Saturday 30 April 2016

கோஹினூர் வைரம் நம் நாட்டுக்குத் திரும்ப வந்துவிட்டால் ......

கோஹினூர் வைரம்  நம் நாட்டுக்குத் திரும்ப வரவேண்டும் என்ற கருத்து  நிலவி வருகிறது . பரவலாக ஏகப்பட்ட விவாதங்களும் தொடர்கின்றன

 அப்படி நம் நாட்டுக்கு  கோஹினூர் வைரம் வந்துவிட்டால் ......
 என்னென்ன நடக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் .

 முதலில் அதை எந்த ஊரில் வைப்பது என்பது பற்றி நாடு தழுவிய 
சர்ச்சைகள் 
,போராட்டங்கள் ....
 தீக்குளிப்புகள் .
 பார்லிமென்ட் சரிவர நடக்காது .
எதிர்க் கட்சிகள் வெளி நடப்பு
 என்றைக்கு வேறு நல்ல மேட்டர் இல்லையோ அன்றைக்கு டி. வி. சானல்கள் இந்த மாட்டரைக் கையில்  எடுத்துக் கொண்டு   வெட்டியாக  ஆனால் பாப்புலராக இருக்கும் ஆட்களைப்  பிடித்து  வைத்துக் கொண்டு அவர்களின் அபிப்பிராயம் அது  இது  என்று   ஒட்டிவிடுவார்கள்.

.ஏகப்பட்ட சரித்திரச் சான்றுகளுடன் பேசுவார்கள் .

,அதில் மசாலா  சேர்த்த மாதிரி எக்கச்சக்கமாக  உணர்ச்சி வசப்படுவார்கள்.
.கண்ணீர் விடுவார்கள் .

தேவையே இல்லாமல் ஆங்கர் வேறு உசுப்பேத்து கிறமாதிரி 
உச்ச  ஸ்தாயியில் அப்பப்ப ஒரு கத்து கத்துவார் .

அப்புறம் ஒரு வழியாக இடத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு  (இதுக்கே நாம ஒரு வருஷம் ஆக்கிடுவோம்  (நான் சொல்ற ஒரு வருஷங்கிறது ரொம்ப பாஸ்ட் )

அடுத்து பாதுகாப்பு . நாமதான்   சில சமயங்களில் பைலையே தொலைச்சுடுற  ஆட்கள் .ஆச்சே.அதனாலே  எத்தனை  அடுக்குப் பாதுகாப்பு  போடுறதுன்னு  ஒரு கமிட்டி போட்டு 
திரும்ப .....
முதல்லேருந்து....சர்ச்சை ..........


பாதுகாப்பா  இருக்கற வரை பிரச்னை இல்லை ,



 அப்புறமா   நம்ம  சினிமாப் பாட்டிலே  வாராது வந்த வைரமே ” என் அழகு   கோஹினூர் வைரமே ".." கோஹினூர்  மணியே  , கோகிலமே .”அதுவே இதுவே ....ன்னெல்லாம் வரும் .

 அப்புறம்  காதல் என்ற  வார்த்தையை ஒரு  வழி பண்ணி 
 (பட டைட்டில் )எக்கச்சக்கமா  படங்கள் வந்த மாதிரி   முதலில் கோஹினூர் என்ற பெயரில் வந்த படம் வெற்றிப் படமாக அமைந்து விட்டால் கோஹினூர் வைரம் என்கிற வார்த்தையை வைத்து   ஏகத்துக்கும் விளையாடுவார்கள்   நம்ம ஆட்கள்

( இந்தியில் ஏற்கனவே  கோஹினூர்  என்று ஒரு படம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் ).
 பிறகு இந்த டைட்டிலுக்கு வரி விலக்கு பற்றி ஒரு பிரச்னை நாம ஆரம்பிப்போம் 
. இது தமிழ் வார்த்தை அல்ல என்று ஒருத்தர் கோர்ட்டுக்குப் போவார்...

.இதை வச்சு வாட்ஸ் அப்  ட்விட்டர்  இந்த ஏரியாவெல்லாம்  ஒரு கலக்கு கலக்கிட்டுதான் மேட்டர்  கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கும்.

 கோஹினூர்  கேக் கோஹினூர்  பிஸ்கெட்   கோஹினூர்  ஸ்கூல்  ,கோஹினூர் காலேஜ் ப் டெக்னாலஜி   கோஹினூர்  இன் ஃ போ  டெக்    என்றெல்லாம்  வரும் .

  மக்களும்  கோஹினூர்  கோஹினூர் செல்வி.கோஹினூர்செல்வன் என்றெல்லாம் பேர் வைத்துக் கொள்வார்கள்.

சிலபேர் நியுமராலஜிப்படி என்று கோஹினூர் என்ற பெயரில்  ஸ்பெல்லிங்கு மாற்றம் கூடச் செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது .

 எலக்ஷன் வரும்போது எந்த கட்சியின்  ஆட்சி யில்  கோஹினூர் வைரம் கொண்டு வரப்பட்டதோ அந்த கட்சி இதை ஒரு பெரிய சாதனையாகச் சொல்லிகொள்வார்கள்.  

இத்தனை பேர் பூந்து விளையாடும் போது  நம்ம ஜோசியர்களும் அவர்கள் பங்குக்கு இதனால் இந்தியப் பொருளாதாரம் , பங்குச் சந்தை , தலைவர்கள்தானியங்களின் மகசூல், அரசியல் கட்சிகள்  இவர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி எடுத்து விடுவார்கள் .

இதனால் இந்தியத் துணைக் கண்டத்தில் சுனாமி ,பூகம்பம் பெரு வெள்ளம் வறட்சி இவைகள் வருமா
அது வராம  இருக்கனும்னாக்க என்ன  பண்ணனும்  என்றெல்லாம் ஆலோசனைகள் வரும் 


எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு இல்லை .
,பாதிப்பு இருக்கும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன
எந்தக் கிழமையில் செய்யணும்,
  எந்தக் கோயிலுக்குப் போகணும் என்று வார இதழ்கள் ,டி வி சானல்களில் சொல்லுவார்கள்
சிலர் வெகு சிரத்தையாக நோட்ஸ் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு  பரிகாரம் செய்வார்கள் .

பத்தாதற்கு நகைக் கடைக் காரர்கள் வேறு  (REPLICA )  கோஹினூர் தோடு, கோஹினூர் நெக்லஸ்  கோஹினூர் மோதிரம்  அப்படி இப்படின்னு  விற்பனையைக் கூட்ட யுக்தி பண்ணுவார்கள்


 மாணவர்களுக்கு கோஹினூர் வைரம்  பத்தி  ஒரு CHAPTER சேர்த்துவிடுவார்கள்  ,
  பரிட்சையில்  முக்கிய கேள்வி  லிஸ்டில்   புதுசா ஒரு ஐட்டம் சேந்துடும் .

ஆஹா ! பி ஹெச் டி பண்ணும் மாணவர்களுக்கு ஒரு டாபிக் கிடச்சுது .

4 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றி.
      நான் சொல்ல வருவது எதுவுமே இல்லாத வரை இல்லை இல்லை என்போம் . ஆனால் அது கிடைத்ததும் அதை எப்படிக் கையாள்வது என்பது நம்மில் பலருக்குப் புரிவதில்லை

      Delete
  2. நாட்டுலே நாணயத்தைத் தொலைத்து இருக்கிரார்கள் பலர்.

    சில தலைவர்கள் நா நயத்தைத் தொலைத்து இருக்கிரார்கள்.

    அவற்றையெல்லாம் திருப்பிக் கொண்டு வரப்பாருங்களேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      எனக்குப் power இல்லையே !

      Delete