JLPT ரிசல்ட் வந்தது என்றாலும் பாஸ் ஆனவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஆனால் ஃபெயிலானவர்கள்
?
பெயில் ஆனவர்கள் எல்லோரும் முதலில் கொஞ்சம் வருத்தத்தோடு தான் இருந்தார்கள்..
இருந்தாலும் அவர்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு தான் அந்த ரிசல்ட்டை எதிர்கொண்டு இருக்கிறார்கள் அது கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது .
உதாரணமாக நான் என் மாணவர்களிடம் எக்ஸாம் எழுதுங்கள்
ஆனால் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது
“என்னை எப்படியாவது பாஸ் பண்ணி விடு”
என்று சொல்வதை விடவும் நீங்கள் தப்பான கொஸ்டினுக்கு எல்லாம் எப்படியாவது பார்த்து ரைட் ஆக மாற்றி விடுங்கள்
நாம் பென்சிலில் எழுதுவதால் கடவுளுக்கு அது ஈசியாக இருக்கும் என்று நான் விளையாட்டாக சொன்னேன்
நான் சொன்னேன் 85 பாஸ் மார்க் என்றால் குறைந்தபட்சம் 75ஆவது வாங்கினால் தான் கடவுள் அங்கே இங்கே அள்ளித் தெளித்த மாதிரி தப்பாக இருக்கும் பதில்களுக்கு ரப்பரால் அளித்து பாஸ்போட் டுவிடுவார்
ஆனால் 40 மார்க்குக்கு மட்டுமே சரியாக எழுதி இருந்தால் அவருக்கும் எரிச்சல் வந்துவிடும் அல்லவா
“போதும் போ நீ எழுதுன லட்சணத்திற்கு “
என்று விட்டுவிட்டார் போலும் . என்று நான் சொன்னேன்
அதனால் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கடவுள் என்பவர் ஒரு சைடு சப்போர்ட் .
அவ்வளவுதான் அவரே உட்கார்ந்து எல்லோருக்கும் பரிட்சை உக்காந்து எழுதிட்டு இருக்க முடியாது என்னதான் டிஜிட்டல் உலகம் என்று சொன்னாலும் அப்படி எல்லாம் முடியும் என்று எனக்கு தோணவில்லை
இதாவது பரவாயில்லை என்னுடைய ஒரு ஸ்டூடன்ட் கோலம் போடும் போது பூஜை ரூமில் பொதுவாக போடும் கோலத்தோடு காஞ்சியையும் அவர்கள் போட்டு இருக்கிறார்கள்
“நான் பரீட்சை சரியாக எழுதவில்லை என்றாலும் நான் போட்ட இந்த காஞ்சிக் கோசரமாவது என்னை நிச்சயமாக பாஸ் பண்ணி விட்டுவிடுவார்”என்று நம்பினார் .
ஆனால் அவரும் பாஸ் பண்ண வில்லை
“கடைசில பாத்தீங்களா கடவுள் கைவிட்டு விட்டார்” என்று என்னிடம் சொன்னார் .
நான் சொன்னேன் “நீங்கள் ஸ்ட்ரோக் ஆர்டர் படி போட்டு இருந்தால் கடவுள் உங்களை பாஸ் பண்ணி விட்டிருப்பார்
ஸ்ட்ரோக் ஆர்டர் இல்லாததால் தான் பாஸ் பண்ண வைக்கவில்லை “என்றேன்
வடிவேல் சொல்லுகிற மாதிரி ஷாப்பா ....... எப்படி எல்லாம் முட்டுக் கொடுக்க வேண்டி இருக்கிறது
அவருக்கு
இரண்டு மூன்று முறை N3எழுதி பாஸ் ஆகவில்லை என்பதால் அவர் கடவுள் ரொம்ப மோசம் பேசாமல் நீட் வேண்டாம் என்று சொல்வது மாதிரி JLPT வேண்டாம் ” என்று சொல்லலாமே என்று சொன்னார்
பொதுவாக comprehension question ல்
筆者がもっとも言いたいことはなんですか。என்று
வருமே
அதுபோல நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்
“தனி ஒரு ஜாப்பனீஸ் மாணவர் மற்றும் டீச்சருக்கு JLPTஇல்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம். “
ஏனெனில் JLPTரிசல்ட் வருகிற அன்றுதான் பரிட்சையைப் பற்றி கலாய்த்துக்கொண்டும் கலகலப்பாக பேசிக்கொண்டும் சந்தோஷமாக இருக்க முடிகிறது
Truth with sense of humour lovely
ReplyDeleteThank you . May I know your good name
DeleteGood message. "அவருக்கு இரண்டு மூன்று முறை N3எழுதி பாஸ் ஆகவில்லை என்பதால் அவர் கடவுள் ரொம்ப மோசம் பேசாமல் நீட் வேண்டாம் என்று சொல்வது மாதிரி JLPT வேண்டாம் ” என்று சொல்லலாமே என்று சொன்னார்" nice one"😅😅
ReplyDeleteMay I know who is this?
DeleteJLPT is this much difficult?
ReplyDelete