Tuesday 17 May 2016

கியோமசாவின் அதிர்ஷ்டக் கிணறு

திரு சுப்புத் தாத்தா அவர்கள் ஜப்பானிய நாட்டின் சமயம் பற்றி எழுதுமாறு கேட்டதின் படி இதை எழு துகிறேன்.

அதற்கு முன் சமயம் ஆன்மிகம் இவற்றுடன் எனது ஈடுபாடு பற்றி சொல்லிவிடுகிறேன்

 சிறு வயதிலிருந்து இவைதான் கடவுள்கள் என்று எனக்குக் காண்பிக்கப் பட்ட தெய்வங்களை மட்டுமே நான் கும்பிட்டு வந்தேன் .

இங்கிருந்து வடக்கே போன பின் பளிங்குக் கற்களில் பள பள என இருந்த கடவுள்களைப் பார்த்தபின் அவைகளைக் கடவுளாக நினைக்க ,பக்தி வரக் கொஞ்சம் நாள் பிடித்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை 


 . தெற்கே வந்தபின் அதே மாதிரித்தான்.

 ஆபீசில் கூட வேலை பார்த்த மற்றவர்களால் சீக்கிய மதம் புத்த மதம் ஜைன மதம் போன்ற இவைகளிலும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.

 பிறகு மற்ற ஆசிய மொழியில் ஈடு பாடுவந்தபின் குவான் இன் தெய்வம் பற்றிக் கேள்விப் பட்டேன். ரெய்கி கொஞ்சம் படித்தேன்.


 ஆனால் தியானம் இன்னும் கை கூடவில்லை . (தியானத்தில் பிரஷர் குக்கர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது .


 எனவே யோகாவும் .... ம்ம் ... அதே தான். ) ;

 நடைப் பயிற்சி மட்டுமே 80% சக்சஸ் .

 குவான் இன் தேவியின் படத்தைக் காப்பி செய்து சிலருக்குக் கொடுத்தேன் அவர்கள் தனக்கு நல்ல விஷயங்கள் பல நடந்ததாகச் சொன்னார்கள் .

இப்பொழுதும் ஃ பேஸ் புக்கில் நிச்சிரென் புத்த மதம் என்கிற குழுமத்தில் உள்ளேன் "நம் ம்யொஹொரெங்கே கியோ " என்கிற மந்திரத்தை தனக்காக வேண்டி பிரார்த்திப்பவர்களுக்கு நானும் எழு தி ஒரு பத்து தடவை சொல்லுவேன்

. நிறையப் பேர் பிரார்த்தனைக்கு நன்றி என்று கூறுவார்கள் . எங்கோ முகம் தெரியாத ஒருவருக்குக் கஷ்டத்திற்கு நம்மால் முடிந்தது என்று செய்கிறேன்


.மற்ற படி தீவிர பக்தி என்றால் இல்லை .
 நான் வாக் போகும் போதேபிரார்த்தனையை முடித்துவிடுவேன்

சரி விஷயத்துக்கு வருவோம் .

 ஷிண்டோ ( ஜப்பானில் ஒரு மதம் ) மதத்தில் கியோ மசா கிணறு ஒன்று உள்ளது .அந்தக் கிணறு   தோக்கியோவில் மெய்ஜி ஜிங்கு என்ற இடத்தில் உள்ள கோயிலில் உள்ளது .

இது மிகவும் சக்தி வாய்ந்த கிணறாகக்  கருதப் படுகிறது. நிறைய நேர் மறை சக்தியினைத் தன் உள்ளே கொண்டுள்ள iஇடமாகக் கருதப் படுகிறது  (power spot  having abundant positive energy )


இந்தக் கிணற்றின் உள்ளே இருந்து வருடம் முழுக்க சுத்த மான நீர் கொப்புளித்து வருகிறது.இந்த நீரின் வெப்ப நிலையானது கிட்டத்தட்ட 15 டிகிரி ( கொஞ்சம் முன்னே பின்னே போகும் )அளவில் உள்ளது .ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் அளவு கொப்புளித்து வருவதாகக் கூறுகிறார்கள் .


 இந்தக் கிணற்றின் ஃ போட்டோவை எடுத்து நமது செல் ஃ போனில் ஸ்கிரீனில் வைத்துக் கொண்டால்அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம் .சொல்கிறார்கள் .
 இது பற்றி என்னுடன் பணி புரிந்த ஜப்பானிய நாட்டுத் தோழி அறிமுகம் செய்து வைத்தாள்.


கோயிலுக்கு வருபவர்கள் இந்தக் கிணற்றின் முன் நின்று ஃ போட்டோ எடுக்கக் க்யூவில் நிற்கிறார்கள் ஆனால் நான் இன்னும் வைத்துக் கொள்ளவில்லை . காரணம் நான் டௌன் லோடு செய்து அதை மெயின் ஸ்கிரீனில் வைத்துக் கொள்ளும் நகாசு வேலை செய்ய வராது என்று நினைப் பதினால் தான்

. தவிர மற்ற எல்லா தெய்வங்களின் படம் ஸ்லோகம் இவற்றை விட நான் இந்த க்யோமசா  கிணற்றின்  ஃ போட்டோ பற்றி எழுதக் காரணம் ஒன்று மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்தால் சந்தோஷம் ,

தவிர இதை செல் ஃ போனில் மேல் ஸ்கிரீனில் வைத்துக் கொள்வது செயற்கு எளிதென்பதால். 

4 comments:

 1. //பளிங்குக் கற்களில் பள பள என இருந்த கடவுள்களைப் பார்த்தபின் அவைகளைக் கடவுளாக நினைக்க ,பக்தி வரக் கொஞ்சம் நாள் பிடித்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை//

  இறைவன் ஒரு குறிப்பிட்ட உருவாகத் தான் இருக்கிறான் என்று நினைப்பது நமது obsession. இறைவனை எந்த உருவின் வழியாக மட்டுமன்றி, அருவாகவும் , நாம் முதிர்ச்சி அடைய அடையக் , காண இயலும். உணர இயலும்.

  உருவாய் அருவாய், உளதாய் இலதாய் .....

  கணேசனாக, குமரனாக ,
  சிவனாக, சிவகாமியாக,

  எவ்வுருவிலும் நாம், நம் உள்ளமே இறைவனுக்கு ஒரு உரு கொடுத்து, அவனுக்குப் பல வித அலங்காரங்களைச் செய்து, பல வித உணவுகளை நைவேதனமாகச் செய்து மகிழ்கிறது. திருப்தி அடைகிறது.

  நீ எப்படி யாரை வணங்கினாலும், எதை நீ எனக்கு நிவேதனமாகத் தந்தாலும் அது என்னையே வந்தடைகிறேது என கீதையின் கண்ணன் சொல்கிறான்.

  மண்ணில் செய்யும் விநாயகனை பூசித்தபின் கரைத்து விடுகிறோம்.
  மண்ணில் மட்டும் அல்ல, மஞ்சளிலும் அந்த பிள்ளையாரைச் செய்கிறோம்.

  இறைவன் எங்கும் பரவி இருக்கிறான். நமது புரிதலுக்காக, ஒரு சௌகரியத்துக்காக, அவனுக்கு ஒரு உரு தந்து பிரதிஷ்டை செய்து, பூசை முடிந்த உடன், மந்திரத்தில், நீ எங்கிருந்து வந்தாயா அங்கேயே செல் என்று தான் சொல்கிறோம்.

  தியானத்தைப் பற்றி சொல்லி இருக்கிறீ ர்கள்.

  எண்ணங்களைக் கடந்த தெய்வ உணர்வு தியானம்.

  எங்கும் இருக்கிறான் அவன் என்று சொன்ன பின்,
  என்னிடமும் இருக்கிறான்,
  என் இதயத்தில் ஒளியாக வீற்று இருக்கிறான் என
  ஒரு நிமிடம் ஒரு வினாடி
  அவனையே நினைத்து
  அவனே நான், நானே அவன்
  என நினைத்தால்,

  மனிதர் மனித நேயத்துடன் வாழ்ந்து கட்டியவர் பலர்.

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
  தெய்வத்துள் வைக்கப் படும்.


  தத் த்வமஸி .

  சுப்பு தாத்தா.

  (மேலும் பேசலாம் எழுதலாம்.)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி .நான் இப்போது என் மகன் வீட்டில் கனடா வில் உள்ளதால் உடனே பதிலிட முடியவில்லை .லாப் டாப் கொண்டுவரவில்லை மன்னிக்கவும்

   Delete
 2. ஆனால் தியானம் இன்னும் கை கூடவில்லை . (தியானத்தில் பிரஷர் குக்கர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது .அதே போதான் யோகாவும் // ஹஹஹஹ் செம ஹூயூமர்...ப்பா உங்களுக்கு...

  இந்த ஜப்பான் கடவுள், கிணறு பற்றி என் மகன் ஜப்பான் பற்றிய ஒரு ப்ராஜெக்ட் செய்யும் போது தெரிந்துகொண்டேன். நல்ல பதிவு. நீங்கள் நிறைய எழுதலாமே..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி .நான் இப்போது என் மகன் வீட்டில் கனடா வில் உள்ளதால் உடனே பதிலிட முடியவில்லை .லாப் டாப் கொண்டுவரவில்லை மன்னிக்கவும்

   Delete