Sunday 12 March 2017

படிப்பதினால் ***********ஆயிரம் உண்டு


படிப்பில்   ஆசை    உள்ளவர்களெல்லாம்   வழக்கமாக    சொல்லும்
படிப்புதான்  வாழ்க்கையில்   முக்கியம் ,   கற்றோர்க்குச்   சென்ற இடமெல்லாம் சிறப்பு   என்கிற  டெம்பிலேட்   காரணங்களுக்காக   நான் என்றுமே  படித்ததில்லை , 1983-1988 வருடங்கள்   மட்டுமே நான் படித்ததில்லை .
 மற்றபடி   கைவினை வகுப்புகள்  உட்பட  நான்  எதோ  ஒரு  மொக்கை  கோர்ஸ் பண்ணிக்கொண்டு      நானும்    படிக்கிறேன் என்று  பந்தா பண்ணிக்கொண்டு இருக்கிறேன் .

அதனாலேயே   நிறையப்  பேர்   என்னை  ஒரு  அறிவாளி  என்கிற  tag  உடன்தான் பார்க்கிறார்கள் .

 சின்ன   வயதிலே   இருந்தே   பிரிக்க   முடியாதது   எதுவோ என்று கேட்டால் என்னையும் புத்தகமும் என்று சொல்லுபடி ஸீன் போடுவேன்.

 நிச்சயமாக    படிப்பின்   மீது   இருந்த   ஆசையால்   அல்ல .
நாங்கள் மூவரும் பெண்கள் என்பதால் வேலை செய்யச் சொல்வார்கள் .

கையில் புத்தகம் இருந்தால்  "  வெட்டியா தானே  இருக்கே  இந்த  வேலையைச் செய்யேன்  என்று  யாரும் நம்மைச் சொல்ல  மாட்டார்கள் ".

 இந்த சூக்சுமத்தை அந்த சின்ன வயதிலேயே புரிந்து கொண்ட  என் அறிவின் மகிமை பற்றிச் சொல்ல வார்த்தைகள்............

 பிறகு   படித்த தில் எங்க அம்மாகிட்டே ஒரு சப்ப மாட்டருக்கெல்லாம் சந்தேகம் கேப்பேன் .   இதெல்லாம்   கூட   நீ   படிக்க   ஆரம்பிச்சுட்டியா அப்படீன்னு ஆச்சரிய ப்பட வைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேப்பேன் .

அம்மா   சொன்னாலும்   எனக்குப்  புரியாட்டியும்  தலையை ஆட்டிடுவேன் . இல்லைன்னாக்க  ரொம்ப விவரிப்பாங்க.

  வேலையை   டபாய்க்க ன்னு   ஆரம்பிச்சு " புத்தகப் புழு "என்று பேர் வாங்கினேன்.

 பிறகு   ஸ்கூல்    காலேஜிலேல்லாம்    மத்தவங்களுக்குத்   தெரியாத விஷயமெல்லாம்   நாம்  சொல்லும்போது   இதெல்லாம்  உனக்கு எப்படித் தெரியும் ன்னு  மத்தவங்க  நமபளைப் பாக்கும் போது  எனக்கே
வெட்டிப்  பெருமை  இருந்ததென்னவோ  உண்மை .


V RS வாங்கியதும்   மற்ற    வங்கிகளில்    வேலை   செய்ய   சந்தர்ப்பங்கள் இருந்தும்   பசங்க   இருவரும்  பத்தாவது  பன்னெண்டாவது  என்ற நிலையில் முழு  நேர  வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.


 யாருமே எதிர் பார்க்கவில்லை  
நான் ஜப்பானிய மொழி படித்தேன்.

. பாதிப் பேர் நம்பவில்லை .
மீதிப்  பேர்  இது எதுக்கு?  இதை   எல்லாம்  எவன்   சீந்துவான்  என்ற நெகட்டிவ் கமெண்டுகள் ஏராளம்
.நான் தளரவில்லை ,

முன் வைத்த காலுக்கு ரிவர்ஸ் கியர் போடும் வழக்கம் கிடையாது என்று சொல்லிவிட்டேன் .

  இப்போதும் படிக்கிறேன்  என்றால் உண்மையான காரணம்
 கிளாஸ் இருக்கு போகணும்   , வேறு ஏதாவது   வெட்டி   வேலையாக   உறவுகள் கூப்பிடுவதை  முற்றிலும் தடுக்கலாம் , இந்தமாதம்  பரிக்ஷை அடுத்த மாதம்  பரிக்ஷை என்று சொல்லிக்கொள்ளலாம் . ( சத்தியமாக    யாரும் தேதியை   செக் பண்ணமாட்டார்கள் ).

 நாமும்   பிசி என்று சொல்லிக்கொள்ளலாம் .

ஏன்  பிளாக் பக்கமே வருவதில்லை ? படிக்கிறேனாக்கும் .
( கடவுளை நம்பாதவர்கள் கூட நம்பிவிடுவார்கள் )

 மற்றவர்கள் முன்னிலையில் நம் இமேஜ் கூடும் .

 தவிர   மற்றவர்களைக் கொடுமைப படுத்தலாம் .
 என் கொடுமையில்   மாட்டித் தவிப்பவர்கள்   சக பிளாக்கர் திருகார்த்திக் சரவணன் (ஸ்கூல் பையன் ) & அவர் மனைவி .

அன்றன்றைக்குப்   பாடத்தை   அன்றைக்கே   படிக்கணுமாக்கும்    என்று நான் சொல்லும் போது   எனக்கு   ஒரு   கெத்து   பீலிங்கு   வரும் பாருங்க .
அதெல்லாம் அனுபவிச்சாத்தான் புரியும்.

நமக்குப் பொழுது போகலைன்னாக்க பாடங்களை
 ஃபோட்டோ   எடுத்து   மெயிலில்   அனுப்பி  போனில் பாடம் 
சொல்லித்தருகிறேன்  என்று  பாடாய்ப்  படுத்தலாம்

நிறையப் பேர் மாட்டி  சுருண்டு  சுண்ணாம்பாகி
யிருக்கிறார்கள். ( மேலே குறிப்பிடப் பட்டவர்கள் உட்பட )


இப்ப  ஒத்துக்கறீங்களாபடிப்பு நல்லது "என்று .

17 comments:

 1. தில்லாலங்கடி வேலை படிக்கும்போதேவா ???

  ReplyDelete
 2. ஆஹா நீங்க பெரிய படிப்பாளி என்று நினைத்து உங்களை பாலோ பண்ண நினைத்து நானும் ஸ்பானிஸ் சிடி வாங்கி வைத்து ஒரு வாரம் கொஞ்ச கொஞ்சம் போட்டு பார்த்த பின் அப்படியே விட்டுவிட்டேன் நல்லவேளை ஜப்பானிஷ் எடுத்து படிக்க ஆரபித்தால் கார்த்திக்கை படுத்துவது மாதிரி என்னையும் படித்தி இருப்பீர்களோ? ஹீஹீ தப்பித்துவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஸ்பானிஷ் எளிய மொழி என்று கூறுகிறார்களே. கற்றுக்கொள்ளுங்கள்.

   Delete

 3. வெட்டி பேச்சுகள் பேசி நேரம் கழிக்காமல் யாரையும் குறை கூறாமல் நேரத்தை மிகவும் ஆக்க பூர்வமாக இந்த "இளம் வயதிலும்' செலவழிப்பது பாராட்டதக்கது

  ReplyDelete
  Replies
  1. நான் முன்பே இது பற்றி எழுதி வைத்துள்ளேன் .
   அதைப் பதிவாகப் போடலாமா அது யாருக்காவது உபயோகமாகுமா அல்லது என்னைப் பற்றிய தற்பெருமை போன்ற பதிவாக இருக்குமோ என்று பெண்டிங்கில் வைத்திருந்தேன் .
   இப்போது பதிவாகப் போட்டுவிட்டேன்
   இது உங்களுக்கு உதவலாம்

   Delete

  2. தற்பெருமை என்று மற்றவர்கள் நினைத்தாலும் பரவாயில்லை சொல்ல வருவதை தைரியமாக சொல்லி செல்லுங்கள்... ஒவ்வொறுவரின் நல்ல பதிவிலும் ஏதாவது பயன்படக்கூடிய கருத்துகள் அறிவுரைகள் இருக்க கூடும் உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை நான் கல்லூரியில் படித்த காலத்தில் மனக் குழப்பத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று விஷமும் வாங்கி வைத்துவிட்டேன் அந்த நேரத்தில் நான் படித்த சில வரிகள்தான் இன்று வரை என்னை வாழ வைத்து கொண்டிருக்கிறது

   Delete
  3. நான் பலவற்றையும் யோசித்துத்தான் பதிவே எழுதுவேன். அவற்றில் முக்கிய காரணி, தற்பெருமை பேசுதல். இப்படிப்பட்ட பதிவாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தாலும் வெளியிடமாட்டேன். இவன் என்ன பெரிய அப்பாடக்கரா? என்று மனதில் பேசிக்கொண்டு 'வாழ்த்துக்கள்' என்றும் நீ எப்படியாப்பட்ட ஆளாச்சே என்றும் பின்னூட்டம் இடுவார்கள். ஒரு பின்னூட்டம் என்பது தவறுகளை நேருக்கு நேராக உரைத்திடும் வண்ணம் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

   Delete
 4. படிப்பு நல்லது தான். எனக்கும் படிக்கும் ஆசை உண்டு! ஆனால் செயல்படுத்துவதில்லை - சோம்பேறித்தனம்....

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. டெல்லியில் நீங்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம் . தவிர அவர்களே உங்களுக்கு விடுமுறை நாட்களில் டூர் கைடு போல அனுப்புவார்கள் . நீங்கள் நினைப்பது போல குறைந்த சம்பள வேலை அல்ல அது . டூரிஸ்ட்களை கடைக்கு கூட்டிச் செல்லும் கடைக்காரன் கைடுக்கு கமிஷன் தந்து விடுவான் . என்னுடன் நிஸானில் வேலை பார்த்த ஒரு டெல்லிக்கு காரன் சொல்வான் ஒரே நாளில்40000, 50000 சம்பாதித்து விடுவானாம்

  ReplyDelete
 7. நல்ல ஒரு விளக்கம் படிப்பதற்கு இப்படியும் ஒரு பொருள் உண்டு என்பதை தெரிந்துக் கொண்டேன்.நன்றி.

  ReplyDelete
 8. //என் கொடுமையில் மாட்டித் தவிப்பவர்கள் சக பிளாக்கர் திருகார்த்திக் சரவணன் (ஸ்கூல் பையன் ) & அவர் மனைவி .//
  இதை கொடுமை என்று சொல்லமாட்டேன். நீங்கள் எங்கோ பிறந்து வளர்ந்தவர். நான் யாரோ? இருவருக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருந்தது தமிழும், பதிவுலகமும் மட்டுமே. உங்களைப் பாராட்டிப் பேசவேண்டிய நாள் ஒன்று வரும், விரைவில்.

  ReplyDelete
 9. படிப்புக்கு அகவை கிடையாது
  படிப்புக்கு எல்லை கிடையாது
  எப்போதும் படிக்கலாம்
  எத்தனையும் படிக்கலாம்
  வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. Naanum appadithan. Amma vidam velailaiyilirundhu thapikkave padithen. Piagau saga classmates in Nokia ilurundhu thappikvum.

  ReplyDelete