Tuesday 14 March 2017

வேஷம் மாறும் காசு


நான்  பாடப்புத்தகத்தில்  சீனர்கள்  கடல் சிப்பிகள்  சோழிகள்  போன்ற

பலவற்றினையும்    காசு போல  உபயோகித்து  வந்தனர் என்று 

படித்திருக்கிறேன் ..

சில  சமயங்களில்  அவற்றை  முப்பது  நாற்பது என்கிற  மேனிக்கு  கயிற்றில்

கோத்து   மாலைகளாகவும் கட்டி ஒரு unit உதாரணமாக ஒரு டாலர் என்கிற

மாதிரியாக வும் செய்து வைத்திருந்தனர்  என்றெல்லாம்  படித்தருக்கிறேன்..

 கால்  நடைகள்  முதலில்  பணமாக்க கருதப் பட்டதாம்

 ( அப்பொழுதெல்லாம்  ஒட்டுப் போட பணம் கொடுக்கிறதா இருந்தாக்க..... நினைச்சுப் கூட பார்க்க முடியலை  ,  சிரிப்பு வந்தது.)

 ,வெண்கலத்தால்   ஆன   சிறிய கத்திகள்   கூரான ஆயுதங்கள் இவைகளைக்கூட  ஆயுதங்களாக  உபயோகித்திருந்திருக்கின்றனர் .

பிறகுதான்   கூரான   ஆயுதங்கள்   பையைக்   கிழிக்கும்   கையைக்
  கிழிக்கும்  என்பதால்   வட்ட வடிவமான   நாணயங்களைச்   செய்திருக்கின்றனர்.

 அப்போல்லாம் 

என்னடா    இதையெல்லாம்   போய் காசுன்னு  வெச்சுகிட்டு இருந்த்திருக்கிறாங்க தண்டப்  பசங்க ன்னு  நினைத்திருந்திருக்கிறேன் ..

முகமது -பின் -துக்ளக்காலத்தில்-- தோல் --நாணயங்கள் --இருந்ததாகப் --படித்த ஞாபகம் ... (  சரியா தவறா தெரியவில்லை )


நாணயங்கள்   எடுத்துச்   செல்ல   அவ்வளவாக   ஏதுவாக   இல்லையாதலால் பிறகு   கரன்சி    நோட்டுக்கள்   அச்சடித்த போதும்  மக்களால்  உடனே ஏற்றுக் கொள்ளப் படவில்லையாம் .

போயும்   போயும்   காகிதத்தை   எவன்   காசுன்னு   மதிப்பான்   என்ற எண்ணம் இருந்ததால் !

அவ்வளவு என் ?

 ஏ. டி .எம் கார்டுகள்  கூடப் புழக்கத்தில் வர   கொஞ்சம்   நாட்கள்   பிடித்தது .

 இனி   வரும்   காலங்களில் கார்ட்டுக்குப் பதில்  சிம்  கார்டு  மாதிரி ஒரு


உபகரணம் கரன்சி நோட்டிற்கு மாற்றாக வரலாம் யார் கண்டது ?


அப்போவெல்லாம் நம்ம ஜெனரஷனை என்ன மாதிரி மீம்ஸ் ட்ரொலெல்லாம் 

 போட்டுக் கிழி  கிழிக்கப் போறாங்கன்னு தெரியல 

20 comments:

  1. ....கிட்டத்தட்ட இப்போது கைபேசியில்....

    ReplyDelete
  2. அப்படி ஒரு சூழ்நிலை வரும் நேரத்த்தில் மீம்ஸ் எல்லாம் காணாமல் போயி அதற்கு பதிலாக வேறு மாதிரி கலாய்ப்புக்கள் வரும்

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் இப்போது போல்
      டெக்னாலஜியில் கலக்க வேண்டும்

      Delete
  3. நீங்கள் சொல்வது நிச்சயம் நடக்கும்.

    ReplyDelete
  4. கைக்குக் கைக்கு மாறும் காசு
    போய்
    வேஷம் மாறும் காசு ஆகிய
    செய்தியைப் படித்தேன்

    ReplyDelete
  5. ஒரு காலத்தில் ஒன்றாம் தேதி ஆனால் கை நிறைய காசு ஆபீசில் கையிலேயே தருவார்கள். இப்போது எல்லாம் வங்கி வழியே. பெரும்பாலும் நம் கண்ணில் படாமலேயே நம் பணம் அங்கிருந்து இங்கு, இங்கிருந்து எங்கோ என்று அலைகிறது, சுற்றுகிறது! மாற்றம் ஒன்றுதான் மாறாதது!

    ReplyDelete
  6. பணப் பரிமாற்றமல்ல. சாப்பாடு உட்பட ....அனைத்து நிலையிலும் சிம் கார்டு வந்துவிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்

      Delete
  7. மாற்றம் தானே மாறாதது.... நல்லது நடந்தால் சரி.

    ReplyDelete
  8. இதுபோன்ற மாற்றம் சாத்தியமே
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  9. சிம் என்ன வெர்ச்சுவலாக வந்தெ விடும் என்றே தோன்றுகிறது. இப்போது எப்படி கண்ணுக்குத் தெரியாமலேயே பணம் நெஃப்டில் ஒவ்வொரு இடத்திற்கும், பில் பே பண்ண வேண்டிய ஆஃபீஸ்களுக்கும் மாறுகிறதோ அது போலவே இப்படியும் வரலாம்...ஏனென்றால் மனிதனின் மறதி இன்னும் அதிகமாகுமாம்....இப்போதே பல வற்றிற்கும் ஆட்டோமாட்டிக் டிடக்ஷன் வந்துகுர்ச்சே அது போல ....வெர்ச்

    ReplyDelete
  10. First time I am visiting your blog
    Thought provoking one

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி

    ReplyDelete