்தியினைத் தன் உள்ளே கொண்டுள்ள iஇடமாகக் கருதப் படுகிறது  (power spot  having abundant positive energy )


இந்தக் கிணற்றின் உள்ளே இருந்து வருடம் முழுக்க சுத்த மான நீர் கொப்புளித்து வருகிறது.இந்த நீரின் வெப்ப நிலையானது கிட்டத்தட்ட 15 டிகிரி ( கொஞ்சம் முன்னே பின்னே போகும் )அளவில் உள்ளது .ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் அளவு கொப்புளித்து வருவதாகக் கூறுகிறார்கள் .


 இந்தக் கிணற்றின் ஃ போட்டோவை எடுத்து நமது செல் ஃ போனில் ஸ்கிரீனில் வைத்துக் கொண்டால்அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம் .சொல்கிறார்கள் .
 இது பற்றி என்னுடன் பணி புரிந்த ஜப்பானிய நாட்டுத் தோழி அறிமுகம் செய்து வைத்தாள்.


கோயிலுக்கு வருபவர்கள் இந்தக் கிணற்றின் முன் நின்று ஃ போட்டோ எடுக்கக் க்யூவில் நிற்கிறார்கள் ஆனால் நான் இன்னும் வைத்துக் கொள்ளவில்லை . காரணம் நான் டௌன் லோடு செய்து அதை மெயின் ஸ்கிரீனில் வைத்துக் கொள்ளும் நகாசு வேலை செய்ய வராது என்று நினைப் பதினால் தான்

. தவிர மற்ற எல்லா தெய்வங்களின் படம் ஸ்லோகம் இவற்றை விட நான் இந்த க்யோமசா  கிணற்றின்  ஃ போட்டோ பற்றி எழுதக் காரணம் ஒன்று மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்தால் சந்தோஷம் ,

தவிர இதை செல் ஃ போனில் மேல் ஸ்கிரீனில் வைத்துக் கொள்வது செயற்கு எளிதென்பதால். 

Sunday, 1 May 2016

தமிழ் எழுத்துக்களில் நியுமராலஜி இல்லையா ?



 பொதுவாக டி .வி  பார்ப்பதில் அவ்வளவு இஷ்டம் இருப்பதில்லை .

  காமெடி சானல்கள்  மட்டுமே  பார்ப்பேன்

சில சமயம் தெலுகு இந்தி இவற்றில் உள்ள ஜோசியம்
எண் கணிதம், பரிகாரம்   
போன்றவற்றையும் பார்ப்பேன் .

  என்னதான் சொல்லுகிறார்கள்  என்று பார்ப்பதற்காக .
அதில் நம்பிக்கை இல்லை .

நியுமராலஜி என்பது எனக்குத் தெரிந்த  வரை எல்லா மாநிலங்களிலும் 

ஒருவரின் பெயரை இங்கிலீஷில் எழுதி அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு

  ஒரு மதிப்பு  கொடுக்கிறார்கள்  .

பின் அவற்றின் கூட்டுத் தொகையைக் குறித்துக் கொள்கிறார்கள்.

. பிறகு அவரின் பிறந்த தேதி மாதம் வருடம் 

இவைகளைக் கூட்டி  வரும்  எண்ணும் பேரின் எண்ணும் 

ஒத்துப் போகிறதா என்று பார்க்கிறார்கள்.

 ஜப்பானியர்களும் தங்களது பிறந்த தேதியை  

( ஜப்பானியர்களின் வருடங்கள் அந்த அரசர் அரியணை ஏறும் நாளிலிருந்து கணக்கிடப் படும் . அவர்  இறக்கும் வரை அந்த அரசர் பெயரின் காலமாகக் கருதப்பட்டு 1,2 என்று கணக்கிடப் படும்

ஆங்கில வருடத்திற்கு மாற்றுகிறார்கள் .

 அதன் பிறகு அப்படியே கூட்டப் பட்டு  

அதைப் பத்துக்குள்  நம்மளை மாதிரி சுருக்கி 

அதுக்கு அவர்கள் பலன் சொல்கிறார்கள்

(நீ இப்படித்தான் யார் பேச்சும் கேக்க மாட்டே , அதாகப் பட்டது சுய சிந்தனையில் தான் எதையும் செய்வாய் என்பதன் பொருள் .... )

  கிட்டத்தட்ட நம்ம ஊர் நுயுமராலஜிஸ்ட்கள்  சொல்ற

அதே வார்த்தைகள் !

அதே தொனி!

 ஆனா அவங்க அதோட நிறுத்திக் கிட்டாங்க.
 பேர் பக்கம் போய்  வெளாட்டு வெச்சுக்கல .

 சீனர்கள் லோ  ஷு கிரிட்( lo  shu  grid )என்ற சார்ட் உபயோகிக்கிறார்கள் .
இங்கேயும் பேர் மாத்தற  விவகாரம் கிடையாது .

  1 லிருந்து 9 வரை உள்ள எண்களை நிலம் நீர் உலோகம் மரம் நெருப்பு என்ற ஐந்து விஷயங்களுக்குள்  ( 5 elements ) அடக்கி விடுகிறார்கள்.
(0வுக்கு மதிப்பு கிடையாது போல ). 
உதாரணமாக ;எண்கள் 2&5  நிலம்
7&6 உலோகம்
இது மாதிரி
இந்த ஐந்தும் ஒரு மனிதனின் பிறந்த எண்ணில் கிட்டத்தட்ட 
சமமாக ( balanced )இருந்தால் நல்லதாம்

சிலருக்கு நிலம் aspect  பலமாக இருந்தால் என்ன பலன் ,
நீர் aspect பலமாக இருந்தால் என்ன பலன்  
என்றெல்லாம் சொல்கிறார்கள் .

தவிரவும் வழக்கமான 1 முதல் 9 வரையிலான எண்களுக்குரிய  பலன்களும் உண்டு .

 நாம தான் நம்ம பேரை  இங்கிலீஷில் கன்வெர்ட் பண்ணி  ......... அப்புறம் மாச்சிங்    பேர் மாத்தற  விவகாரமெல்லாம் 


என்னோட சந்தேகமெல்லாம் ஏன் பேரை எல்லாரும் இந்தியாவில் 
இங்கிலீஷில் கன்வெர்ட் பண்ணி அதுக்கு வேல்யு  பார்க்கிறார்கள்  என்பதுதான்.

 தமிழ் இந்தி தெலுங்கு போன்ற மொழியில் உள்ள எழுத்துக்களுக்கு வேல்யு   கிடையாதா ?
இல்ல தமிழ் தெலுங்கு இந்தி யில்  யாருமே பேர் எழுத மாட்டாங்களா ?
 அல்லது 247 எழுத்துக் களுக்கும் மதிப்பு எண் கொடுப்பது சிரமமா?

 புரியவில்லை .

யாராவது ஹிந்தி பெங்காலி போன்ற இந்திய மொழி எழுத்துக்களுக்கு எண் 

மதிப்பு( Numerical value ) கொடுத்து நியூமராலஜி சொல்கிறார்களா ?

தெரிந்தால் சொல்லவும் .

இல்லாவிட்டால் இந்தியாவிலேயே முதன் முறையாக
 தமிழ் நியுமரலாஜி என்று ஆரம்பித்து patent வாங்கி விடலாமே !



Saturday, 30 April 2016

கோஹினூர் வைரம் நம் நாட்டுக்குத் திரும்ப வந்துவிட்டால் ......

கோஹினூர் வைரம்  நம் நாட்டுக்குத் திரும்ப வரவேண்டும் என்ற கருத்து  நிலவி வருகிறது . பரவலாக ஏகப்பட்ட விவாதங்களும் தொடர்கின்றன

 அப்படி நம் நாட்டுக்கு  கோஹினூர் வைரம் வந்துவிட்டால் ......
 என்னென்ன நடக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் .

 முதலில் அதை எந்த ஊரில் வைப்பது என்பது பற்றி நாடு தழுவிய 
சர்ச்சைகள் 
,போராட்டங்கள் ....
 தீக்குளிப்புகள் .
 பார்லிமென்ட் சரிவர நடக்காது .
எதிர்க் கட்சிகள் வெளி நடப்பு
 என்றைக்கு வேறு நல்ல மேட்டர் இல்லையோ அன்றைக்கு டி. வி. சானல்கள் இந்த மாட்டரைக் கையில்  எடுத்துக் கொண்டு   வெட்டியாக  ஆனால் பாப்புலராக இருக்கும் ஆட்களைப்  பிடித்து  வைத்துக் கொண்டு அவர்களின் அபிப்பிராயம் அது  இது  என்று   ஒட்டிவிடுவார்கள்.

.ஏகப்பட்ட சரித்திரச் சான்றுகளுடன் பேசுவார்கள் .

,அதில் மசாலா  சேர்த்த மாதிரி எக்கச்சக்கமாக  உணர்ச்சி வசப்படுவார்கள்.
.கண்ணீர் விடுவார்கள் .

தேவையே இல்லாமல் ஆங்கர் வேறு உசுப்பேத்து கிறமாதிரி 
உச்ச  ஸ்தாயியில் அப்பப்ப ஒரு கத்து கத்துவார் .

அப்புறம் ஒரு வழியாக இடத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு  (இதுக்கே நாம ஒரு வருஷம் ஆக்கிடுவோம்  (நான் சொல்ற ஒரு வருஷங்கிறது ரொம்ப பாஸ்ட் )

அடுத்து பாதுகாப்பு . நாமதான்   சில சமயங்களில் பைலையே தொலைச்சுடுற  ஆட்கள் .ஆச்சே.அதனாலே  எத்தனை  அடுக்குப் பாதுகாப்பு  போடுறதுன்னு  ஒரு கமிட்டி போட்டு 
திரும்ப .....
முதல்லேருந்து....சர்ச்சை ..........


பாதுகாப்பா  இருக்கற வரை பிரச்னை இல்லை ,



 அப்புறமா   நம்ம  சினிமாப் பாட்டிலே  வாராது வந்த வைரமே ” என் அழகு   கோஹினூர் வைரமே ".." கோஹினூர்  மணியே  , கோகிலமே .”அதுவே இதுவே ....ன்னெல்லாம் வரும் .

 அப்புறம்  காதல் என்ற  வார்த்தையை ஒரு  வழி பண்ணி 
 (பட டைட்டில் )எக்கச்சக்கமா  படங்கள் வந்த மாதிரி   முதலில் கோஹினூர் என்ற பெயரில் வந்த படம் வெற்றிப் படமாக அமைந்து விட்டால் கோஹினூர் வைரம் என்கிற வார்த்தையை வைத்து   ஏகத்துக்கும் விளையாடுவார்கள்   நம்ம ஆட்கள்

( இந்தியில் ஏற்கனவே  கோஹினூர்  என்று ஒரு படம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் ).
 பிறகு இந்த டைட்டிலுக்கு வரி விலக்கு பற்றி ஒரு பிரச்னை நாம ஆரம்பிப்போம் 
. இது தமிழ் வார்த்தை அல்ல என்று ஒருத்தர் கோர்ட்டுக்குப் போவார்...

.இதை வச்சு வாட்ஸ் அப்  ட்விட்டர்  இந்த ஏரியாவெல்லாம்  ஒரு கலக்கு கலக்கிட்டுதான் மேட்டர்  கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கும்.

 கோஹினூர்  கேக் கோஹினூர்  பிஸ்கெட்   கோஹினூர்  ஸ்கூல்  ,கோஹினூர் காலேஜ் ப் டெக்னாலஜி   கோஹினூர்  இன் ஃ போ  டெக்    என்றெல்லாம்  வரும் .

  மக்களும்  கோஹினூர்  கோஹினூர் செல்வி.கோஹினூர்செல்வன் என்றெல்லாம் பேர் வைத்துக் கொள்வார்கள்.

சிலபேர் நியுமராலஜிப்படி என்று கோஹினூர் என்ற பெயரில்  ஸ்பெல்லிங்கு மாற்றம் கூடச் செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது .

 எலக்ஷன் வரும்போது எந்த கட்சியின்  ஆட்சி யில்  கோஹினூர் வைரம் கொண்டு வரப்பட்டதோ அந்த கட்சி இதை ஒரு பெரிய சாதனையாகச் சொல்லிகொள்வார்கள்.  

இத்தனை பேர் பூந்து விளையாடும் போது  நம்ம ஜோசியர்களும் அவர்கள் பங்குக்கு இதனால் இந்தியப் பொருளாதாரம் , பங்குச் சந்தை , தலைவர்கள்தானியங்களின் மகசூல், அரசியல் கட்சிகள்  இவர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி எடுத்து விடுவார்கள் .

இதனால் இந்தியத் துணைக் கண்டத்தில் சுனாமி ,பூகம்பம் பெரு வெள்ளம் வறட்சி இவைகள் வருமா
அது வராம  இருக்கனும்னாக்க என்ன  பண்ணனும்  என்றெல்லாம் ஆலோசனைகள் வரும் 


எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு இல்லை .
,பாதிப்பு இருக்கும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன
எந்தக் கிழமையில் செய்யணும்,
  எந்தக் கோயிலுக்குப் போகணும் என்று வார இதழ்கள் ,டி வி சானல்களில் சொல்லுவார்கள்
சிலர் வெகு சிரத்தையாக நோட்ஸ் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு  பரிகாரம் செய்வார்கள் .

பத்தாதற்கு நகைக் கடைக் காரர்கள் வேறு  (REPLICA )  கோஹினூர் தோடு, கோஹினூர் நெக்லஸ்  கோஹினூர் மோதிரம்  அப்படி இப்படின்னு  விற்பனையைக் கூட்ட யுக்தி பண்ணுவார்கள்


 மாணவர்களுக்கு கோஹினூர் வைரம்  பத்தி  ஒரு CHAPTER சேர்த்துவிடுவார்கள்  ,
  பரிட்சையில்  முக்கிய கேள்வி  லிஸ்டில்   புதுசா ஒரு ஐட்டம் சேந்துடும் .

ஆஹா ! பி ஹெச் டி பண்ணும் மாணவர்களுக்கு ஒரு டாபிக் கிடச்சுது .