Wednesday 9 November 2016

கிரேஷம் விதியின் புதிய வடிவம்


 கிரேஷம் விதி  ( Gresham's Law)  என்ற ஒரு விதி உண்டு அதன் படி கெட்ட பணம்  

நல்ல பணத்தை விரட்டி விடும் என்பது .

16 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் சில்லரைக் காசுகள் புதிய வை எவ்வளவு

அடித்தாலும் அவை புழக்கத்தில் இல்லாமல் காணாமல் போய்விடுமாம் .

அதே பழைய காசுகள் தான் புழக்கத்தில் இருக்குமாம் .

அரசாங்கம் ரொம்பவே மண்டை காய்ந்து போய்விட்டது .

 , இது எதனால் என்று கண்டுபிடிப்பதற்காக    இங்கிலாந்து அரசாங்கம்

அவர்கள் பாணியில் வழக்கம் போல கிரேஷம் என் பவரின் தலைமையில்

 க மிட்டி அமைத்தது .

அவரும் ஒரு உண்மையைக் கண்டு பிடித்தார் . கெட்ட பணம் நல்ல பணத்தை

 ஓட்டிவிடும்    
 
 மக்கள் புதிய பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு பழைய பணத்தையே

மறுபடியும் உபயோகித்த காரணத்தால் இது மாதிரி நேர்ந்ததாம் .

ஆங்கிலத்தில் "Bad money drives out the good money 

 out of circulation "என்கிறார்.

இப்போது இந்தியாவிலும் அது போலக் கெட்ட பணம்

அதாகப்பட்டது 1000, 500 ரூபாய் நோட்டுக்கள்

 நல்ல பணமான 100,50, 20,10 ரூபாய் நோட்டுக்களை எல்லாம் துரத்தி

அடித்துவிட்டது .


 இது மாதிரி 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசு  அறிக்கை

வெளி இட்ட உடனே என் வீட்டின் கீழே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரே

 கூட்டம் ,

 12 மணி வரை அந்த நோட்டுக்கள் செல்லும் என்பதால் .

 நான் பார்த்தேன்

ஆனால் போகவில்லை .

சாமான்களைத் தேவை இல்லாமல் சேர்க்க வேண்டாமென்று .

இன்று   காலை நகர் உலா சென்றேன் .

கீழே உள்ள கடையில்  வாடிக்கையாளர்களே இல்லை

. நான் மட்டும் போய் நாட்டு நடப்பைப்  பற்றி பேசிவிட்டு வந்தேன்

என்னிடம் 6 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன .

அவற்றில் ஒன்றை மெடிக்கல் ஷாப்பில் மாற்றினேன் .

அவனும் பதிலுக்கு ஒரு 500 நோட்டைக் கொடுத்தான் .

 நாளை   அல்லது மறுநாள் தான் மீதமுள்ளவைகளை மாற்றவேண்டும் .


எல்லாக் கடைகளும் காற்று வாங்குகின்றன .

தி நகரில் கூட்டமே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தான் ஷேர்ஆட்டோ
டிரைவர் .

 காலியாகவே இருந்தன எல்லா  ஷேர் ஆட்டோக்களும் ..

 இது ஒரு மாற்றமே

  நல்லதா கெட்டதா என்றெல்லாம் தெரியவில்லை .

 அந்தக் காலத்தில் ஐந்து மார்க்குக்கு  என்று படித்த   கிரேஷமின் விதி  ஐந்து

 நூற்றாண்டு தாண்டியும்  இன்றும் வாழும் நிரந்தர  விதி  ( proven   and

 established law )என்பது   மட்டும் நன்றாகத்   தெரிந்தது 

10 comments:

  1. நல்லதொரு விளக்கம் சகோ நன்று

    ReplyDelete
  2. நல்ல முறையில் முன்னேற்பாடுகளைச் செய்து இத்திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும்

    ReplyDelete
  3. என்றோ படித்த ‘கிரேஷம் விதி ( Gresham's Law)’ பற்றி, இந்தக் கால சூழலுக்கு ஏற்ப பொருத்திக் காட்டி, ஒரு ரசனையான பதிவைத் தந்திட்ட மேடத்திற்கு நன்றி. இந்த விதி பற்றி உங்கள் பதிவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.

    இந்த விதி நம்மூர் வழக்கம் ஒன்றை நினைவு படுத்தியது. அதாவது, ஒரு கட்டு புதிய வெற்றிலை வாங்கி ஒவ்வொரு நாளும் அழுகிப் போகும் வெற்றிலையையே (தூக்கி எறியாமல்) தினமும் வாயில் போட்டுக் கொண்டு இருப்பார்களாம்.

    ReplyDelete
    Replies
    1. 1972ல் படித்தது . சில தியரிகள் மறப்பதில்லை .எக்கனாமிக்ஸ் படித்திருந்தால் தெரியும்

      Delete
  4. சுவாரஸ்யமான குறிப்புகள். ஒருதினத்துக்கு இரண்டாயிரம் நான்காயிரம்தான் எடுக்க முடியும் என்பதால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எல்லா இடங்களிலும் கூட்டம் குறைவாகவே இருக்கும்!

    ReplyDelete
  5. இன்று போய் 4௦௦௦ ரூபாய்க்கு மாற்றிவிட்டேன் . 9.3௦ க்குப் போய் 9.45 க்கெல்லாம் வெளியே வந்துவிட்டேன் ,பிறகு தான் ஜே ஜேஎன்று கூட்டம் .

    ReplyDelete
  6. Gresham's law பற்றி இன்றுதான் அறிந்துகொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. துளசி: நான் மெடிக்கல் ஷாப், பெட்ரோல் பங்க் நமக்குத் தெரிஞ்ச கடை அபப்டினு முதல் வாரம் ஓட்டிட்டேன்...அப்புறம் இப்போ வித்ட்ரா பண்ணி வைச்சுக்கிட்டு...ஓடுது..

    செல்லா நோட்டுகள் வந்தப்போ நானும் இந்த விதி (இப்படி சைக்கிள் காப்லதான் நம்ம எக்கனாமிக்ஸ் ஸ்டுடன்ட் அப்படினு உதார் விட முடியும்!!) பற்றி பதிவு ஒன்னு போட்டுத் தேத்திரலாம் மோடி வாழ்க பதிவு போட ஹெல்ப் பண்ணினதுக்குனு நினைச்சு நேரம் இல்லாம இருந்தப்ப உங்க பதிவு பார்த்து பதில் போட முடியல இப்போதான் வாசித்து...ம்ம்ம் பழைய பாடத்தை எல்லாம் நினைவூட்டிவிட்டது...

    நானும் பந்திக்கு முந்திக்கோ மாதிரி நோட்டுக்கு முந்திக்கினு போய் 5 இமிஷத்துல மாத்திட்டு வந்துட்டேன். இப்ப வித்ட்ரா பண்றதும் அப்படித்தான்...அப்புறம் இருக்கவே இருக்கு கார்டு...அப்படியே சமாளிப்பு..ஸோ அப்ப வந்த ஃபங்க்ஷன் கு எல்லாம் நோ மொய்!!!

    கீதா

    ReplyDelete