Sunday, 12 March 2017

வேற்று மொழி படிப்பது Thriller Game போல
பொதுவாக    என்   பதினோரு வருட டீச்சிங்    அனுபவத்தில்   
பெரியவர்களை விடக்    குழந்தைகள்   வெகு சீக்கிரம் 
கற்றுக் கொள்கிறார்கள் .
காரணம் அவர்கள் ஆராய்ச்சிக்குப் போவதில்லை
வளர்ந்து விட்ட நாம் புது மொழியோடு ஆங்கிலத்தையும் ஒப்பிட்டுக் கொண்டு அந்த வித்தியாசத்தைக் கண்டு பிடிப்பதில் மூழ்கி விடுகிறோம் .


நான் விளையாட்டாகக் கற்கும் முறையை  என் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன் .

இதனால்   என்   வகுப்புகளில்   DROP OUTS கம்மியாக இருக்கும்

 புது மொழி   கற்கவேண்டுமானால்   முதலில்  அந்த   மொழியில் உள்ள சினிமா அல்லது   டிராமா   ஆகியவற்றை   இங்கிலீஷ்   சப் டைட்டிலோடு   இரண்டு முறை   பார்க்கணும் .
பிறகு   அதே  எபிசோடை மூன்றாவது   முறை சப் டைட்டில் இல்லாமல் பார்க்கணும் .


 அடுத்து அந்த மொழியில் உள்ள நல்ல  Adjectives எல்லாவற்றையும்
நம்   பெயரின் முன் அடைமொழியாகப் போட்டுக் கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம்  வீர வசனம்  பேசணும் (சொல்லவும் .)
அவர்களிடம்  நீ மோசம் , சோம்பேறி , ஆமை வேகம் போன்றவற்றைச்
சொல்லணும்.
அவர்களுக்கு எதுவும் புரியாது . ( புரிந்தால் தான் வினையே ...புரியாமலிருப்பது சாலச் சிறந்தது )


அடுத்தது   வீட்டில் உள்ளவர்களிடம் கற்றுக் கொள்ளும் மொழியில் பேசவும் .
உதாரணமாக   இது   என்ன   சாம்பாரா   ரசமா ?
ரெண்டுமே ஒரே மாதிரியானdensityயான    தண்ணியா இருக்கே ?

ஏன் வெட்டியா இருக்கே?

என்பது போல.

( இது  விளையாட்டல்ல ,  பலமுறை   நாம் இதுவா   அதுவா   என்ற   கேள்வியைக்   கேட்போம் .   அப்போ   சாம்பார்   ரசம்  என்னும் வார்த்தைக்குப் பதில் சம்பந்தப் பட்ட வார்த்தையைப் போட்டுக் கொள்ளணும்)


 (This is book , This is pen என்றெல்லாம் படித்தால் வேலைக்கு ஆகாது .

நம் அன்றாட வாழ்க்கையில் இந்த  ஸ்டேஷனரி சம்பந்தமான வார்த்தைகள் அவ்வளவாகப் பேசுவதில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும்.


அடுத்தது   என் வகுப்பில்  (முக்கால் வாசி சனி ,ஞாயிறு அல்லது சாயந்திரம் 

அஞ்சு முதல் ஏழு வரை போன்ற நேரங்களில் தான் இருக்கும் ) சினிமா 

வசனங்கள் மற்றும் பாடல்கள் போன்றவற்றை மொழி பெயர்க்குமாறு 

சொல்வேன் .

கொஞ்சம் கலகலப்பாக இருந்தால்தான் பசங்க கவனிப்பாங்க

வடிவேலு டயலாக்கள் 
 நானும் ரவுடிதான் .... 

மாப்பிளை இவருதான் ஆனா சட்டை இவரது இல்ல .

 இது போன்ற வாசனைகளை அடிக்கடி சொல்லிப் பார்க்குமாறு சொல்வேன் .

அந்த மொழி  பெயர்த்த பாடல்களை
 உதாரணமாக என் சமயலறையில் நீ உப்பா     சர்க்கரையா

ஒய் திஸ்  கொலை வெறி ?போன்ற பாடல்களை மனதிற்குள்
 பாடிக்கொண்டு இருக்கும் படிச்
சொல்வேன் . அதுவும் காலையில் எழுந்தவுடன் .....
அந்தப் பாடலே நமது மனதில் பல முறை ரீங்காரம் இடும் என்பதால் .


 அடுத்து   என்   ஐடியா   என்ன வென்றால்  மீம்ஸ் போடுபவர்கள்

 மாதிரி   அந்த   பிரபலமடைந்த   வசனங்களை  உதாரணமாக

" விட்டா நம்மளக் கிறுக்கனாக்கிடுவாங்க போல .. "

“அடிச்சான் பாரு அப்பாயிண்ட் மென்ட் ஆர்டர்”

போன்றவற்றை   மொழி பெயர்த்து அந்த தமிழ் மீம்ஸ்களை எடுத்து விட்டு 

நாம் கற்கும் மொழியில் மொழி பெயர்த்து replace செய்யலாம் .

 இது   குறித்து   நான்  திரு கார்த்திக் சரவணனிடம் கூடப் பேசினேன் .

அது   ரொம்ப ஈஸி  என்கிறார் .

எனக்குப் பிடிபடவில்லை .

யாராவது   ஸ்டெப் பை ஸ்டெப் ஆகச் சொல்லி ஒரு  பிளாக்  போட்டால்
 என் போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும்

என்னைப்   பொறுத்த வரை  புதிய எதையும்  நம்  மனம் ஏற்க மறுப்பதாலும் , நமக்கு   நேரம்( Polite version of சோம்பேறித்தனம் )   ஒரு   பிரச்சனையாக இருப்பதாலும்   பள்ளியில்   படித்த   முறையிலிருந்து   இது   மாதிரி   மாற்று முறையில் படிக்கலாம் .
 Studying can be made like a Thriller Game

18 comments:

 1. நல்ல யோசனைகள்... புதிய மொழி கற்க உதவும். தில்லி வந்த புதிதில் ஹிந்தி கற்க முடிந்தது ஒரு சர்தார்ஜியால்!

  ReplyDelete
 2. விளையாட்டாக கற்று கொடுப்பதும் விளையாட்டாக கற்றுக் கொள்ள முயற்சிபதும் மிக நல்ல முயற்சி

  ReplyDelete
 3. நல்ல முயற்சியாகத் தெரிகிறது.

  ReplyDelete
 4. மிக மிக நல்ல முயற்சி. நானும் டீச்சர் என்பதால் இப்படித்தான்..

  கீதா: யெஸ் அருணா இப்படிக் கற்றுக் கொடுத்தால் கசக்கும் கணக்குப் பாடம் கூட குழந்தைகளுக்குப் புரிந்துவிடும். நம் கல்வி முறையே மாற வேண்டும் என்று நாம் நினைப்பதுதானே.

  என் மகன் கானடா, அமெரிக்கா கால்நடை மருத்துவ லைசன்ஸ் வாங்குவதற்குப் படித்த கிளினிக்கல் புத்தகம் அந்த ஊர் வாத்தியார் ஒருவர் எழுதியது மிக மிக அருமையாக இருக்கும். நோய்கள், சிம்ப்டம்ஸ், தீர்வு எல்லாமே காமிக்ஸ் புக் போல விலங்குகள் மருத்துவர் பேசிக் கொள்வது போலவே கிட்டத்தட்ட டாக்டர் டு லிட்டில் படம் போல பபிள்ஸ் போட்டு டயலாக்குகளுடன் காமிக்கலாகவும் இருக்கும் மகன் மிகவும் ரசித்துப் படித்தான். அவன் அப்போது சொன்னார் இப்படி னம்மூரிலும் புத்தகம் இருந்தால் எல்லாப் பசங்களும் விரும்பிப் படிப்பார்கள் என்று...

  ReplyDelete
 5. மகிழ்ச்சியுடன் + சிரிப்புடன் சொல்லப்படும் அனைத்தும் மனதில் நம்மை அறியாமலே "பச்சக்"-ன்னு ஒட்டிக் கொள்ளும்...!

  ReplyDelete
 6. நல்ல செயல்கள் நன்றே நிகழும்.

  ReplyDelete
 7. வித்தியாசமான முயற்சி....அருமை...

  ReplyDelete
 8. // வளர்ந்து விட்ட நாம் புது மொழியோடு ஆங்கிலத்தையும் ஒப்பிட்டுக் கொண்டு அந்த வித்தியாசத்தைக் கண்டு பிடிப்பதில் மூழ்கி விடுகிறோம் //

  நீங்கள் சொல்வது சரிதான்.

  ReplyDelete
 9. ஒரு மொழியை அப்படியே பெயர்த்தால், மண்ணிலிருந்து பாறாங்கல்லைப் பெயர்த்ததுபோல் தான் வருகிறது. குறிப்பாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு. ஜப்பானிய மொழி தமிழுடன் அதிகமாகத் தொடர்பு கொண்டிருப்பதால், எளிது என்பதே என் எண்ணம். என்ன, சித்திர எழுத்துக்களை மனதில் வைத்துக்கொள்வதுதான் மிகவும் சிரமமாக இருக்கிறது.

  ReplyDelete